அடேங்கப்பா! நாட்டின் 15,000 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ட்ரோன் கி உடான் திட்டமாம்- பிரதமர் மோடி
டெல்லி: நாட்டின் 15,000 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ட்ரோன்களை இயக்க, பழுதுபார்க்க பயிற்சி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
டெல்லி செங்கோட்டையில் 77-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசியக் கொடியேற்றிய பிரதமர் மோடி தமது உரையில் கூறியதாவது:

பயங்கரவாத தாக்குதல்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. நாட்டு மக்கள் இன்று பாதுகாப்பாக உணர்கிறார்கள்.நாடு அமைதியாகவும் பாதுகாப்பாகவும் இருக்கும்போது, வளர்ச்சியின் புதிய இலக்குகளை அடைய முடியும். ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் என்பது நம் நாட்டின் வீரர்களுக்கு மரியாதை அளிக்கும் விஷயம். நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் அதை செயல்படுத்தினோம். 70,000 கோடி ரூபாய் முன்னாள் ராணுவத்தினர் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு சென்றடைந்துள்ளது.
ஊழல்: ஊழல் என்பதுதான் நமது நாட்டின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் மூலகாரணமாக உள்ளது. ஒவ்வொரு பகுதியிலும், ஒவ்வொரு துறையிலும் ஊழலுக்கு எதிரானப் போராட்டம் என்பது காலத்தின் தேவையாகும்.

வாரிசு அரசியல்: வாரிசு அரசியல் என்பது நமது நாட்டை சீரழித்துவிட்டது. இந்த வாரிசு அமைப்பு முறை நாட்டைக் கவ்விப் பிடித்து, நாட்டு மக்களின் உரிமைகளைப் பறித்துவிட்டது. வஞ்சகத்தன்மை என்பது நாட்டின் அடிப்படை சிந்தனையை, நமது இணக்கமான தேசியப் பண்பைக் களங்கப்படுத்திவிட்டது. இத்தகையவர்கள் எல்லாவற்றையும் அழித்து விட்டனர். ஏழை மக்களாக இருந்தாலும் சரி, தலித் மக்களாக இருந்தாலும் சரி, பிற்படுத்தப்பட்டவர்களாக இருந்தாலும் சரி, இஸ்லாமியர்களில் பின்தங்கிய சமூகமாக இருந்தாலும் சரி, பழங்குடி சகோதர சகோதரிகளாக இருந்தாலும் சரி, நமது தாய்மார்களாக இருந்தாலும் சரி, சகோதரிகளாக இருந்தாலும் சரி, நாம் அனைவரும் நமது உரிமைகளுக்காக இந்த மூன்று தீமைகளில் இருந்து விடுபட வேண்டும்.
ட்ரோன் கி உடான் திட்டம்: 2 கோடி சகோதரிகளை லட்சாதிபதிகளாக்க நாட்டிலுள்ள மகளிர் சுய உதவிக் குழுக்களுடன் அரசு இணைந்து பணியாற்றி வருகிறது. நாட்டில் இன்று 10 கோடி பெண்கள் மகளிர் சுய உதவிக் குழுக்களுடன் இணைந்துள்ளனர். இன்று கிராமங்களில் ஒரு சகோதரி வங்கியிலும், ஒரு சகோதரி அங்கன்வாடியிலும் ஒரு சகோதரி மருந்துகளை விநியோகம் செய்வதையும் காணலாம். 15,000 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ட்ரோன்களை இயக்குவதற்கும் பழுதுபார்ப்பதற்கும் கடன் மற்றும் பயிற்சி வழங்கப்படும். "ட்ரோன் கி உடான்" திட்டம் இந்த மகளிர் சுய உதவிக் குழுக்களால் மேற்கொள்ளப்படும். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications