பிளாஷ் பேக் 2023.. உலகின் வலிமையான பாஸ்போர்ட்.. இந்தியாவிற்கு எத்தனையாவது இடம்?
டெல்லி: ஒரு நாட்டின் பாஸ்போர்ட்டை வைத்து எத்தனை நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்க முடியும் என்பதைப் பொருத்து சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் எது என்ற பட்டியல் முடிவு செய்யப்படுகிறது. 2023 ஆம் ஆண்டில் வலிமையான பாஸ்போர்ட் எது என்று பார்க்கலாம்.
டெல்லி: வெளிநாட்டிற்கு பயணம் செய்ய, பாஸ்போர்ட் வைத்திருப்பது மிகவும் முக்கியம். வெளிநாட்டு பயணத்தின் போது பாஸ்போர்ட் ஐடி ஆதாரமாகவும் பயன்படுத்தலாம். இப்படிப்பட்ட சூழ்நிலையில், உலகிலேயே வலிமையான பாஸ்போர்ட் எந்த நாட்டில் உள்ளது என்ற கேள்வி பலருக்கும் உள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் ஹென்லி பாஸ்போர்ட் இன்டெக்ஸ் உலகின் அனைத்து நாடுகளின் பாஸ்போர்ட்டுகளின் தரவரிசையை வெளியிடுகிறது. எந்த நாட்டின் பாஸ்போர்ட் மிகவும் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் என்ற கணக்கை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் 2023ஆம் ஆண்டுக்கான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு சிங்கப்பூரின் பாஸ்போர்ட் முதலிடத்தில் உள்ளது. உலகின் மிகவும் சக்தி வாய்ந்த கடவுச்சீட்டு சிங்கப்பூரின் கடவுச்சீட்டு என்பது தெளிவாகிறது. சிங்கப்பூர் குடிமக்கள் உலகில் 192 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணம் செய்யலாம். இரண்டாவது இடம் ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகளின் பாஸ்போர்ட்டுகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா, பின்லாந்து, பிரான்ஸ், லக்சம்பர்க், தென் கொரியா, சுவீடன் ஆகிய நாடுகள் ஜப்பானுடன் மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளன. அதே நேரத்தில், இங்கிலாந்து பாஸ்போர்ட் டாப்-4 இடத்தையும், அமெரிக்காவின் பாஸ்போர்ட் 8வது இடத்தையும் பெற்றுள்ளது.
கடந்த 2018ஆம் ஆண்டு வலிமையான பாஸ்போர்ட் என்ற வரிசையில் சிங்கப்பூரை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்தது. தற்போது மீண்டும் சிங்கப்பூரே முதலிடத்திற்கு வந்துள்ளது. விசா இல்லாமல் பிற நாடுகளுக்குச் செல்லும் அனுமதியை வழங்குவதின் அடிப்படையில் இந்த தர வரிசை தயார் செய்யப்படுகிறது. அமெரிக்காவின் பாஸ்போர்ட் தரவரிசையில் ஒரு இடம் சரிந்து எட்டாவது இடத்திற்கு வந்துள்ளது, 184 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணம் செய்யலாம்.
உலகின் மிகவும் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலில் இந்தியாவின் பாஸ்போர்ட் தரவரிசை ஏழு இடங்கள் உயர்ந்து 80வது இடத்திற்கு வந்துள்ளது. 2023 ஆம் ஆண்டில் இந்தியாவின் பாஸ்போர்ட் 80 வது இடத்தில் உள்ளது. இந்தியாவுடன் டோகோ மற்றும் செனகல் ஆகியவை 80 வது இடத்தில் உள்ளன. இந்த குறியீட்டின்படி, இந்தியா, டோகோ மற்றும் செனகல் ஆகிய நாடுகளின் பாஸ்போர்ட் பயனர்கள் 57 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணம் செய்யலாம்.
அதேநேரம், பாகிஸ்தான், இலங்கை, நேபாளம், வங்கதேசம் ஆகிய நாடுகளின் கடவுச்சீட்டுகள் பலவீனமானவை என குறிப்பிடப்பட்டுள்ளது. 33 நாடுகளுக்குப் பாகிஸ்தான் பாஸ்போர்ட் மூலம் விசா இல்லாமல் பயணம் செய்ய அனுமதிக்கப்படுகிறது.
சிங்கப்பூர் பாஸ்போர்ட் மூலம் 192 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணம் செய்யலாம். ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின் நாடுகளின் பாஸ்போர்ட் மூலம் 190 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணம் செய்யலாம். ஆஸ்திரியா, பின்லாந்து, பிரான்ஸ், ஜப்பான், லக்சம்பர்க், தென் கொரியா, ஸ்வீடன் ஆகிய நாடுகளின் பாஸ்போர்ட் மூலம் 189 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணம் செய்யலாம்.
யுனைடெட் கிங்டம், டென்மார்க், அயர்லாந்து, நெதர்லாந்து நாடுகளின் பாஸ்போர்ட் மூலம் 188 நாடுகளுக்கு பயணம் செய்யலாம்.
பெல்ஜியம், செக் குடியரசு, மால்டா, நியூசிலாந்து, நார்வே, போர்ச்சுகல், சுவிட்சர்லாந்து நாட்டின் பாஸ்போர்ட் மூலம் 187 நாடுகளுக்கும் லிதுவேனியா, அமெரிக்கா நாடுகளின் பாஸ்போர்ட் மூலம் 184 நாடுகளுக்கும் விசா இல்லாமல் பயணம் செய்யலாம்.
எஸ்டோனியா, ஐஸ்லாந்து நாடுகளின் பாஸ்போர்ட் மூலம் 182 நாடுகளுக்கும் லாட்வியா, ஸ்லோவாக்கியா, ஸ்லோவேனியா நாடுகளின் பாஸ்போர்ட் மூலம் 183 நாடுகளுக்கும் பயணம் செய்யலாம். கனடா, கிரீஸ் நாடுகளின் பாஸ்போர்ட் பயன்படுத்தி 185 இடங்களுக்கும் ஆஸ்திரேலியா, ஹங்கேரி, போலந்து நாடுகளின் பாஸ்போர்ட் பயன்படுத்தி விசா இல்லாமல் 186 நாடுகளுக்கு பயணம் செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications