பிரதமர் மோடியின் தனி செயலராக இளம்பெண் ஐஎப்எஸ் அதிகாரி நிதி திவாரி நியமனம்.. யார் இவர் தெரியுமா?
டெல்லி: பிரதமர் மோடியின் தனி செயலராக 2014 பேட்ச் ஐஎப்எஸ் அதிகாரியான நிதி திவாரி (Nidhi Tiwari) நியமனம் செய்யப்பட்டுள்ளார். துடிப்பு மிக்க திறமையான இளம் அதிகாரியான நிதி திவாரி யார்? அவர் இதற்கு முன் பணியாற்றிய துறைகள் என்ன? என்பது பற்றிய விவரங்களை இங்கே பார்க்கலாம்.
பிரதமர் மோடியின் தனி செயலராக இளம் பெண் ஐஎப்எஸ் அதிகாரியான நிதி திவாரி நியமனம் செய்யப்பட்டுள்ளார். பிரதமரின் தனி செயலராக நிதி திவாரியை உடனடியாக நியமனம் செய்ய மத்திய அமைச்சரவையின் கேபினட் குழு ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய அரசின் பணியாளர் மற்றும் பயிற்சி துறை கடந்த 29 ஆம்தேதி இதற்கான குறிப்பாணையை வெளியிட்டுள்ளது. பிரதமரின் தனி செயலராக நியமிக்கப்பட்டு இருக்கும் ஐஎப்எஸ் அதிகாரி என்பது குறித்த விவரங்களை பார்க்கலாம்.

யார் இந்த நிதி திவாரி
2014 பேட்ச் ஐஎப்எஸ் அதிகாரியான நிதி திவாரி உத்தர் பிரதேச மாநிலம் வாரணாசி அருகே உள்ள மெஹ்முர்கஞ்ச் என்ற பகுதியை சேர்ந்தவர். 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற சிவில் சர்வீஸ் தேர்வில் 96 வது ரேங்க் இவர் எடுத்தார். கடந்த 2023 ஆம் ஆண்டு ஜனவரி 6 ஆம் தேதி முதல் பிரதமர் அலுவலகத்தின் துணை செயலராக இவர் பதவி வகித்து வருகிறார். பிரதமர் அலுவலக பணியில் 2022 ஆம் ஆண்டு சேர்ந்தார்.
முன்னதாக அவர் வெளியுறவு அமைச்சகத்தில் பணியாற்றிய காலத்தில், ஆயுதக் குறைப்பு மற்றும் சர்வதேச பாதுகாப்பு விவகாரப் பிரிவில் பணியாற்றி வந்தார். அதன்பிறகு மூன்று ஆண்டுகள் பிரதமர் அலுவலகத்தில் பணியாற்றினார். சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்று பணிக்கு வரும் முன்பாக நிதி திவாரி, வணிக வரி துறையில் துணை ஆணையராக பணியாற்றினார். தனது பணியை தொடர்ந்து கொண்டே சிவில் சர்வீஸ் தேர்வுக்கு அவர் தயாராகி வந்தார்.
தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல்
சிவில் சர்வீஸ் தேர்வில் ஐஎப்எஸ் பணி கிடைத்ததும் வணிக வரிதுறையில் இருந்து விலகி குடிமை பணிக்கு வந்தார். பிரதமர் அலுவலகத்தில், வெளியுறவு மற்றும் பாதுகாப்பு பிரிவில் துணை செயலராகவும் பணியாற்றி இருக்கிறார். இவரது ரிப்போர்ட்டிங் அதிகாரியாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இருந்துள்ளார்.
அணு சக்தி மற்றும் பாதுகாப்பு விவகாரம் ஆகியவற்றை வெளியுறவு விவகாரங்களில் இவர் கவனித்து வந்துள்ளார். பிரதமர் மோடிக்கு தற்போது இரண்டு தனி செயலாளர்கள் உள்ளனர். விவேக் குமார் மற்றும் ஹர்திக் சதிஷ்சந்திர ஷா ஆகியோர் தனி செயலர்களாக உள்ள நிலையில், இவரும் தனி செயலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
என்னென்ன பணிகளை செய்வார்
பிரதமரின் தனி செயலாளராக நியமிக்கப்பட்டு இருக்கும் நிதி தவாரி, பிரதமர் மோடியின் தினசரி நிர்வாக பணிகளை கையாள உள்ளார். பிரதமர் மோடியின் மீட்டிங்குகள், அதற்கான தயார் நிலைகள் மற்றும் வெளிநாட்டு சுற்றுப் பயணங்கள், கொள்கை முடிவுகள் ஆகியவை தொடர்பான பணிகளிலும் முக்கிய பங்கு வகிப்பார். 2014 ஆம் ஆண்டு ஐஎப்எஸ் பயிற்சியின் போது சிறந்த பயிற்சி அதிகாரிக்கான கோல்டு மெடல் இவர் வாங்கியுள்ளார்.
-
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம்












Click it and Unblock the Notifications