இன்ஸ்டாவில் பிரபலம்.. கொன்று புதைத்த காதலன்.. கர்ப்பிணி வேற.. டெல்லியே நடுங்கிப்போச்சு!
டெல்லி: இன்ஸ்டா பிரபலமான இளம்பெண்ணை அவரது காதலனே நண்பர்களோடு சேர்ந்து கொன்று புதைத்த சம்பவம் டெல்லியை அதிர வைத்துள்ளது. திருமணம் செய்ய சொல்லி வற்புறுத்தியதால் கர்ப்பிணி என்றும் பாராமல் காதலியை வனப்பகுதிக்கு அழைத்து சென்று கழுத்தை அறுத்து கொன்று புதைத்ததாக காதலன் கூறியுள்ளார். இன்ஸ்டா ரீல்சில் ஆரம்பித்த காதல் கொலையில் முடிந்துள்ளது.
டெல்லியை சேர்ந்த இளம்பெண் சோனி. 19 வயதான இவர் சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருந்தார். இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் போடுவது தனது, புகைப்படங்களை பதிவேற்றம் செய்வது என சோஷியல் மீடியாவில் ஓரளவு பிரபலமாக இருந்த சோனிக்கு சஞ்சு அகா சலீம் என்ற இளைஞரின் அறிமுகம் கிடைத்தது.

இருவரும் ஒன்றாக சமூக வலைத்தளங்களில் போட்டோக்களையும், ரீல்ஸ்களையும் பதிவிட்டு வந்தனர். இருவரும் நெருங்கி பழகி வந்த நிலையில், சோனி கர்ப்பம் ஆகியுள்ளார். இதனால், விரைவில் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு சோனி தனது ஆண் நண்பர் சலீமை வற்புறுத்தியுள்ளார். ஆனால், சலீமோ.. திருமணம் செய்ய விருப்பம் இல்லாமல் இருந்துள்ளார்.
அதோடு கர்ப்பத்தை கலைத்து விடுமாறு சோனியை கட்டாயப்படுத்தியுள்ளார். ஆனால், இதற்கு உடன்பட மறுத்த சோனி, திருமணம் செய்யுமாறு சலீமிடம் கேட்டுள்ளார். இதற்கிடையே கடந்த திங்கள் கிழமை சலீம் வீட்டிற்கு சோனி சென்றுள்ளார். அப்போது சோனியை ஹரியானாவில் உள்ள ரோஹ்தக் அழைத்து சென்ற சலீம், அங்கு தனது நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்துள்ளார். பின்னர் அவரது உடலை யாருக்கும் தெரியாமல் அங்கேயே புதைத்து உள்ளனர்.
சோனி மாயமானது தொடர்பாக வந்த புகாரையடுத்து போலீசார் விசாரணையை தொடங்கினர். போலீசார் நடத்திய விசாரணையில், சோனி தனது ஆண் நண்பரால் கொலை செய்யப்பட்ட சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதையடுத்து சலீம் மற்றும் அவரது நண்பர்களை கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் தலைமறைவாக இருந்த ஒருவரை தேடி வருகிறார்கள்.
தலைநகர் டெல்லியில் நடைபெற்ற கொலை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில், "திட்டமிட்டு கொலை செய்ததை குற்றவாளிகள் ஒப்புக்கொண்டுள்ளனர். கர்வா சவுத் நாளன்று இளம்பெண்ணை கொலை செய்ய திட்டமிட்ட சலீம் மற்றும் அவரது நண்பர்கள் வாடகைக்கு ஒரு காரை எடுத்துள்ளனர்.
சோனி தனது உடைமைகளுடன் வீட்டை விட்டு வந்த நிலையில், அவரை ரோஹ்தக் நகருக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு ஒரு வனப்பகுதிக்கு அழைத்து சென்று கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு அங்கேயே உடலை புதைத்துள்ளனர். அன்று இரவே டெல்லிக்கு திரும்பியுள்ளனர். இந்த சம்பவம் டெல்லியில் அதிச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications