"ஈ-யை கொல்ல பெரிய சுத்தியல் வேண்டாம்".. கரப்பான்பூச்சி போராட்டத்தையொட்டி டெல்லி உச்சநீதிமன்றம் அதிரடி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் நாளை டெல்லியில் போராட்டம் நடத்த உள்ளனர். இந்த போராட்டத்தையொட்டி டெல்லியில் மெட்ரோ மற்றும் ரயில் சேவைகளை முடக்கப்பட்டுள்ள நிலையில் '' ''ஈயை கொல்ல பெரிய சுத்தியலை பயன்படுத்த முடியாது. எனவே மெட்ரோ ரயில், ரயில் சேவைகள் மீதான கட்டுப்பாடுகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும்'' எனக்கூறி முழுவதுமாக விதிக்கப்பட்ட தடையை அதிரடியாக ரத்து செய்து உத்தரவிட்டது.

you-cant-use-a-sledgehammer-to-kill-a-fly-cant-be-complete-prohibition-on-delhi-metro-and-trains

இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜினாமா செய்யக்கோரி நாளை டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டம் அறிவித்துள்ளனர். இந்த போராட்டத்துக்கு டெல்லி போலீசார் அனுமதி கொடுக்கவில்லை.

அதுமட்டுமின்றி இந்த போராட்டத்தை காரணம் காட்டி நாளை அதிகாலை 4 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை டெல்லிக்குள் மெயில், எக்ஸ்பிரஸ் ரயில் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. அதோடு 57 மெட்ரோ ரயில் நிலையங்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளதோடு, ஹோட்டல்கள், விடுதிகளில் புதிய புக்கிங் எடுக்க கூடாது என அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

இந்த கட்டுப்பாடுகளை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் பேபி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை தலைமை நீதிபதி சூர்யகாந்த் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞரும், எம்பியுமான கபில் சிபல் வாதாடும்போது, ''டெல்லியில் அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. மெட்ரோ நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. எங்கும் செல்ல முடியவில்லை. இந்த நாட்டிற்கு என்ன நடக்கிறது? இது ஒரு அமைதியான போராட்டம்'' என வாதம் செய்தார்.

இதற்கு மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல், ''எங்கள் கவலை எந்தவொரு குறிப்பிட்ட போராட்டக்காரர் அல்லது தனிநபர் குறித்தது அல்ல. மாறாக தங்கள் வாழ்வாதாரத்திற்காக குருகிராம், கிரேட்டர் நொய்டா, கிழக்கு டெல்லி மற்றும் தெற்கு டெல்லி ஆகிய இடங்களிலிருந்து டெல்லிக்கு பயணம் செய்யும் ஆயிரக்கணக்கான பயணிகள் குறித்ததுதான். இதனால் தான் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது'' என்று கூறினார்.

அப்போது நீதிமன்றம், '' ஈயை கொல்ல பெரிய சுத்தியலை பயன்படுத்த முடியாது. இளைஞர்கள், முதியவர்கள் என அனைவரும் ரயில்களில் பயணம் செய்கிறார்கள். பயணிகளுக்கு அடிப்படை வசதிகளை பெறுவதற்கான உரிமை உள்ளது. இதனால் மூடப்பட்ட மெட்ரோ நிலையங்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும். கட்டுப்பாட்டிற்கும் முழுமையான முடக்கத்திற்கும் வித்தியாசம் உள்ளது.

அதேவேளையில் கட்டுப்பாடுகள் விதிக்க காவல்துறைக்கு முழு அதிகாரம் நிச்சயமாக உண்டு. அதில் சந்தேகம் இல்லை. இருப்பினும் அதற்காக எல்லாவற்றையும் முடக்கிவிட்டு மக்களைப் போக்குவரத்து வசதி ஏதுமின்றி தவிக்கவிட முடியாது. இதனால் டெல்லி மெட்ரோ மற்றும் ரயில் சேவைகளை முழுமையாக முடக்க முடியாது.

எல்லோரிடமும் கார், பைக் இருப்பது இல்லை. மக்கள் பொதுப்போக்குவரத்தை நம்பிகே உள்ளனர். இதனால் இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்வது சாத்தியமற்றது. நகரின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மக்கள் பயணம் செய்வதால் அனைத்தையும் முடக்க முடியாது. இதனால் மெட்ரோ மற்றும் ரயில் மீதான கட்டுப்பாடுகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும்'' என்று கூறியது. அதுமட்டுமின்றி டெல்லியில் மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடல், ரயில் சேவைகளுக்கு விதிக்கப்பட்ட தடையை ரத்து செய்து உத்தரவிட்டது.

இதற்கு மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ''இதுபற்றி அரசுடன் கலந்தாலோசித்து நிலைமைக்கு ஏற்ப நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+