ஆஹா இதை பாருங்களேன்.. பாட்டுக்கு வைப் செய்த சொமேட்டோ ஊழியர்.. இணையத்தை கலக்கும் வீடியோ
டெல்லி: சொமேட்டோவின் உணவு டெலிவரி செய்யும் இளைஞர் ஒருவர் திருமண வீட்டிற்கு முன்னால் நின்று, அங்கு ஒலிக்கும் பாடலுக்கு ஏற்றவாறு டேன்ஸ் ஆடி வைப் செய்யும் வீடியோ ஒன்று இன்ஸ்டாகிராமில் பரவி வருகிறது.
அவசரமான இந்த காலத்தில் வீட்டில் உணவு செய்து கொண்டு செல்வதென்பது எல்லா நேரங்களிலும் சாத்தியமில்லாததாக இருக்கும் நிலையில், நமக்கான உணவு தேவையை சொமேட்டோ, ஸ்விக்கி போன்ற உணவு டெலிவரி நிறுவனங்கள் பூர்த்தி செய்கின்றன. ஆனால் இவ்வாறு உணவு டெலிவரி செய்ய வரும் நபர்களை வளர்ப்பு நாய்களை விட்டு கடிக்க வைப்பது, அடுக்கு மாடிகளில் லிஃப்ட்களை பயன்படுத்தவிடாமல் படியேற வைப்பது போன்ற கொடுமைகளை சிலர் செய்துகொண்டு வருகின்றனர்.
அப்படி இருந்தும் கூட உரிய நேரத்தில் உணவை அவர்கள் டெலிவரி செய்ய தவறுவதில்லை. இதற்கிடையில் வெயில், மழை, ட்ராஃபிக், போக்குவரத்து காவலர்கள் பிரச்னை, சாலை விபத்துகள் என எல்லாவற்றையும் கடந்து இந்த பணியை சிறப்பாக செய்து வருகின்றனர். வாய்ப்பு கிடைக்கும் போது அவர்கள் தங்கள் மகிழ்ச்சியை பிறருடனும் பகிர்ந்துகொள்கின்றனர்.

உணவு டெலிவரி ஊழியர்
அப்படி சில நாட்களுக்கு முன்னர் வெளியான ஒரு வீடியோ பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது. அதாவது டெல்லி என்சிஆர் பகுதியில் உணவு டெலிவரி பணியில் உள்ள இளைஞர் ஒருவர் ரோட்டில் வண்டியை திடீரென நிறுத்தியுள்ளார். பின்னர் நடு ரோட்டுக்கு சென்று அங்கு ஒரு மினி குத்தாட்டம் போட்டு வைப் செய்துள்ளார். இந்த வீடியோ டிவிட்டரில் வேகமாக பரவிய நிலையில், சம்மந்தப்பட்ட டெலிவரி ஊழியருக்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் குரல்கள் பல எழுந்திருந்தன. அதாவது தாங்கள் உணவுக்காக காத்திருக்கும் நிலையில், டெலிவரி ஊழியர் ஜாலியாக நடு ரோட்டில் குத்தாட்டம் போட்டு வைப் செய்துகொண்டிருப்பது சரிதானா? என்று சிலர் கேள்வி எழுப்பினர்.

டெல்லி
இன்னும் சிலர், டெலிவரி ஊழியரின் நடன திறமையை பார்த்து பாராட்டியுள்ளனர். அவர் சிறப்பாக நடனமாடுவதாகவும், எனவே வாய்ப்பு கிடைத்தால் நடன போட்டிகளில் பங்கேற்கலாம் எனவும் கூறியுள்ளனர். இந்நிலையில், தற்போது மற்றொரு வீடியோ மீண்டும் பேசுபொருளாகியுள்ளது. இந்த வீடியோவை புல்கிட் கோச்சார் என்பவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருக்கிறார். வீடியோவில் சொமேட்டோ டெலிவரி ஊழியர் திருமண வீட்டிற்கு வெளியே ஆளில்லாத இடத்தில் நின்று வீட்டினுள் இருந்து ஒலிக்கும் பாட்டுக்கு நடனமாடி வைப் செய்துகொண்டிருக்கிறார்.

வைப் செய்த டெலிவரி ஊழியர்
அதேபோல திருமண வீட்டின் மாடியில் இந்த பாட்டுக்கு உறவினர்கள் அனைவரும் நடனமாடிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் டெலிவரி ஊழியர் மட்டும் தனியாக நடனமாடிக்கொண்டிருக்கிறார். இந்த வீடியோ தற்போது வரை 46,000க்கும் அதிகமானோர் கண்டு ரசித்திருக்கின்றனர். 5,000க்கும் அதிகமானோர் லைக்குகளை தெரிவித்துள்ளனர். பலரும் வீடியோ குறித்து தங்களது கருத்துக்களை பகிர்ந்துக்கொண்டுள்ளனர். அதில், "நான் அந்த இடத்தில் இருந்திருந்தால் அவரை உணவுக்கு அழைத்திருப்பேன்" என ஒருவர் கூறியுள்ளார். மற்றொருவர், "இது மிகவும் அற்புதமான நடனம்" என்று கூறியுளார்.

போராட்டம்
வேறு ஒருவர், "இது மிகவும் ஆரோக்கியமான விஷயம்" என்று கூறியுள்ளார். கடந்த சில நாட்காளாக இவ்வாறு உணவு டெலிவரி செய்யும் ஊழியர்களுக்கு போதுமான அளவு ஊதியம் கொடுக்கப்படவில்லை என்று அவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல எவ்வித முன்னறிவிப்பும் இன்றி தாங்கள் உடனடியாக பணியிலிருந்து நீக்கப்படுகிறோம் என்றும் குற்றம்சாட்டியுள்ளனர். இந்நிலையில் இதுபோன்ற வீடியோக்களை ரசிக்கும் மக்கள் தங்களின் போராட்டங்களுக்கும் ஆதரவு தெரிவிக்க வேண்டும் எனவும் ஊழியர்கள் வலியுறுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications