பிரிஜ் பூஷண் சரண் சிங்குடன் மல்யுத்த வீராங்கனைகள் சமரசம்? வேகமாக பரவும் தகவல்.. உண்மை என்ன?
டெல்லி: இந்திய மல்யுத்த சம்மேளன தலைவராக உள்ள பாஜக எம்பி பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது பாலியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் மல்யுத்த வீராங்கனைகள் அவருடன் சமரசம் செய்ய சென்றதாக வேகமாக தகவல் பரவியது. இந்நிலையில் தான் இது உண்மையா? இல்லையா? என்பது பற்றிய பரபர தகவல் வெளியாகி உள்ளது.
இந்திய மல்யுத்த சம்மேளன தலைவராக பிரிஜ் பூஷண் சரண் சிங் உள்ளார். பாஜக எம்பியான இவர் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது. உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து டெல்லி போலீசார் பிரிஜ் சரண் சிங் மீது போக்சோ உள்பட 2 வழக்குகள் பதிவு செய்துள்ளன.

இருப்பினும் அவர் இன்னும் கைது செய்யப்படவில்லை. இதனால் கைது நடவடிக்கை கோரி தொடர்ந்து மல்யுத்த வீரர், வீராங்கனைகள் டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர்ந்து போராட்டம் நடத்தினர். மேலும் புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவின்பாது அங்கு பேரணியாக செல்ல முயன்றவர்களை போலீசார் தரதரவென இழுத்து கைது செய்தனர்.
இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. டெல்லி மகளிர் ஆணையமும் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. பிரிஜ் பூஷண் சரண் சிங்கை கைது செய்துவிட்டு, மல்யுத்த வீராங்கனைகள் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் என மகளிர் ஆணையம் தெரிவித்தது. மேலும் இந்த விவகாரத்தில் இன்னும் கைது நடவடிக்கை எடுக்காத டெல்லி போலீசார் மற்றும் மத்திய அரசை எதிர்க்கட்சி தலைவர்கள் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகின்றனர்.
இதற்கிடையே தான் 2 நாட்களுக்கு மத்திய விளையாட்டு துறை அமைச்சர் அனுராக் தாகூரை மல்யுத்த வீரர், வீராங்கனைகள் சந்தித்து பேசினர். இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து வரும் 15ம் தேதி வரை போராட்டத்தை தற்காலிகமாக வீரர், வீராங்கனைகள் ஒத்திவைத்துள்ளனர். இதுபற்றி அனுராக் தாகூர் கூறுகையில், ‛‛வரும் 15ம் தேதிக்குள் பிரிஜ் பூஷண் சரண் சிங் மீதான குற்றச்சாட்டுகள் பற்றி விசாரித்து முடிக்கப்படும். நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும். வரும் 30ம் தேதிக்குள் இந்திய மல்யுத்த சம்மேளன தேர்தல் நடத்தப்படும்'' என்றார். இதற்கிடையே தான் டெல்லி போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
இதற்கிடையே தான் இன்று சில மீடியாக்களில் பிரிஜ் பூஷண் சரண் சிங்கை சந்தித்து மல்யுத்த வீரர், வீராங்னைகள் சமரசம் பேச சென்றதாக தகவல்கள் பரப்பி விடப்பட்டன. இதற்கு மல்யுத்த வீராங்கனை வினீஷ் போகத் கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு அதிருப்தியை வெளிப்படுத்தி இருந்தார். இதுபற்றி வினீஷ் போகத் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்தியில் விமர்சனம் செய்துள்ளார்.
இதுபற்றி அவர் ‛‛பிரிஜ் பூஷண் சரண் சிங்கின் பலம் இதுதான். அவர் தனது அரசியல் பலத்தை பயன்படுத்தி பொய்யான கதைகளை கிளப்பி பெண் மல்யுத்த வீரர்களை துன்புறுத்துகிறார். அவர் கைது செய்யப்பட வேண்டும். எங்களை கலைப்பதற்கு பதில் அவரை போலீசார் கைது செய்தால் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. பெண் மல்யுத்த வீராங்கனையை காவல்துறையினர் விசாரணைக்காக குற்றம் நடந்த இடத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால் உண்மைக்கு புறம்பாக சமரசத்திற்கு சென்றதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி இருக்கிறது'' என சாடியிருந்தார்.
அதேபோல் போராட்டத்தை முன்னெடுத்த மல்யுத்த வீரரான பஜ்ரங் புனியாவும் தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளார். இதுபற்றி அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‛‛அவுட்கோயிங்' இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும், பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷண் சரண் சிங் மீதான பாலியல் தொல்லை குற்றச்சாட்டு பற்றி டெல்லி சிறப்பு விசாரைண குழுவினர் விசாரித்து வுருகின்றன்ர. அவர் மீதான 2 வழக்குகளில் போலீசார் அடுத்த வாரம் நீதிமன்றத்தில் அறிக்கை (குற்றப்பத்திரிகை) தாக்கல் செய்ய உள்ளனர்' என தெரிவித்துள்ளார். இதன்மூலம் தாங்கள் சமரசம் செய்ய முயன்ற விஷயத்தை முற்றிலுமாக மறுத்துள்ளார்.
முன்னதாக பிரிஜ் பூஷண் சரண் சிங் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படும் மல்யுத்த வீராங்கனையை இன்று டெல்லி போலீசார் அவரது அலுவலக இல்லத்துக்கு அழைத்து சென்றனர். அப்போது பெண் போலீசார் உடன் சென்றனர். சம்பவ நாளில் நடந்தது என்ன? என்பது பற்றி போலீசாரிடம் அந்த வீராங்னை நடித்து காட்டினார். இதன்மூலம் முக்கிய தகவல்களை டெல்லி போலீசார் பெற்றனர். இதற்காக மல்யுத்த வீராங்கனைகள் பிரிஜ் பூஷண் சரண் சிங் வீட்டுக்கு சென்ற நிலையில் தான் சமரசம் செய்ய சென்றதாக தகவல்கள் பரப்பி விடப்பட்டன.
இதுபற்றி போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‛‛பிரிஜ் பூஷண் சரண் சிங்கின் அலுவலக இல்லத்தில் 30 நிமிடம் ஆய்வு நடந்தது. அப்போது சம்பவம் நடந்தது எப்படி என்பது பற்றி பாதிக்கப்பட்ட பெண் நடித்து காண்பித்தார். இது வழக்கமான நடைமுறை தான்'' என்றார். இதன்மூலம் பிரிஜ் பூஷண் சரண் சிங் வழக்கு முக்கிய கட்டத்தை எட்டி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்! -
ஹார்முஸில் வழிந்தோடும் ‘ரத்தம்’? பீதியில் உலக நாடுகள்.. கண்ணி வெடிகள் வேற குவிந்து கிடக்குதே












Click it and Unblock the Notifications