ராணுவத்திற்கான என்டிஏ நுழைவு தேர்வை பெண்களும் எழுத அனுமதி.. உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவு
டெல்லி: தேசிய பாதுகாப்பு அகாடமி என்டிஏ ( National Defence Academy) நுழைவு தேர்வை பெண்களும் எழுத அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.
தேசிய பாதுகாப்பு அகாடமி அமைப்பான என்டிஏவில் சேர்வதற்கான நுழைவு தேர்வில் பெண்கள் கலந்து கொள்ள மத்திய அரசு அனுமதி மறுத்துள்ளது. இந்த தேர்வு ஆண்களுக்கு மட்டும் என்று பாதுகாப்பு துறை அமைச்சகம் தெரிவித்து இருந்தது. இதனால் இங்கு ஆண்கள் மட்டுமே படிக்க முடியும். மத்திய அரசு இதை பாதுகாப்பு அமைச்சகத்தின் கொள்கை முடிவு இது என்று தெரிவித்துள்ளது.
இதையடுத்து மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் இந்த முடிவிற்கு எதிராக குஷ் கால்ரா என்பவர் பொது நல வழக்கு தொடுத்து இருந்தார். என்டிஏ தேர்வில் பெண்களுக்கும் அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து மனுதாக்கல் செய்து இருந்தார். அதோடு இது சம உரிமைக்கு எதிரானது, பெண்களுக்கான உரிமையை இது மறுக்கிறது, பெண் ராணுவ அதிகாரிகளுக்கு எதிரானது உத்தரவு இது, பெண்களுக்கான வாய்ப்பை மறுக்கும் வகையில் விதிமுறை கொண்டு வரப்பட்டுள்ளது என்றும் இவர் மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.

வழக்கு
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சய் கிஷான் கவுல், ஹரிஷ்கேஷ் ராய் ஆகியோர் அமர்வு முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இதில் பாதுகாப்புத்துறை அமைச்சகம் சார்பாக இதில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதில் ராணுவத்தில் சேர்வதற்கு நிறைய வழிகள் இருக்கிறது. அதில் ஒரு வழிதான் தேசிய பாதுகாப்புஅகாடமி என்டிஏ

விசாரணை
ஆனால் அது மட்டுமே ராணுவத்தில் சேரும் வழி கிடையாது. ராணுவத்தில் சராசரியாக சேர்க்கப்படும் 1470 அதிகாரிகளில் 670 பேர் இந்திய ராணுவ அகாடமி மற்றும் என்டிஏ மூலம் சேர்க்கப்படுகிறார்கள். மற்றவர்கள் ஆபிசர் பயிற்சி அகாடமி மூலம் சேர்க்கப்படுகிறார்கள். இதில் யுபிஎஸ்சி, நான்-யுபிஎஸ்சி தேர்வு முறைகள் உள்ளன. இது போக எஸ்எஸ்சி தேர்வு முறைகள் மூலம் 453 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இப்படி ராணுவ வீரர், வீராங்கனைகளை தேர்வு செய்ய பல வழிகள் உள்ளன.

விளக்கம்
அதோடு என்டிஏ தேர்வில் ஆண்களை மட்டும் அனுமதிப்பதால் அவர்களுக்கு கூடுதல் வாய்ப்புகள் எதுவும் ராணுவத்தில் அவர்கள் இணையும் போது வழங்கப்படாது. பணியில் அவர்களுக்கு இதனால் வேகமான முன்னேற்றம் அல்லது பணி உயர்வு வழங்கப்படாது. மற்ற முறைகளில் தேர்வாகி வரும் வீரர், வீராங்கனைகளுக்கு வழங்கப்படும் அதே வாய்ப்புகள்தான் இவர்களுக்கும் வழங்கப்படும், அதனால் இது அடிப்படை உரிமை மீறல் கிடையாது என்று மத்திய பாதுகாப்பு துறை சார்பாக தாக்கல் செய்யப்பட்ட பிரமாண பத்திரத்தில் குறிப்பிடப்பட்டது.

உத்தரவு
ஆனால் உச்ச நீதிமன்றம் இந்த விளக்கத்தை ஏற்கவில்லை. உங்களின் இந்த கொள்கை முடிவு பாலின சமத்துவத்திற்கு எதிரானது. இந்திய சட்ட விதி 14, 15, 16 மற்றும் 19க்கு எதிரானது. பெண்களுக்கான சம உரிமையை இது மாறுகிறது. அதனால் தேசிய பாதுகாப்பு அகாடமி என்டிஏ ( National Defence Academy) நுழைவு தேர்வை பெண்களும் எழுத அனுமதி அளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது. இதில் இடைக்கால உத்தரவுதான் வழக்கு விசாரணை முழுமையாக முடிந்த பின் இறுதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications