WFH கட்டுப்பாட்டை நீக்கிய அரசு.. வீட்டிலிருந்து வேலை பார்ப்பது நிரந்தரமாகிறதா? ஐடி துறை வரவேற்பு
டெல்லி: வீட்டிலிருந்து பணியாற்றுவதற்கான விதிமுறைகளில் மத்திய அரசு தளர்வு கொண்டு வந்துள்ளது. இதற்கு தகவல் தொழில்நுட்பத்துறை பாராட்டுகளை தெரிவித்து உள்ளது.
கொரோனா நோய் பரவல் காரணமாக பல்வேறு நிறுவனங்களும், வீட்டிலிருந்து பணியாற்றுவதற்கான ஒர்க் பிரம் ஹோம் வசதியை ஊழியர்களுக்கு கொடுத்தன.
ஆனால் இதில் நிறுவனங்களுக்கு சில சிக்கல்கள் இருக்கின்றன. நிலையான ஐபிகளுக்கான வங்கி கேரண்டி, தகவல் பதிவு உள்ளிட்ட பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் நிறுவனங்களுக்கு உள்ளன. ஆனால் இவை நீக்கப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி நேற்று அறிவித்து இருந்தார்.

பிரதமர் தகவல்
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், இந்தியாவை தொழில் துவங்குவதற்கு ஏற்ற நாடாக மாற்றும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக தகவல் தொடர்புத் துறையின் பிற சேவை வழங்கும் விதிமுறைகள் எளிதாக்கப் பட்டுள்ளன. இந்தியாவின் ஐடி துறை நமது பெருமிதம் ஆகும். ஐடி துறையின் பங்களிப்பு உலக நாடுகளால் பாராட்டப்படுகிறது. எனவே இந்தத் துறை சுமுகமாக வளர்வதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு அரசு தயாராக இருக்கிறது. இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்திருந்தார்.

அனுமதிகள் நீக்கம்
மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் இதுபற்றி கூறுகையில், வீட்டில் இருந்து பணி செய்வதற்கு தேவைப்படும் பல்வேறு அனுமதிகள் மற்றும் செயல் முறைகளை அரசு நீக்கிவிட்டது. எனவே வீட்டில் இருந்து வேலை பார்ப்பது அல்லது எங்கிருந்து வேண்டுமானாலும் வேலை பார்ப்பது இனிமேல் எளிதாகி விடும் என்று தெரிவித்திருந்தார்.

நிறுவனங்களுக்கு வசதி
மத்திய அரசின் இந்த விதிமுறை தளர்வு காரணமாக, வீட்டில் இருந்து பணியாற்றுவது, கொரோனா நோய் பரவல் முடிந்ததற்கு பிறகும் பல நிறுவனங்களால் முன்னெடுக்கப்படும் வாய்ப்பு இருக்கிறது. அலுவலக செலவினம் உள்ளிட்டவை குறையும், வாகனப் போக்குவரத்து மற்றும் அவற்றுக்கான ஏற்பாடுகள் உள்ளிட்டவற்றில் உள்ள சிரமங்கள் குறையும் என்பதால் ஐடி நிறுவனங்கள் எங்கிருந்து வேண்டுமானாலும் தனது ஊழியர்கள் வேலை பார்க்கலாம் என்ற விதிமுறையை நிரந்தரமாக கொண்டு வர வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள் இந்த துறை வல்லுனர்கள். அதேநேரம் ஊழியர்களுக்கு இது உடல் மற்றும் மனரீதியான அழுத்தத்தை கொடுக்கும் என்பது மருத்துவர்கள் பார்வையாக இருக்கிறது. குழு மனப்பான்மை கூண்டோடு காலியாகிவிடும் என்ற அச்சமும் உள்ளது.

விப்ரோ வரவேற்பு
விப்ரோ தலைவர் ரிஷாத் பிரேம்ஜி இதுபற்றி கூறுகையில், இது உண்மையிலேயே நீண்ட காலத்திற்கு பயனளிக்கக் கூடிய ஒரு முற்போக்கான சிந்தனையாகும். தொழில்நுட்பத் துறையை போட்டியில் இருக்கச் செய்யும் நடவடிக்கை இதுவாகும். எங்கிருந்து வேண்டுமானாலும் வேலை பார்க்கலாம் என்பது இப்போது யதார்த்தம் ஆகிவிட்டது என்று தெரிவித்தார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications