உலக நாடுகளில் கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 6.47 கோடி
டெல்லி: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் மொத்த எண்ணிக்கை 6,47,91,729 ஆக அதிகரித்துள்ளது.
உலக நாடுகளில் கொரோனா பரவலைத் தடுக்க தடுப்பூசி போடும் நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன. இன்னொருபுறம் கொரோனா பாதிப்பும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

அமெரிக்காவில் ஒரே நாளில் 2,06,259 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,29,10,140 ஆக உயர்ந்துள்ளது. அமெரிக்காவில் மொத்த கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 3,83,242 ஆகும்.
அமெரிக்காவை தொடர்ந்து மொத்த கொரோனா பாதிப்பில் இந்தியா 2-வது இடத்தில் உள்ளது. ஆனால் ஒருநாள் கொரோனா பாதிப்பில் உருமாறிய கொரோனா வைரஸ் தாக்கம் அதிகம் உள்ள இங்கிலாந்துதான் 2-வது இடம். இங்கிலாந்தில் ஒருநாளில் 54,940 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
பிரேசிலில் 29,792, ரஷ்யாவில் 22,851, இத்தாலியில் 18,627, தென்னாப்பிரிக்காவில் 17,421, மெக்சிகோவில் 16,105 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.
இந்தியாவில் ஞாயிற்றுக்கிழமையன்று 16,085 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இந்தியாவில் ஒருநாள் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 150 என குறைந்துள்ளது.












Click it and Unblock the Notifications