ஸ்டெர்லைட்டை திறக்க ஒருபோதும் அனுமதி கிடையாது.. தமிழக அரசு ஒரே போடு.. உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு
டெல்லி: பராமரிப்பு பணி உள்ளிட்ட எந்த பணிகளுக்காகவும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க முடியாது என்று தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் கூறியுள்ளது. இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடியில் கடும் எதிர்ப்பிற்கு இடையில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலை கடந்த மே 28-ம் தேதி தமிழக அரசால் மூடப்பட்டது. இதை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம், வழக்கு தொடுத்தது. உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடந்து வருகிறது.
இந்த வழக்கு மீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் வந்தது. இதில் தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடுமையான வாதங்களை வைத்தது.

கோரிக்கை
இன்று நடந்த விசாரணையில் பராமரிப்பு பணிக்காக ஆலையை திறக்க அனுமதிக்க வேண்டும் என்று ஸ்டெர்லைட் நிறுவனம் கோரிக்கை வைத்தது. ஸ்டெர்லைட் ஆலை பல மாதங்களாக திறக்கப்படவில்லை. இதனால் நிறைய பராமரிப்பு பணிகளை செய்ய வேண்டும், அதனால் ஆலையை திறக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

கொள்கை முடிவு
இதற்கு பதில் அளித்த தமிழக அரசு, ஸ்டெர்லைட் ஆலையை திறக்க எக்காரணம் கொண்டும் அனுமதிக்க முடியாது. இந்த ஆலை காற்று மாசை ஏற்படுத்துகிறது. சுற்றுசூழலுக்கு இந்த ஆலை கேடு விளைவிக்கிறது. அதனால் இதை இயங்க அனுமதிக்க முடியாது.

முடியாது
இதில் தமிழக அரசின் கொள்கை முடிவு. இதற்கு முன் தமிழக அரசு வைத்த பதில் மனு மற்றும் கோரிக்கைகளில் இதை தெளிவாக குறிப்பிட்டு இருக்கிறோம். இதனால் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்கவே முடியாது என்று தமிழக அரசு கூறியுள்ளது.

உத்தரவு
தமிழக அரசின் வாதத்தை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க முடியாது. பராமரிப்பு பணிக்காகவும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்!












Click it and Unblock the Notifications