முதல் முறை! பாஜகவிற்கு எதிராக திரும்பும் ஜெகன் மோகன் ரெட்டி! வக்பு வாரிய மசோதாவிற்கு கடும் எதிர்ப்பு
டெல்லி: மத்தியில் ஆளும் பாஜக அரசு இன்று வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவை லோக்சபாவில் தாக்கல் செய்தது. இந்த மசோதாவிற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ். ஆர். காங்கிரஸ் கட்சியும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறது. பாஜக அரசை முதல் முறையாக ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் எதிர்த்துள்ளது.
நாடு முழுவதும் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக மசூதிகள், தர்காக்கள், மதரஸாக்களின் பெயரில் இஸ்லாமியர்கள் தானமாக நிலம் வழங்கி இருக்கின்றனர். இந்த நிலம்தான் வக்பு வாரிய சொத்துகள் எனப்படுகின்றன. இதற்காக 1954-ல் ஒரு சட்டம் உருவாக்கப்பட்டது. 1958-ம் ஆண்டு அனைத்து மாநிலங்களிலும் வக்பு வாரியங்களும் அமைக்கப்பட்டன.

வக்பு வாரியங்களானவை, மசூதிகள்- மத்ரஸாக்கள், தர்காக்களை நிர்வகிக்கும் நிர்வாக முறைகளைக் கண்காணிக்கும். இந்த வழிபாட்டு தலங்களின் பெயரால் உள்ள வக்பு சொத்துகளைக் கண்காணிக்கும். வக்பு வாரிய சொத்துகள் தொடர்பான விரிவான சட்டம் கடந்த 1995-ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. இந்த சட்டத்திலும் 2013-ம் ஆண்டு அப்போதைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு திருத்தம் கொண்டு வந்தது.
இதன் அடிப்படையில்தான் வக்பு வாரியம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில்தான் வக்பு வாரிய சட்டத்தில் சில திருத்தம் செய்ய மத்திய அரசு முடிவு செய்து உள்ளது. 44 திருத்தங்களை செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து இருக்கிறது. வக்பு வாரியத்தில் முஸ்லிம் பெண்கள் இடம்பெறுதல், முஸ்லிம் அல்லாதோர் நிர்வாகிகளாக இடம்பெறுவதற்கு வழிவகை செய்யப்பட்டு உள்ளது.
மத்திய வக்பு கவுன்சில், மாநில வக்பு வாரியங்களில் தலா 2 பெண் உறுப்பினர்கள் இடம்பெறுவதற்கு வழிவகை செய்யப்படுகிறது. மேலும் மத்திய வக்பு கவுன்சிலில் ஒரு மத்திய அமைச்சர், 3 எம்பிக்கள், முஸ்லிம் அமைப்புகளைச் சேர்ந்த 3 பிரதிநிதிகள், உள்ளிட்டோர் இடம் பெற வேண்டும் பொன்ற ஷரத்துக்கள் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
வக்பு வாரிய சொத்துக்களை முறைப்படுத்துவதே இந்த சட்டத்திருத்த மசோதாவின் முக்கிய நோக்கம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த மசோதா இன்று லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டது. காங்கிரஸ், சமாஜ்வாடி, திரிணாமுல் காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் மசோதாவிற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தன. வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை நாடாளுமன்ற நிலைக்குழு பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்தன.
பிற்பகலில் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ இந்த மசோதாவை தாக்கல் செய்த நிலையில், மசோதாவிற்கு காங்கிரஸ் எம்பி வேணுகோபால், திமுகவின் கனிமொழி, விசிக எம்பி தொல் திருமாவளவன் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதேவேளையில், இந்த மசோதாவிற்கு பாஜகவின் கூட்டணி கட்சிகளான தெலுங்கு தேசம் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் வரவேற்பு தெரிவித்துள்ளன.
இந்த மசோதா முஸ்லிம்களுக்கு எதிரானது இல்லை என்று ஐக்கிய ஜனாதளம் கட்சி தெரிவித்துள்ளது. அதே வேளையில் ஆந்திராவின் ஜெகன்மோகன் ரெட்டி கட்சியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. கடந்த காலங்களில் மத்தியில் ஆளும் பாஜகவிற்கு பல்வேறு மசோதக்களை நிறைவேற்ற ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆதரவு அளித்தது. ஆனால், முதல் முறையாக ஜெகன் மோகன் ரெட்டியின் கட்சி பாஜக கொண்டு வந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
ஜெகன்மோகன் ரெட்டியின் இந்த திடீர் மூவ், இந்தியா கூட்டணி பக்கம் ஜெகன் மோகன் ரெட்டி சாய தயாராக இருப்பதையே உணர்த்துவதாக அரசியல் வட்டாரத்திலும் பேச்சு எழுந்துள்ளது. அண்மையில் ஆந்திராவில் நடந்த சட்டமன்ற தேர்தலில் ஜெகன் மோகன் ரெட்டி கட்சி படுதோல்வியை சந்தித்தது. ஆளும் கட்சியாக இருந்த ஒய்.எஸ். ஆர் காங்கிரஸ் எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற முடியாத அளவிற்கு தோல்வியை தழுவியது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications