அதிர வைத்த Zee - Matrize கருத்துக்கணிப்பு முடிவுகள்.. காங்கிரஸ் அவ்ளோதானா? அடித்து நொறுக்கும் பாஜக!
டெல்லி: ஜீ நியூஸ் - மேட்ரைஸ் நிறுவனம் இணைந்து நடத்திய லோக்சபா தேர்தல் கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, 390 தொகுதிகளை பாஜக கூட்டணி கைப்பற்றும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போ இந்தியா கூட்டணி?
மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான மகக்ளவைத் தேர்தல் தேதி நாளை அறிவிக்கப்பட உள்ளது. மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு விரைவில் நடைபெற உள்ள நிலையில், இந்த தேர்தலில் எந்த கட்சி வெற்றி பெறும், அடுத்த பிரதமராக போவது யார் என்று பல்வேறு முன்னணி நிறுவனங்களும் கருத்துக்கணிப்பு நடத்தி வருகின்றன.

அந்த வகையில் 2024 மக்களவை தேர்தலில் நாடு முழுவதும் உள்ள தொகுதிகளில் மக்களின் ஆதரவு யாருக்கு என்ற பிரம்மாண்ட கருத்துக்கணிப்பை ஜீ நியூஸ் நிறுவனம் மேட்ரைஸ் நிறுவனத்துடன் இணைந்து நடத்தியது.
390 தொகுதிகளில் பாஜக கூட்டணி: அதன்படி வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி 390 இடங்களைக் கைப்பற்றும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் இந்தியா கூட்டணி 96 இடங்களில் மட்டுமே வெற்றி பெறும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. மற்றவர்கள் 57 இடங்களில் வெற்றி பெறுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநில வாரியாக: ZEE News-Matrize இன் கருத்துக் கணிப்பின்படி, நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தர பிரதேசத்தில் 78 இடங்களை பாஜக கூட்டணியும், 2 இடங்களில் மட்டும் இந்தியா கூட்டணியும் வெற்றி பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பீகார் மாநிலத்தில் மொத்தமுள்ள 40 இடங்களில், பாஜகவின் என்.டி.ஏ கூட்டணி 37 இடங்களிலும், இந்தியா கூட்டணி 3 இடங்களிலும் வெற்றி பெறக்கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
கோவாவில் NDA 2 இடங்களைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. லட்சத்தீவு மற்றும் புதுச்சேரியில் உள்ள தலா ஒரு இடங்களில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீரை பொறுத்தவரை பாஜக கூட்டணி இரண்டு இடங்களை வெல்லலாம், அதே நேரத்தில் இந்தியா கூட்டணி ஜம்மு காஷ்மீரில் மூன்று இடங்களைப் பெற வாய்ப்புள்ளது என ஜீ நியூஸ் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்கத்தைப் பொறுத்தவரை மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 24 இடங்களிலும், பாஜக 17 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி ஒரே ஒரு இடத்திலும் வெல்ல வாய்ப்ப்புள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ZEE News-Matrize கருத்துக் கணிப்புகளின்படி, தெலுங்கானாவில் காங்கிரஸ் 9 இடங்களிலும், பாஜக 5 இடங்களிலும் வெற்றி பெறக்கூடும், மற்றவர்கள் 3 இடங்களில் வெற்றி பெற வாய்ப்புள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜீ நியூஸ் கருத்துக் கணிப்பின்படி, மத்தியப் பிரதேசத்தில் பாஜக மீண்டும் அதிக இடங்களைக் கைப்பற்றும். மாநிலத்தில் மொத்தமுள்ள 29 மக்களவைத் தொகுதிகளில் பாஜக 28-ஐயும், சிந்த்வாரா தொகுதியில் மட்டும் கடந்த முறையைப் போலவே காங்கிரஸ் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒட்டுமொத்தமாக: தென் மாநிலமான கர்நாடகாவில் NDA 23 இடங்களிலும், காங்கிரஸ் 5 இடங்களிலும் வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக, 390 தொகுதிகளை பாஜகவும், 96 இடங்களில் காங்கிரஸ் கட்சியும், 57 இடங்களில் மற்ற கட்சிகளும் வெல்லும் என இந்தக் கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் மொத்தமுள்ள 543 மக்களவைத் தொகுதிகளையும் உள்ளடக்கி, பிப்ரவரி 27 முதல் மார்ச் 13 வரை நடத்தப்பட்ட மெகா கருத்துக்கணிப்பில், 1 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பங்கேற்றனர், 14,799 முதல் முறை வாக்காளர்களின் கருத்துகளும் சேர்க்கப்பட்டுள்ளன என்று ஜீ நியூஸ் தெரிவித்துள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications