உலகம் முழுவதும் கொரோனாவிற்கு 8 கோடி பேர் பாதிப்பு - 17.56 லட்சம் பேர் மரணம்

உலகம் முழுவதும் கொரோனா தொற்றினால் 8,01,91,630பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: கொரோனா தொற்றினால் உலகம் முழுவதும் 8,01,91,630பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து 5,61,09,175 பேர் குணமடைந்துள்ளனர். உலகம் முழுவதும் ஒரே நாளில் 4,69,232 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

கடந்த ஓராண்டு காலமாக உலக மக்களை ஆட்டிப்படைத்து வருகிறது கண்ணுக்குத் தெரியாத கொரோனா வைரஸ் கிருமி. உலகம் முழுவதும் 8 கோடி பேரை தொட்டுள்ளது. கொரோனா பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் இந்தியாவும் மூன்றாவது இடத்தில் பிரேசில் நாடும் உள்ளது.

World covid 19 update: 8 crore people worldwide affected by corona 17.56 lakh died

அமெரிக்காவில் கொரோனாவிற்கு 1,92,09,302 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரே நாளில் கொரோனாவிற்கு பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 97,976 ஆக குறைந்துள்ளது. ஒரே நாளில் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் கொரோனா தொற்று குறைந்துள்ளது சற்றே ஆறுதலை தருகிறது. கொரோனாவில் இருந்து அமெரிக்காவில் 1,12,57,588 பேர் மீண்டுள்ளனர் 7,61,3,451 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பிரேசில் நாட்டில் கொரோனாவிற்கு 7,44,8,560 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு ஒரே நாளில் 22,967 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 1,90,515 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு மரணமடைந்துள்ளனர். கொரோனாவில் இருந்து 64,59,335 பேர் மீண்டு வீடு திரும்பியுள்ளனர். 798,710 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உலகம் முழுவதும் கொரோனாவிற்கு 1,75,6,884 பேர் மரணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் 8,313 பேர் மரணமடைந்துள்ளனர். மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 10ஆயிரத்திற்கும் கீழே குறைந்தது. அமெரிக்காவில் 24 மணி நேரத்தில் 1,197 பேர் கொரோனாவிற்கு உயிரிழந்துள்ளனர். பிரேசில் நாட்டில் கொரோனாவிற்கு 483 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கொரோனாவிற்கு 251 பேர் மரணமடைந்துள்ளனர். உருமாறிய கொரோனா பரவி வரும் பிரிட்டன் நாட்டில் 570 பேர் கொரோனா தொற்றினால் மரணமடைந்துள்ளனர். இத்தாலி நாட்டில் 459 பேர் கொரோனா தொற்றினால் மரணமடைந்துள்ளனர்.

கொரோனாவிற்கு தடுப்பூசி கண்டுபிடிக்க உலக நாடுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 2021ஆம் ஆண்டில் இருந்து தடுப்பூசி பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய உருமாறிய கொரோனா பிரிட்டனில் பரவி வருவதும் உலக மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+