டிடிவி தினகரனுக்கு சட்டசபையில் நோஸ் கட் கொடுத்த காமராஜ்.. 5 வருஷமும் விஜய்க்குதான் ஆதரவாம்
சென்னை: சட்டமன்ற தேர்தலில் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றாலும் தவெக ஆட்சி அமைப்பதற்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. திமுக கூட்டணி கட்சிகளான சிபிஎம், சிபிஐ,
விசிக, ஐயூஎம்எல் ஆதரவுடன் தவெக ஆட்சியை பிடித்துள்ளது. தவெக 13ம் தேதிக்குள் (இன்று) சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர் உத்தரவிட்டார். அதன்படி தவெக ஆட்சியை நிரூபிப்பதற்கான நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்று வருகிறது. தவெகவுக்கு ஆதரவளிப்பதாக அமமுகவில் இருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ காமராஜ் கூறியுள்ளார்.

சட்டமன்ற தேர்தலில் திமுக, அதிமுக, தவெக, நாம் தமிழர் என்று நான்கு முனை போட்டி நிலவியது. இதில் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. 108 தொகுதிகளில் தவெக வெற்றி பெற்றிருந்தாலும் ஆட்சியமைப்பதற்கு தேவையான 118 தொகுதிகள் அவர்களுக்கு கிடைக்கவில்லை. இதனால் விஜய் முதல்வராக பதவியேற்பதில் சிக்கல் ஏற்பட்டது. சிபிஎம், சிபிஐ, விசிக, ஐயூஎம்எல் ஆதரவுடன் தவெக ஆட்சியை பிடித்துள்ளது.
மேலும் அதிமுகவில் வேலுமணி அணி மற்றும் அமமுக எம்எல்ஏ காமராஜ் ஆகியோர் தவெகவுக்கு ஆதரவளிப்பதாக கூறியுள்ளனர். ஆளுநரின் உத்தரவுப்படி தவெக ஆட்சிக்கான பெரும்பான்மையை நிரூபிப்பதற்கு சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்று வருகிறது. அப்போது பேசிய அமமுக (நீக்கப்பட்ட) எம்எல்ஏ காமராஜ், "கட்சி தொடங்கிய இரண்டே ஆண்டுகளில் ஆட்சியை பிடித்து முதல்வராகியுள்ளார் விஜய்.
தவெகவுக்கு என்னுடைய முழுமையான ஆதரவை தெரிவிக்கிறேன். நேற்றும் ஆதரிக்கிறேன், இன்றும் ஆதரிக்கிறேன், நாளையும் ஆதரிப்பேன். தமிழகத்தை காப்பாற்ற வந்துள்ள முதல்வர் என்னை மட்டும் காப்பாற்றாமல் விட்டுவிடுவாரா. முதல்வர் என்னையும், மன்னார்குடி தொகுதியையும் காப்பாற்ற வேண்டும். முதல்வர் பதவியேற்று 4 நாட்கள் தான் ஆகிறது. திருச்சியில் 300க்கும் மேற்பட்ட ரவுடிகள் தானாக சரண்டராகி வருகிறார்கள்.
தமிழகத்திற்கு நல்ல தலைவர் கிடைத்துள்ளார். கஞ்சா விற்றவர்கள், கள்ள கடத்தல், கட்ட பஞ்சாயத்து செய்தவர்கள் எல்லாம் எங்கு சென்றார்கள் என தெரியவில்லை. அரசும், அரசியலும் தேடி வந்த ஒரே நபர் முதல்வர் விஜய்" என்றார். அவர் பேசி கொண்டிருக்கும்போது அதிமுக, திமுக உறுப்பினர்கள் அவரின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் சட்டமன்றத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
முன்னதாக காமராஜ் தவெகவுக்கு ஆதரவு என்று கூறியதால், அவரை கட்சியில் இருந்து நீக்குவதாக அமமுக பொதுச்செயலர் நேற்று அறிவித்தார். அதையும் மீறி அவர் தவெகவுக்கு எப்போதும் ஆதரவு என்று உறுதியாக பேசியிருப்பது தினகரனுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
17 துறைகளில் உள்ள அசுர பலம் காலி? ஆதரவாளர்களுடன் தவெகவில் இணைந்த கமலக்கண்ணன்.. அதிமுகவுக்கு பேரிடி! -
விஜய்க்கு சிக்கல்? எம்எல்ஏக்கள் ராஜினாமாவை விசாரிக்கும் சிபிஐ- அமலாக்கத்துறை? அதிமுக எம்பி ஐடியா -
தவெகவில் இணைய திட்டமா? ஆதரவாளர்களுடன் ஆலோசித்த பின் விஜயபாஸ்கர் சொன்ன பதில் -
விஜயபாஸ்கரின் முயற்சிக்கு முட்டுக்கட்டை.. தவெகவில் கிளம்பிய புகைச்சல்.. ஆட்டத்தை மாற்றிய டெல்லி -
போன முறை.. உலக நாடுகளே வியக்கும் வகையில் உதயநிதி நடத்தினாரே! உலக செஸ் சாம்பியன்ஷிப்.. கைவிட்ட தவெக? -
திருச்செந்தூர் கோயிலில் அமைச்சரிடமே லஞ்சம்.. அர்ச்சகர் பூஜை செய்ய தடை.. 2 காவலாளிகள் சஸ்பெண்ட்! -
பரிசு வேண்டாம்.. நோட்டு கொடுங்க.. அரசுப் பள்ளி மாணவர்களுக்காக இறங்கிய தவெக அமைச்சர் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
கும்பகோணத்தில் “காவலர் தேவநாதன் கையை முறித்த த.வெ.க.வினர்” என்ற செய்தியே தவறு.. காவல்துறை விளக்கம் -
மருத்துவமனை முதல் பேருந்து வரை.. ஆய்வு என்ற பெயரில் அதிகரிக்கும் அட்ராசிட்டி.. கடிவாளம் போடுமா தவெக? -
அரசு மருத்துவமனையில் தந்தையை அனுமதித்து இரவு முழுவதும் தங்கிய அமைச்சர் மதன் ராஜாவுக்குப் பாராட்டு












Click it and Unblock the Notifications