அடுத்த தலைமுறைக்கான 'டிஜிட்டல் தங்கம்'.. உலகையே கண்ட்ரோலில் எடுக்கும் சீனா.. அப்போ இந்தியா எங்கே?
டெல்லி: இந்த நவீனக் காலத்தில் ரேர் எர்த் மெடல்கள் என்பவை ரொம்பவே முக்கியமான ஒன்றாக இருக்கிறது. தொழில்நுட்ப உலகில் அடுத்த கட்டப் பாய்ச்சலுக்கு முதுகெலும்பாக இருக்கும் இந்தத் தனிமங்கள் யாரிடம் உள்ளதோ அவர்களே இப்போது உலகைக் கட்டுக்குள் வைக்கிறார்கள். அந்தளவுக்கு முக்கியமான இந்த ரேர் எர்த் மெடல் எந்த நாட்டில் எவ்வளவு இருக்கிறது என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
"உலகில் கச்சா எண்ணெய் எங்கே இருக்கிறதோ, அங்கே அதிகாரம் இருக்கும்" என்பது கடந்த நூற்றாண்டின் கணக்கு. ஆனால், இந்த 21-ம் நூற்றாண்டில் அதிகாரம் என்பது கச்சா எண்ணெய்யில் இல்லை.. உங்கள் கையில் இருக்கும் ஸ்மார்ட்போனிலும், எலெக்ட்ரிக் காரிலும் ஒளிந்திருக்கிறது. அதுதான் ரேர் எர்த் மெடல்.. இந்த ரேர் எர்த் மெடல் அதிகம் உள்ள 10 நாடுகள் குறித்து நாம் பார்க்கலாம்!

ரேர் எர்த் மெடல்
பெயரில்தான் 'ரேர்' (Rare) என்று இருக்கிறதே தவிர, இவை பூமியில் அரிதாகக் கிடைப்பவை அல்ல. உலகில் பல பகுதிகளில் இவை குவிந்து கிடக்கும். ஆனால் சிக்கல் என்னவென்றால் இதை எடுத்தோம் கவிழ்த்தோம் என யூஸ் செய்துவிட முடியாது.. இவற்றைத் தூய்மைப்படுத்திப் பிரித்தெடுப்பதுதான் உலகிலேயே கடினமான காரியம். ஸ்மார்ட்போன் டிஸ்ப்ளே முதல் எலெக்ட்ரிக் வாகன மோட்டார்கள் (EV), விண்ட் டர்பைன்கள், ஏன்... அதிநவீன போர் விமானங்கள் மற்றும் ஏவுகணைகள் வரை இந்த 17 வகை தனிமங்கள் இல்லாமல் இயங்கவே முடியாது. உலகம் இப்போது கிரீன் எனர்ஜி மற்றும் ஏஐ நோக்கி நகர்வதால், இந்தத் தனிமங்களுக்கான தேவை வரும் ஆண்டுகளில் 10 மடங்கு அதிகரிக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
"மத்திய கிழக்கிடம் எண்ணெய் இருக்கிறது, சீனாவிடம் ரேர் எர்த் இருக்கிறது" இது 1990களிலேயே சீனாவின் முக்கிய தலைவர்களில் ஒருவரான டெங் ஜியோபிங் சொன்ன தீர்க்கதரிசன வார்த்தை. இன்று உலக நாடுகளை மிரட்டிப் பணிய வைக்கும் ஒரு புவிசார் அரசியல் ஆயுதமாகச் சீனா இதைப் பயன்படுத்துகிறது.
சரியாகக் கணித்த சீனா
பல நாடுகள் சுற்றுச்சூழல் பாதிப்புக்கு அஞ்சி சுரங்கத் தொழிலைக் கைவிட்டபோது, சீனா திட்டமிட்டு இதில் முதலீடு செய்தது. இன்று உலகத் தேவையில் பெரும் பகுதியைச் சீனா மட்டுமே பூர்த்தி செய்கிறது. அமெரிக்கா அல்லது ஜப்பானுடன் மோதல் வரும்போது, "நாங்கள் ரேர் எர்த் ஏற்றுமதியைத் தடை செய்வோம்" என ஒரே போடாகப் போட்டு அந்த நாடுகளின் முடக்கப் பார்ப்பதே சீனாவின் வேலையாக இருக்கிறது. இந்தளவுக்கு முக்கியமான ரேர் எர்த் மெடல் உலகில் எந்த நாடுகளில் எவ்வளவு உள்ளது என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
டாப் 7 நாடுகள்
உலகில் மொத்தம் 130 மில்லியன் மெட்ரிக் டன் ரேர் எர்த் இருப்பு இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. அதில் சீனாவிடமே அதிகபட்ச ரேர் எர்த் மெடல் உள்ளது.
- சீனா 44.0 மில்லியன் மெட்ரிக் டன்
- வியட்நாம்- 22.0 மில்லியன் மெட்ரிக் டன்
- பிரேசில்- 21.0 மில்லியன் மெட்ரிக் டன்
- ரஷ்யா- 10.0 மில்லியன் மெட்ரிக் டன்
- இந்தியா - 6.9 மில்லியன் மெட்ரிக் டன்
- ஆஸ்திரேலியா- 4.2 மில்லியன் மெட்ரிக் டன்
- அமெரிக்கா- 2.3 மில்லியன் மெட்ரிக் டன்
இந்தியாவின் நிலை என்ன?
இந்தியா 6.9 மில்லியன் மெட்ரிக் டன் இருப்புடன் 5வது இடத்தில் இருப்பது ஒரு பாசிட்டிவான செய்தி. ஆனால், சீனாவைப் போலப் பிரித்தெடுக்கும் தொழில்நுட்பத்தில் நாம் இன்னும் முன்னேற வேண்டியுள்ளது. இதன் காரமாகவே சுமார் 6.9 மில்லியன் மெட்ரிக் டன் ரேர் எர்த் மெடல் இருந்தாலும் கூட நாம் இதில் சீனாவையே சார்ந்து இருக்கிறோம். இருப்பினும், இதன் முக்கியத்துவத்தை உணர்ந்துள்ள மத்திய அரசு, இப்போது இப்போது பிரித்தெடுக்கும் தொழில்நுட்பத்தில் வளர்க்க பல்வேறு சிறப்புத் திட்டங்களை வகுத்து வருகிறது.
டெக்னாலஜி உலகில் இனி சீனாவை முந்த வேண்டும் என்றால், வெறும் மென்பொருள் மட்டும் போதாது.. இந்த ரேர் எர்த் கனிமங்களையும் கையில் வைத்திருக்க வேண்டும். அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் இப்போது சீனாவிற்கு மாற்றாக வியட்நாம் மற்றும் பிரேசில் பக்கம் தங்கள் பார்வையைத் திருப்பத் தொடங்கியுள்ளன. இனி வரும் காலங்களில் கச்சா எண்ணெய் இல்லாமல் கூட வண்டி ஓடும்... ஆனா 'ரேர் எர்த்' இல்லாமல் எதிர்காலமே ஓடாது என்பதே உண்மை!
-
ஈரான் - அமெரிக்கா மோதல்.. சீனுக்குள் வரும் சீனா! 4 அம்ச திட்டம்.. ஜி ஜின்பிங் போடும் பலே பிளான்? -
இந்தியாவில் முதல்முறை! சிறந்த பணியிட மகிழ்ச்சி விருதுகள் அறிமுகம்! ஹர்ஷ் கோயங்கா தலைமையில் மெகா டீம் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு... தண்ணீர் ஊற்றி சரி செய்யும் டெலிவரி ஊழியர்! கொடுமையை பாருங்க! -
இந்தியாவுக்கு வந்து இருக்கோம்.. பயத்துடன் இருந்த பாகிஸ்தான் பெண்! கடைசியில் என்ன ஆச்சு தெரியுமா? -
"எல்லை மீறி போறீங்க.." டெல்லி சாலைகளில் ஓடும் டிரம்ப் ஆட்டோக்கள்.. அப்படி என்ன காரணம் தெரியுமா? -
டிரம்பிடம் பணிந்த சீனா? ஹார்முஸில் அமெரிக்க கடற்படை செய்த மெகா சம்பவம்! ஜலசந்தியில் பதற்றம்! -
ஸ்கெட்ச் ஈரானுக்கு இல்ல, சீனாவுக்கு.. அமெரிக்காவின் Blockade-க்கு பின்னால் தந்திரமான திட்டம்.. முறியடிக்கும் ஜி ஜின்பிங் -
இந்தியாவுக்கு வந்த கேட்ச்-22 சிக்கல்.. இனி அடுத்தடுத்து பிரச்சனை தான்? -
ஈரான் போர்.. இடியாப்ப சிக்கலில் மாட்டிக்கொண்ட சீனா.. டிரம்ப் வைத்த செக்! -
அமெரிக்க போர் கப்பல்கள் கண்ணில் மண்ணை தூவிய சீனா.. அசால்டாக ஹார்முஸை கடந்து பயணம்! அது எப்படி -
சீனாவுக்கு எதிராக அமெரிக்கா செய்யும் சதி.. சுதாரித்துக்கொண்ட ஜி ஜின்பிங்.. ஈரான் தான் மையப்புள்ளி! -
கொஞ்சம் கூட பொறுப்பே இல்லை.. அமெரிக்காவுக்கு கடும் கண்டனம் தெரிவித்த சீனா!











Click it and Unblock the Notifications