ராக்கெட் வேகத்தில் உயரபோகும் தங்கம்..! சாமானிய மக்கள் தலையில் இடி..! மோடி அறிவிப்பால் புது பிரச்சனை!

Subscribe to Oneindia Tamil

மத்திய அரசு தங்கம் மற்றும் வெள்ளி இறக்குமதி மீதான சுங்க வரியை 6 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக உயர்த்தியுள்ளது. அதேபோல், பிளாட்டினம் இறக்குமதி மீதான வரியை 6.4 சதவீதத்தில் இருந்து 15.4 சதவீதமாக அதிகரித்துள்ளது.

இந்த அதிரடி முடிவு, மத்திய கிழக்கு போரின் காரணமாக ஏற்பட்டுள்ள அந்நிய செலாவணி பாதிப்பை கட்டுப்படுத்தும் நோக்கில் எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தங்கம், வெள்ளி சார்ந்த பிற பொருட்களான தங்கம் - வெள்ளி டோர், நாணயங்கள் மற்றும் பிற தொடர்புடைய பொருட்களின் மீதான வரியும் உயரும் காரணத்தால் ஒட்டுமொத்த உலோக சந்தையும் இறக்குமதி வரி உயர்வால் பாதிக்கப்பட்டு உள்ளது.

Gold silver tax Gold Import Duty Hike India 15 Gold Silver Duty Modi Government Forex Crisis West Asia Conflict Gold Imports Rising Gold Prices India india gold import duty hiked to 15 percent silver import duty 15 percent platinum duty 15 4 percent west asia crisis forex pressure india modi government gold duty increase gold silver dore coins import tax 10 percent basic customs duty gold 5 percent aidc gold silver india foreign exchange reserves protection non essential imports moderation rising gold prices for consumers compounded tax impact on gold macroeconomic stability gold duty current account deficit gold imports india precious metals import duty 2026 15 15 4 10 5 AIDC 2026

மக்களுக்கு என்ன பாதிப்பு

இந்தியாவில் ரீடைல் சந்தைக்கு வரும் தங்கம் சர்வதேச தங்கத்தின் விலையுடன் தங்கம் இறக்குமதிக்கு தற்போது விதிக்கப்பட்டுள்ள 15 சதவீத இறக்குமதி வரியுடன் 3 சதவீத IGST வரியும் சேர்ந்து விற்கப்படுகிறது. இதனாலேயே சர்வதேச விலைக்கும், இந்திய சந்தை விலைக்கும் பெரிய வித்தியாசம் உருவாகிறது. ஆனால் இந்த வரி இதோடு நிற்கவில்லை.

இதன் பின்னர் ரீடைல் சந்தையில் இருந்து மக்கள் கைக்கு வரும் போது, இந்த விலை மேலும் ஜிஎஸ்டி வரிகள், செய்கூலி, சேதாரம், ரீடைல் வியாபாரிகளின் லாபம் ஆகியவற்றால் கூடுதலாக அதிகரிக்கப்படுகிறது. இதனால் இறுதி விலை சர்வதேச சந்தை விலையை விட பெருமளவு உயர்ந்து நுகர்வோருக்கு கூடுதல் சுமையாக மாறுகிறது. தற்போதைய இறக்குமதி வரி மூலம் ரீடைல் விலை பெரிய அளவிலான மாற்றம் காணப்போகிறது.

ஏன் இந்த முடிவு?

தற்போது மேற்கு ஆசியாவில் நிலவும் போர் பதற்றம் உலகளாவிய பொருளாதாரத்தை பாதித்து வருகிறது. இந்த நெருக்கடி இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு மற்றும் வெளிப்புற கணக்கு (external account) மீது கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழ்நிலையில் தான் மோடி மக்களை வாங்க வேண்டாம் என அறிவித்தார்.

இந்த சூழலில் அரசு தங்கம், வெள்ளி போன்ற டாலர் இருப்பை வேகமாக காலி செய்யும் இறக்குமதிகளை கட்டுப்படுத்த முடிவு செய்துள்ளது. இந்த வரி உயர்வு மூலம் நாட்டின் பொருளாதாரத்தை பாதுகாக்கவும், அந்நிய செலாவணியை சேமிக்கவும், தேவையற்ற இறக்குமதிகளை குறைக்கவும் மத்திய அரசு திட்டம் கொண்டுள்ளது.

ஏப்ரல் மாத தாக்கம்

மத்திய அரசு ஏற்கனவே வங்கிகள் இறக்குமதி செய்யும் தங்கத்திற்கு 3 சதவீதம் IGST வரி விதிக்கப்பட்டது மூலம் ஏப்ரல் மாதம் நாட்டில் தங்க இறக்குமதி சுமார் 30 ஆண்டு கால குறைவான அளவீட்டை பதிவு செய்த நிலையில் தற்போது இறக்குமதி வரியை 15 சதவீதமாக உயர்த்தியுள்ளது. இதன் மூலம் மே மாதத்திலும் இறக்குமதி வரி குறைய உள்ளது.

வரி உயர்வு விவரங்கள்

தங்கம் மற்றும் வெள்ளி இறக்குமதிக்கு இனி 10 சதவீத அடிப்படை சுங்க வரியுடன் 5 சதவீத விவசாய உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு வரி (AIDC) விதிக்கப்பட்டுள்ளது. இதனால் மொத்த வரி 15 சதவீதமாக உயர்ந்துள்ளது. பிளாட்டினம் இறக்குமதிக்கும் இதே வரி விகிதங்கள் பொருந்தும்.

இந்த வரி உயர்வு தங்கம் - வெள்ளி மட்டும் அல்லாமல் இந்த உலோகத்தின் தாது அதாவது தங்கம் - வெள்ளி டோர், நாணயங்கள் மற்றும் இது தொடர்புடைய பிற பொருட்களுக்கும் பொருந்தும்.

தங்கம் மற்றும் வெள்ளி போன்ற உலோகங்கள் இறக்குமதி அதிகரித்தால் அந்நிய செலாவணி வெளியேற்றம் அதிகரிக்கும். இதை வரி மூலம் கட்டுப்படுத்துவதன் மூலம் அந்நிய செலாவணி வெளியேறுவது குறையும். ஆனால் இந்த வரி உயர்வால் தங்கம், வெள்ளி விலையை சற்று அதிகரிக்கக்கூடும் என்றாலும், நீண்டகாலத்தில் நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த உதவும் என்று அரசு தரப்பு நம்புகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+