உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 60,58,59,798; ஜப்பானில் கோரத் தாண்டவம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: உலக நாடுகளில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 60 கோடியை தாண்டியுள்ளது; ஜப்பானில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,72,865; ஒரே நாளில் ஜப்பானில் 248 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

2019-ம் ஆண்டில் உலக நாடுகளை ஆட்டிப் படைக்கத் தொடங்கிய கொரோனா பாதிப்பு 3 ஆண்டுகளாக தொடர்ந்து கொண்டே இருக்கிறது. தற்போதைய நிலையில் உலகின் பல நாடுகளிலும் கொரோனா பாதிப்பு நீடித்து வருகிறது.

World Coronavirus cases cross 60 Crores

உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு மொத்த எண்ணிக்கையானது 60 கோடியை தாண்டியுள்ளது. அதாவது உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 60,58,59,798 ஆகும். உலக நாடுகளில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 64,88,072. அதே நேரத்தில்
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 58,12,40,700.

உலக நாடுகளில் ஜப்பானில் ஒருநாள் கொரோனா பாதிப்பு அதிகமாக இருக்கிறது. ஜப்பானில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 172,865 ஆகவும் ஒருநாள் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 248ஆகவும் பதிவாகி இருக்கிறது.

ஜப்பானுக்கு அடுத்ததாக தென்கொரியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 85,295. இங்கு ஒருநாள் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 70. தென்கொரியாவை தொடர்ந்து ரஷ்யாவில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. ரஷ்யாவில் ஒருநாள் பாதிப்பு எண்ணிக்கை 46,857 ஆகவும் ஒருநாள் கொரோனா உயிரிழப்புகள் எண்ணிக்கை 83 ஆகவும் உள்ளது.

இந்தியாவில் நேற்று காலையுடனான 24 மணி நேரத்தில் கொரோனா சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 86,591; இது கொவிட் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 0.19 சதவீதமாக உள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் விகிதம் தற்போது 98.62 சதவீதம் . நேற்று காலையுடனான 24 மணி நேரத்தில் 9,999 பேர் குணமடைந்துள்ளனர். இந்தியாவில் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 4,37,93,787 என அதிகரித்துள்ளது. இந்தியாவில் நேற்று காலையுடனான 24 மணி நேரத்தில் 9,436 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டது. தேசிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் இந்தியாவில் 211.66 கோடி 94.18 கோடி 2-வது தவணை மற்றும் 15.20 கோடி முன்னெச்சரிக்கை தவணை) தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+