வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ100 குறைப்பு- மகளிர் தினத்தில் மோடி மாஸ் அறிவிப்பு!
டெல்லி: வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ100 குறைக்கப்படும் என பிரதமர் மோடி அதிரடியாக அறிவித்துள்ளார். மகளிர் தினத்தை முன்னிட்டு இந்த அறிவிப்பை பிரதமர் மோடி வெளியிட்டுள்ளார். கடந்த ஆண்டு ரக்சா பந்தன் பண்டிகையை முன்னிட்டு வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ200 குறைக்கப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்திருந்தார்.
18-வது லோக்சபா தேர்தல் தேதி எந்த நேரத்திலும் வெளியாகக் கூடும் என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது. லோக்சபா தேர்தலை எதிர்கொள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர பிரசாரத்தையும் தொடங்கிவிட்டன. பாஜக உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று மகளிர் தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி தமது சமூக வலைதளப் பக்கங்களில் அதிரடியான ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில், வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை ரூ100 குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் பல லட்சக்கணக்கான பெண்களின் நிதிச் சுமை குறையும் என தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ200 குறைக்கப்பட்டது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் 30-ந் தேதி முதல் இது அமலுக்கு வந்தது. ரக்சா பந்தன் தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி இந்த அறிவிப்பை வெளியிட்டிருந்தார். அப்போது பிரதமர் மோடி வெளியிட்ட அறிவிப்பில், ரக்சா பந்தன் பண்டிகையை முன்னிட்டு நாட்டின் கோடிக்கணக்கான சகோதரிகளுக்கு இது ஒரு பரிசு. மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும், ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பயனடையவும் அரசு எப்போதும் முடிந்த அனைத்தையும் செய்யும் என கூறியிருந்தார். இதனைத் தொடர்ந்து தற்போது மகளிர் தினத்தை முன்னிட்டு வீட்டு உபயோக சிலிண்டர் விலை மேலும் ரூ100 குறைப்பு என அறிவித்துள்ளார் பிரதமர் மோடி.

ஆனால் இது அப்பட்டமான தேர்தல் நாடகம்; சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை குறைக்க வேண்டும் என பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன. எத்தனையோ முறை கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. 9 ஆண்டுகளாக மகளிர் தினமும் வந்துதான் போகிறது. தற்போது லோக்சபா தேர்தல் வந்துவிட்டதால் திடீரென வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ100 குறைக்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்து நாடகமாடுகிறார் என எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications