ஆந்திரா முதல்வர் ஜெகன் சகோதரி ஷர்மிளா காங்கிரஸில் ஐக்கியம்.. கார்கே, ராகுல் முன்னிலையில் இணைந்தார்
டெல்லி: ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரி ஒய்.எஸ்.ஷர்மிளா இன்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். டெல்லியில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி முன்னிலையில் ஒய்.எஸ்.ஷர்மிளா காங்கிரஸில் இணைந்தார்.
ஆந்திரா முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் தங்கையான ஒய்.எஸ்.ஷர்மிளா, தெலங்கானாவில் ஒய்.எஸ்.ஆர் தெலங்கானா கட்சி என்ற பெயரில் அரசியல் கட்சியை நடத்தி வருகிறார். ஒய்.எஸ்.ஷர்மிளா தனது கட்சியை காங்கிரஸ் கட்சியுடன் இணைக்கப் போகிறார் என்ற பேச்சுகள் அண்மையில் திடீரென எழுந்தன. இதையடுத்து, கடந்த நவம்பர் 3ஆம் தேதி ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.

தெலங்கானாவில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை. தேர்தலில் வாக்குகள் பிளவு படுவதைத் தடுக்க காங்கிரஸுக்கு எனது ஆதரவை வழங்க முடிவு செய்துள்ளேன் என அறிவித்தார். அதன்படி, ஒய்.எஸ்.ஷர்மிளாவின் கட்சி காங்கிரஸுக்கு ஆதரவு அளித்தது. தெலுங்கானா சட்டசபை தேர்தலில் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வென்று ஆட்சியையும் பிடித்தது.
#WATCH | YSRTP chief & Andhra Pradesh CM's sister YS Sharmila joins Congress, in the presence of party president Mallikarjun Kharge and Rahul Gandhi, in Delhi pic.twitter.com/SrAr4TIZTC
— ANI (@ANI) January 4, 2024
இந்நிலையில் தான், ஒய்எஸ்ஆர் தெலுங்கானா கட்சியின் நிறுவனத் தலைவர் ஒய்.எஸ்.ஷர்மிளா இன்று காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி முன்னிலையில் காங்கிரஸில் இணைந்தார் ஒய்.எஸ்.ஷர்மிளா.
இன்று டெல்லியில், காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள் முன்னிலையில், தனது கட்சியை காங்கிரஸ் கட்சியோடு இணைத்து உள்ளார். இன்னும் சில மாதங்களில் நாடாளுமன்றத் தேர்தலோடு ஆந்திராவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஷர்மிளா காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
ஷர்மிளாவுக்கு காங்கிரஸ் கட்சியில் முக்கியத்துவம் வாய்ந்த பதவி வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. நேற்று இரவு (ஜனவரி 3) டெல்லி சென்றடைந்தார் ஒய்.எஸ்.ஷர்மிளா. அவரிடம் செய்தியாளர்கள், காங்கிரஸ் கட்சியில் இணையப் போகிறீர்களா எனக் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த ஒய்.எஸ்.ஷர்மிளா, ஆமாம், அப்படித்தான் தெரிகிறது என்றார்.
தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியில் உங்களுக்கு என்ன பொறுப்பு வழங்கப்படும் எனச் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு ஒய்.எஸ்.ஷர்மிளா அது நாளை தெரியும் என பதில் அளித்தார். ஆந்திர பிரதேச முன்னாள் முதல்வர் ஒ.எஸ்.ராஜசேகர ரெட்டியின் மறைவுக்குப் பிறகு தனிக்கட்சி தொடங்கிய ஜெகன் மோகன் ரெட்டிக்கு பக்க பலமாக நின்ற ஷர்மிளா, பின்னர் தெலுங்கானாவில் தனிக்கட்சி நடத்தி, தற்போது காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார்.












Click it and Unblock the Notifications