வெயிலை விட உங்க கொள்கைகள் தான் மக்களை சுட்டெரிக்குது! மோடிக்கு காட்டமாக கார்கே கடிதம்.. ‛அட்டாக்’

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ‛‛வெயிலை விட உங்களது கொள்கை தான் மக்களை சுட்டெரித்து வருகிறது. காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை மீதான உங்கள் பொய்களால் பிரிவினைவாதம் பேசும் பிரதமராக மட்டுமே உங்களை மக்கள் நினைவில் வைப்பார்கள்'' என பிரதமர் மோடிக்கு நேரடியாக கடிதம் எழுதி காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே காட்டமாக விமர்சனம் செய்துள்ளார்.

நம் நாட்டில் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்டது. கடந்த மாதம் 19, 26 ஆகிய தேதிகளில் 2 கட்ட தேர்தல்கள் நடந்து முடிந்துவிட்டன. இன்னும் 5 கட்ட தேர்தல் பாக்கி உள்ளது. 3வது கட்ட தேர்தல் வரும் 7 ம் தேதி நடைபெற உள்ளது.

Your policy is burning people more than the sun Mallikarjun Kharge writes letter to PM Modi

இந்நிலையில் தான் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே வார்த்தை போர் வெடித்துள்ளது. அதாவது பிரதமர் மோடி முதல் பாஜக தலைவர்களும், காங்கிரஸில் மல்லிகார்ஜுன கார்கே முதல் பிற தலைவர்களும் மாற்றி மாற்றி கடுமையான விமர்சனங்களை தேர்தல் பிரசாரங்களில் முன்வைத்து வருகின்றனர்.

இதனால் அடிக்கும் அனல் காற்றை விட அவர்களின் அனல் பேச்சு பேசும்பொருளாகி வருகிறது. குறிப்பாக பிரதமர் மோடி பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு கடிதம் எழுதி வருகிறார். அதில் காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சனம் செய்கிறார். காங்கிரஸ் கட்சி இஸ்லாமியர்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதாகவும், காங்கிரஸ் கட்சியின் ஆட்சியில் நாடு பின்தங்கியதாகவும் அவர் கூறி வருகிறார். மேலும் பிரதமர் மோடி உள்பட பாஜக தலைவர்கள் ஓபிசி, எஸ்சி, எஸ்டி இடஒதுக்கீட்டை குறைத்து முஸ்லிம்களுக்கு சலுகை வழங்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது என பேசி வருகின்றனர். மேலும் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை கடுமையாக சாடி வருகின்றனர்.

இந்நிலையில் தான் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய கடிதத்தில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, என்டிஏ வேட்பாளர்களுடன் பிரதமர் சமீபத்தில் பேசியது குறித்து தனது கவலையை தெரிவித்தார். கடிதத்தில் பயன்படுத்தப்பட்ட மொழி விரக்தி மற்றும் பதட்டத்தின் உணர்வைப் பிரதிபலிப்பதாகத் தோன்றியது என்று கார்கே சுட்டிக்காட்டினார், இது மதிப்பிற்குரிய பிரதமரின் பதவிக்கு பொருத்தமற்றது என்று அவர் கருதினார்.

வாக்காளர்களுக்கு கொண்டு செல்ல வேண்டிய விஷயங்கள் தொடர்பாக பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்களுக்கு நீங்கள் எழுதிய கடிதத்தை பார்தேன். கடிதத்தின் தொனி மற்றும் அதில் உள்ள விஷயத்தை பார்க்கும்போது உங்களின் விரக்தி மற்றும் கவலை தெரிகிறது. மேலும் அந்த கடிதம் என்பது பிரதமர் எனும் பதவியில் இருக்கும் உங்களால் பொருத்தமற்ற முறையில் எழுதப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை தொடர்பாக தொடர்ந்து பொய்களை கூறி வருகிறீர்கள். வாக்குக்காக பொய்களுடன் பிரிவினைவாதம் பேசும் பிரதமராக தான் உங்களை மக்கள் நினைவில் வைப்பார்கள். மேலும் நீங்கள் சொல்லும் பொய்கள் பிரசாரத்தில் நீங்கள் எதிர்பார்த்த பலனை கொடுக்கவில்லை. இதனால் உங்களின் வேட்பாளர்களும் பொய்களை பரப்ப வேண்டும் என்பது போல் இந்த கடிதம் உள்ளது.

இன்று கூட நீங்கள் சீனாவை ‛குஸ்திபைதியே' என சொல்ல மறுக்கிறீர்கள். இதற்கு பலனாக தான் 2020 ஜுன் 19ல் கல்வானில் 20 இந்திய வீரர்கள் மரணமடைந்து உயிர் தியாகம் செய்ய நேரிட்டது. அதோடு சீனாவுக்கு ‛க்ளீன்ஷீட்' கொடுத்து இந்தியாவை வலுவிழக்க நாடாக மாற்றுகிறீர்கள்.

எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினரிடம் இருந்து இடஒதுக்கீட்டை பறித்து இஸ்லாமியர்களுக்கு வழங்குவோம் என்று கூறுகிறீர்கள். ஆனால் எங்களின் தேர்தல் வாக்குறுதி என்பது ஏழைகள், பெண்கள், இளைஞர்கள், தொழிலாளர் வர்க்கத்தினர், பழங்குடியினர், தலித் மக்கள் உள்பட சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்கள் என அனைத்து தரப்பினருக்கமானதாக உள்ளது.

ஆனால் ஆர்எஸ்எஸ், பாஜக என்பது அப்படியில்லை. 1947 முதல் இடஒதுக்கீட்டை தொடர்ந்து எதிர்த்து வருகிறது. இடஒதுக்கீட்டு முறையை ஒழிக்க வேண்டும் என உங்கள் தலைவர்கள் வெளிப்படையாக பேசியிருக்கிறார்கள். வெயிலை விட உங்களது கொள்கைகள் தான் மக்களை சுட்டெரித்து வருகிறது. 16வது பிரிவின்படி மக்கள்தொகை அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கும் முறையை ஏன் நீங்கள் எதிர்க்கிறீர்கள் என்பதை தெளிவுப்படுத்த வேண்டும்.

அதோடு பொய்யை மீண்டும் மீண்டும் சொல்வதாலேயே அது உண்மையாகிவிடாது. ஏனென்றால் உண்மையை கண்டறியும் அளவுக்கு மக்கள் புத்திசாலிகளாக உள்ளனர். லோக்சபா தேர்தலில் முதல் 2 கட்டங்களில் குறைந்த வாக்குப்பதிவு பதிவாகி உள்ளது. இது அரசின் கொள்கைகள் மீதான மக்களின் ஆர்வமின்மையை தான் காட்டுகிறது'' என விமர்சனம் செய்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+