”தேசத்துக்காக கதர்” ஆனால் தேசியக் கொடிக்கு சீன பாலியஸ்டர்.. ராகுல் காந்தி கிண்டல்!
டெல்லி: மேட் இன் சைனா என்று இந்திய தேசியக் கொடியில் எழுதப்பட்டிருந்த விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடியை காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கிண்டல் செய்துள்ளார்.
அண்மையில் முடிந்த சுதந்திர தினத்திற்காக நாடு முழுவதும் உள்ள மக்கள் தங்களது வீடுகளில் தேசியக் கொடி ஏற்ற வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார். இதனைத் தொடர்ந்து பாஜக தரப்பில் வீடு தோறும் தேசியக் கொடி வழங்கப்பட்டது.
அதுமட்டுமல்லாமல் மக்களுக்கு மத்தியில் சுதந்திர தினத்தன்று நாட்டுப் பற்று ஏற்படுத்துவோம் என்று பாஜக தரப்பில் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

சபாநாயகர்கள் மாநாடு
இந்த நிலையில் கனடாவில் ஹாலிபேக்ஸ் நகரில் 65வது சபாநாயகர்களுக்கான காமன்வெல்த் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பல்வேறு நாடுகளின், மாநிலங்களின் சபாநாயகர்கள் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் இந்தியா சார்பில் லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லா தலைமையில் மாநில சபாநாயகர்கள் கலந்துகொண்டனர். தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு இந்த மாநாட்டில் பங்கேற்றார்.

மேட் இன் சைனா
இந்த காமன்வெல்த் மாநாடு நடைபெற்ற வளாகத்திற்கு லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லா தலைமையில் சபாநாயகர்கள் தங்களது கைகளில் தேசியக் கொடி ஏந்திய வண்ணம் பேரணியாக வந்தனர். அந்த தேசியக்கொடிகளில் 'மேட் இன் சைனா' என எழுதப்பட்டிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கண்டனம்
அதுமட்டுமல்லாமல் இந்திய தேசியக் கொடியில், 100 சதவிகிதம் பாலியஸ்டர் என்ற வாசகத்திற்குக் கீழ், மேட் இன் சைனா என்றும் ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவின் தேசியக்கொடியை சீனாவில் தயாரித்துப் பெற்றிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் தேசியக் கொடியை சீனாவில் வாங்கி பயன்படுத்துவதா? உலக நாடுகள் மத்தியில் இந்தியாவுக்கு தலைகுனிவு ஏற்பட்டுள்ளது என பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

ராகுல் காந்தி கருத்து
இதுமட்டுமல்லாமல் சீனாவில் தயாரிக்கப்பட்ட இந்தியாவின் தேசியக்கொடி பயன்படுத்தப்பட்டதால் அதிர்ச்சியடைந்த சபாநாயகர்கள், லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லாவிடம் முறையிட்டனர். இது நாடு முழுவதும் விவாதப் பொருளாகியுள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார்.

ராகுல் காந்தி கிண்டல்
அதில், தேசத்துக்காக கதர். ஆனால் தேசியக் கொடிக்கு சீனா பாலியஸ்டர். வழக்கம் போல், பிரதமர் நரேந்திர மோடியின் வார்த்தைகளுக்கும் செயல்களுக்கும் ஒருபோதும் சம்மந்தமில்லை என்று கிண்டல் செய்துள்ளார்.
-
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
"அந்த" 54 தொகுதிகள் தான் மேஜிக்.. மம்தாவை காலி செய்ய சக்கர வியூகம்.. இறங்கி அடிக்கும் பாஜக! -
TN Election: 1-ல்தான் பாஜக ஜெயிக்குமா? திமுக 180-ஆ? டெல்லியை அதிர வைத்த ANS அதிர்ச்சி சர்வே! -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
Sonia Gandhi: சோனியா காந்தி மருத்துவமனையில் திடீர் அனுமதி.. ஹாஸ்பிடலுக்கு விரைந்த ராகுல், பிரியங்கா! -
ராகுல் சொல்லியும் அடங்கலையே! கூட்டணிக்குள் குண்டு வைக்கும் மாணிக்கம் தாகூர்! -
பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் இவை தானா? கொங்கு & தென் மண்டலம் டார்கெட்! -
திமுகவையே ஓவர்டேக் செய்த எடப்பாடி.. அதிமுக – பாஜக தொகுதி பங்கீட்டில் இப்படி நடந்ததே இல்லை! பின்னணி -
Election Commission: தேர்தல் ஆணைய கடிதத்தில் பாஜகவின் முத்திரை.. கேரள அரசியல் கட்சிகள் அதிர்ச்சி.. நடந்தது என்ன? -
அவிநாசி அல்லது மேட்டுப்பாளையம்.. 2ல் ஒரு தொகுதியில் போட்டியிடும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன்? -
பாமக வரலாற்றிலேயே முதல் முறையாக.. 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைவான தொகுதிகளில் போட்டி! -
“காருக்குள் வைத்து தவறாக நடக்க முயற்சி”.. பாஜக முக்கிய நிர்வாகி மீது மகளிரணி தலைவி பரபரப்பு புகார்












Click it and Unblock the Notifications