Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

2029ல் வாய்ப்பில்லை..2039ல் தான் மகளிர் இடஒதுக்கீடு அமலுக்கு வருமாமே! இவ்வளவு நாள் ஏன்? புதுக்குண்டு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நாடாளுமன்றம், சட்டசபை தேர்தல்களில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதா மீதான விவாதம் லோக்சபாவில் நடந்து வருகிறது. இது தற்போது நிறைவேற்றப்பட்டாலும் கூட 2029 அல்ல 2039 தான் அமல்படுத்தப்படும் என்ற புதுக்குண்டை ஒருவர் போட்டுள்ளதோடு, அதற்கான விளக்கத்தை யோகேந்திர யாதவ் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் நீண்ட நாட்களாக சட்டசபை, நாடாளுமன்றங்களில் பெண்களுக்கான இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை இருந்து வருகிறது. ஆனால் இந்த கோரிக்கை என்பது பல ஆண்டுகளாக நிறைவேற்றப்படாத நிலையில் தான் இருக்கிறது.

Womens reservation Bill: Not implement in 2029 and it may not happen till 2039, says Yogendra Yadav

முதல் முதலாக பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு மசோதா கடந்த 1996ல் அப்போதைய பிரதமர் தேவேகவுடா தலைமையிலான அரசு கொண்டு வந்தது. ஆனால் நிறைவேற்ற முடியவில்லை. அதன்பிறகு வாஜ்பாய், மன்மோகன் சிங் உள்ளிட்டவர்கள் பிரதமராக இருந்தபோதும் இதனை அமல்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.

இந்நிலையில் தான் 33 சதவீத மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவுக்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு நேற்று முன்தினம் ஒப்புதல் வழங்கியது. இதையடுத்து நேற்று லோக்சபாவில் மத்திய சட்டத்துறை மந்திரி அர்ஜூன்ராம் மெஹ்வால் மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டு மசோதாவை தாக்கல் செய்தார். இதையடுத்து இன்று விவாதம் நடந்து வருகிறது.

இத்தகைய சூழலில் தான் தற்போதைய நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டாலும் உடனடியாக அமலுக்கு வராது என கூறப்படுகிறது. அதாவது மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் தொகுதி மறுவரையறைக்கு பிறகு தான் இந்த இடஒதுக்கீடு மசோதாவை செயல்பாட்டு கொண்டு வரும் வகையில் ஷரத்துகள் உள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் மகளிருக்கான இந்த 33 சதவீத இடஒதுக்கீடு என்பது 2024 நாடாளுமன்ற தேர்தலில் அமலுக்கு வராது. 2029 நாடாளுமன்ற தேர்தலில் செயல்பாட்டு கொண்டு வரலாம் என தகவல் வெளியானது. இத்தகைய சூழலில் தான்ஸ்வராஜ் இந்தியா கட்சியை சேர்ந்தவரும், அரசியல் ஆர்வலருமான யோகேந்திர யாதவ் மகளிர் இடஒதுக்கீடு அமலுக்கு வரும் ஆண்டு குறித்து புதுகுண்டை தூக்கி போட்டுள்ளார்.

அதாவது தற்போதைய நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீடு என்பது 2029 ல் நடைமுறைக்கு வராது. மாறாக 2039 ல் தான் அமலுக்கு வரும் எனக்கூறியுள்ளதோடு அதற்கான காரணத்தையும் அவர் விளக்கி உள்ளார். இதுகுறித்து யோகேந்திர யாதவ் தனது எக்ஸ்(முன்பு ட்விட்டர்) பக்கத்தில் கூறியுள்ளதாவது:

மகளிர் இடஒதுக்கீடு என்பது 2029ல் அமலுக்கு வரும் என ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இது தவறானது. உண்மையில் மகளிர் இடஒதுக்கீடு என்பது 2039 வரை நடக்காது. ஏனென்றால் ஊடக தகவல்களில் எல்லை நிர்ணய விதியின் உண்மையான கூற்று பற்றி தெளிவுப்படுத்தவில்லை. 2001ல் திருத்தப்பட்ட பிரிவு 82ன்படி பார்த்தால் மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை என்பது 2026ம் ஆண்டுக்கு பிறகு தான் செயல்படுத்தப்படும் என சொல்லப்பட்டுள்ளது. அப்படி பார்த்தால் 2031ல் தான் அது முடியும்.

ஏனென்றால் தொகுதி மறுவரைக்கான எல்லை நிர்ணய ஆணையம் என்பது அதன் இறுதி அறிக்கையை வழங்க 3 முதல் 4 ஆண்டுகள் எடுத்து கொள்ளலாம். இதற்கு முன்பு 5 ஆண்டுகள் வரை காலஅவகாசம் எடுத்து கொண்டுள்ளது. இதற்கு மக்கள்தொகை விகிதாச்சாரங்களை கருத்தில் கொண்டு மறுவரையறை செய்யும்போது எழும் சர்ச்சைகள் தான் முக்கிய காரணமாக இருக்கும்.

இதனால் 2037 அல்லது அதற்கு பிறகு தான் தொகுதி மறுவரையறைக்கான இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட வாய்ப்புள்ளது. அப்படிப்பார்த்தால் மகளிர் இடஒதுக்கீடு என்பது 2039ல் மட்டுமே செயல்பாட்டுக்கு கொண்டு வர முடியும்'' என தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+