குஜராத் பேட்டிங்கிற்கு அடித்தளமிட்ட சாஹா.. பைனலில் கலக்கல் சாதனை.. அடடே சூப்பரா இருக்கே
டெல்லி: ஐபிஎல் இறுதிப் போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இதில் சஹா தனது 38 வயதில் அட்டகாசமாக அரைசதம் அடித்தார். இதன் மூலம் அவர் அட்டகாசமான ஒரு சாதனையைப் படைத்துள்ளார்.
16 ஐபிஎல் இறுதிப் போட்டி இன்று நடைபெறுகிறது. இந்தாண்டு ஐபிஎல் தொடரில் மோதிய சென்னை, குஜராத் அணிகளே இப்போது மீண்டும் இறுதிப் போட்டியில் அதே அணிகள் பலப்பரீட்சை நடத்துகிறது.
இந்தாண்டு லீக் சுற்றுப் போட்டிகள் கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் மிகவும் விறுவிறுப்பாக இருந்தது. பல போட்டிகளில் 200+ ரன்களும், பல போட்டிகளில் கடைசி ஓவர் வரையும் மேட்ச் சென்றது.

எந்த 4 டீம்கள் ப்ளே ஆப் சுற்றுக்குத் தகுதி பெறும் என்பதைத் தெரிந்து கொள்ளவே கடைசி லீக் ஆட்டம் வரை காத்திருக்க வேண்டி இருந்தது. குஜராத், சென்னை, லக்னோ, மும்பை டீம்கள் ஐபிஎல் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றன. இதில் முதலாம் குவாலிபையர் முதல் சென்னையும், இரண்டாவது குவாலிபையர் மூலம் குஜராத் அணியும் ஐபிஎல் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.
இரு அணிகளும் மோதும் ஐபிஎல் இறுதிப் போட்டி முதலில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருந்தது. இருப்பினும், அங்கே மழை தொடர்ந்து பெய்து வந்த நிலையில், போட்டி இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்றைய தினம் திட்டமிட்டபடி இரவு 7.30 மணிக்குப் போட்டி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற சென்னை கேப்டன் தோனி பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் இறங்கிய கில், சஹா ஜோடி வழக்கம் போல வலுவான ஒரு தொடக்கத்தைக் குஜராத் அணிக்குக் கொடுத்தனர். முதல் விக்கெட்டிற்கு அவர்கள் 67 ரன்களை சேர்ந்திருந்தனர். முதலில் கில் 20 பந்துகளில் 39 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். அவரை தோனி தனது மின்னல் வேக ஸ்டெம்பிங்க மூலம் வெளியேற்றினார். இருப்பினும், பொறுப்பாக விளையாடிய சாஹா அரைசதம் எடுத்தார்.
மொத்தம் 39 பந்துகளில் அவர் 54 ரன்களை எடுத்திருந்தார். ஒரு சிக்சர், 4 பவுன்டரிக்களுடன் 138 ஸ்டைரைக் ரேட்டுடன் சஹா 50 ரன்களை விளாசியிருந்தார். இது குஜராத் அணிக்கு வலுவான ஒரு பேட்டிங்கை அமைத்துத் தர முக்கிய காரணமாக இருந்தது. இந்த அரைசதம் மூலம் அவர் மற்றொரு சாதனையையும் படைத்தார். அதாவது ஐபிஎல் பைனல்ஸில் அரைசதம் அடித்த வயதான வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.
சாஹாவுக்கு இப்போது 38 வயது 217 நாட்கள் ஆகிறது. இந்த வயதிலும் அவர் அட்டகாசமாக விளையாடி அரைசதம் அடித்துள்ளார். இதற்கு முன்பு இந்த சாதனை வாட்சன் வசம் இருந்தது. அவர் கடந்த 2019ஆம் பைனல்ஸில் ஆண்டில் தனது 37 வயதில் (37y 329d) அரைசதம் அடித்திருந்தார். அந்த சாதனையை இப்போது சாஹா முறியடித்துள்ளார். அதேபோல டூ பிளஸ்ஸிஸ் 2021இல் தனது 37 வயதில் (37y 94d) அரைசதம் அடித்திருந்தார்.
கடந்த 2012ஆம் ஆண்டில் 37 வயதில் மைக் ஹஸ்ஸி, அதைத் தொடர்ந்து தனது 36 வயதில் (36y 344d) வயதில் 2018 பைனலிஸ் ஷேன் வாட்சன் ஆகியோர் அரை சதம் அடித்து அடுத்தடுத்து இடங்களில் உள்ளனர்.
-
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு?












Click it and Unblock the Notifications