நாட்டிலேயே பெண்கள் பணி செய்ய விரும்பும் மாநிலம்.. தமிழ்நாட்டை பின்னுக்கு தள்ளிய 3 மாநிலங்கள்
டெல்லி: நாட்டில் ஆண்களுக்கு இணையாக பெண்கள், மூன்றாம் பாலினத்தவர்களை முன்னேற்ற பாதையில் அழைத்து செல்வது அரசாங்கத்தின் முதன்மையான பணியாகும். ஆனால் எல்லா அரசாங்கங்களும் அந்தப் பணியை முறையாக செய்கிறதா என்பது சந்தேகமே. இந்நிலையில் நாட்டிலேயே பெண்கள் பணிபுரிவதற்கு ஏற்ற மற்றும் பாதுகாப்பு வழங்கும் மாநிலங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. டாப் 10 பட்டியலில் தென்னிந்திய மாநிலங்கள் அதிகம் உள்ளன. ஆனால் தமிழ்நாட்டை விட தென்னிந்தியாவைச் சேர்ந்த மற்ற இரண்டு மாநிலங்கள் மற்றும் ஒரு வட இந்திய மாநிலம் முந்தி ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளன.
பாலின சமத்துவம், சமூக நீதி அதிகம் பேசினாலும் நம் சமூகத்தில் இப்போதும் ஆணாதிக்கம் இருந்து கொண்டு தான் இருக்கிறது. குடும்ப கட்டமைப்பு, பணி, பொது சமூகம் எல்லா இடங்களிலும் பெண்கள் ஏதாவது வகையில் பெண்களுக்கு தொந்தரவு இருந்து கொண்டு தான் இருக்கிறது. அதேநேரத்தில் பெண்கள் ஆண்களுக்கு இணையாகவும், ஆண்களை விடவும் பல துறைகளில் அசத்திக் கொண்டிருக்கிறார்கள்.

பாலின சமத்துவம்
கல்வி, வேலை வாய்ப்பு, தொழில் முனைவோர் எல்லாவற்றிலும் பெண்கள் முன்னேற்றம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருக்கிறது. செல்லும் துறைகளில் எல்லாம் தனித்த அடையாளங்களுடன் தனித்த அடையாளத்துடன் தடம் பதித்துக் கொண்டிருக்கிறார்கள். விளையாட்டு முதல் விஞ்ஞானம் வரை பெண்கள் பல்வேறு துறைகளில் முத்திரை பதித்து வருகிறார்கள். அங்கு பெண்களுக்கான பிரச்சனைகள், சவால்களும் இருக்கத்தான் செய்கின்றன.
பெண்கள் முன்னேற்றத்திற்கு பாதுகாப்பு மிகவும் அவசியமானது. அடிப்படை வசதிகளுடன் பெண்களின் முன்னேற்றத்திற்கு ஏற்ற சூழலை அமைத்துக் கொடுப்பது அரசு மற்றும் சமூகத்தின் கடமையாகும். அந்த கடமையை சரியாக செய்தால் மட்டுமே பெண்களின் முன்னேற்றத்தை உறுதிபடுத்தி, பாலின பேதமற்ற சமத்துவ சமூகத்தை உருவாக்க முடியும். இதற்கு பல்வேறு மாநிலங்கள் முயற்சி வருகின்றன.
டாப் 10 பட்டியல்
இந்நிலையில், நாட்டிலேயே பெண்கள் பணிபுரிவதற்கு பாதுகாப்பான மற்றும் விரும்பும் மாநிலங்களின் டாப் 10 மாநிலங்களை வீல்பாக்ஸ் என்கிற அமைப்பு அறிக்கையாக வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு வருடமும் அவர்கள் இந்த அறிக்கையை வெளியிட்டு வருகிறார்கள். 2025 ஆம் ஆண்டுக்கான பட்டியலை இந்தியா ஸ்கில்ஸ் என்கிற பெயரில் வெளியிட்டுள்ளனர். இதில் பல ஆச்சர்யங்கள் உள்ளன.
அந்த அறிக்கைப்படி, இந்தப் பட்டியலில் நாட்டிலேயே ஆந்திரா முதல் இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளது. அதற்கு அடுத்து மற்றொரு தென்னிந்திய மாநிலமான கேரளா இரண்டாம் இடத்தைப் பிடித்திருக்கிறது. தொடர்ந்து குஜராத் மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளது. இந்தப் பட்டியலில் நம் தமிழ்நாடு நான்காம் இடத்தில் இருக்கிறது. மகாராஷ்டிரா ஐந்து, டெல்லி ஆறு, உத்தர பிரதேசம் ஏழு, கர்நாடகா எட்டு, மத்தியப்பிரதேசம் ஒன்பது , ஹரியானா பத்தாம் இடத்தில் உள்ளன.
அறிக்கை
பணியிடங்களில் பெண்களின் பாதுகாப்பு மற்றும் அவர்களின் தேவைகள் பூர்த்தி அடைகிறதா என்ற அடிப்படையில் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இந்த அறிக்கை சம்பந்தப்பட்ட மாநிலங்களின் சமூக மற்றும் பொருளாதாரத்தில் ஏற்படுத்திய தாக்கத்தையும் விளக்கியுள்ளது. பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதன் மூலம் நாட்டில் ஏராளமான மாற்றங்கள் ஏற்படும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் இல்லாத மாநிலங்களில் பெண்கள் முன்னேற்றம், பாலின சமத்துவத்திற்கு இன்னும் அதிக முயற்சிகள் எடுக்க வேண்டும்.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications