முதல் நாளே வார்னிங்.. விஜய் முகத்தை பார்க்கனுமே! சிபிஎம் எம்எல்ஏ பேச்சால் சட்டமன்றத்தில் பரபரப்பு!
சென்னை: தமிழக சட்டமன்றத்தில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கிறது. முன்னதாக வாக்கெடுப்பின் மீது உரையாற்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற குழு தலைவர் செல்லசுவாமி, தவெக அரசுக்கு வார்னிங் கொடுத்திருக்கிறார்.
செல்லசுவாமி பேசியதாவது, "தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் எந்த ஒரு கட்சிக்கும் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் வகையில் தமிழக மக்கள் தீர்ப்பு அளிக்கவில்லை. அதேபோல தமிழக வெற்றி கழகத்தை தனிப்பெரும் கட்சி ஆக தமிழக மக்கள் தேர்வு செய்திருக்கின்றனர்.

பிளவுவாத சக்தி
இந்தியா முழுவதும், தமிழகத்திலும் மக்களை பிளவுபடுத்தி அரசியல் ஆதாயம் தேடி வரும் சக்திகளை, தமிழக மக்கள் முழுவதுமாக நிராகரித்திருக்கிறார்கள். மறுபுறம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தவெகவை ஆட்சியில் அமர்த்த நடவடிக்கை எடுக்காமல், குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்த மறைமுகமாக ஆளுநரின் செயல்பாடுகள் அமைந்திருந்தன.
ஆளுநரின் செயல்
தமிழக மக்களுக்கு தீர்ப்புக்கு மாறாக, குடியரசுத் தலைவர் ஆட்சி அமைக்கப்படும் ஆபத்திலிருந்து காப்பாற்றும் நோக்கத்தோடும், தவெக மக்கள் நலன், மாநிலத்தின் வளர்ச்சி என்கிற குறிக்கோளோடு நிலையான ஆட்சி அமையும் இந்த அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிலிருந்து ஆதரவு அளிப்பது என்று முடிவெடுத்துது.
வார்னிங் கொடுத்த எம்எல்ஏ
மார்க்சிஸ்ட் கட்சியை பொறுத்தவரை, இந்த அரசு மக்கள் நலனுக்காக திட்டங்களை அறிவிக்கும்போது அதை வரவேற்கும். அதே சமயத்தில் மக்களுக்கு பாதகம் அளிக்கும் என்றால் அதை எதிர்த்து குரல் கொடுப்பதற்கும் தயங்காது.
அதேபோல தமிழக அரசுக்கு மத்திய அரசிடமிருந்து உரிய பங்கு கிடைப்பதிலும், பேரிடர், கல்வி நிதி உள்ளிட்டவைகளை பாரபட்சமின்றி கேட்டு பெறுவதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இந்த ஆட்சிக்கு உறுதுணையாக இருக்கும்.
டிமாண்ட் வைத்த மார்க்சிஸ்ட் கட்சி
இந்த அரசாங்கம் மதச்சார்பின்மை, எளிய மக்களை உள்ளடக்கிய வளர்ச்சி, கூட்டாட்சி, சமூகநீதி கோட்பாடுகளை உயர்த்தி பிடிக்கவும் தமிழக சட்டமன்றம் கடைபிடித்து வரும் மாண்புகளை உயர்த்தி பிடிக்கவும், ஏழை எளிய உழைப்பாளி மக்களின் விருப்பத்தை திறம்பட செயல்படுத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தெரிவிக்கிறோம். அந்த வகையில் இந்த அரசுக்கு முழுமையான ஆதரவளிக்கிறோம்" என்று பேசியிருந்தார்.
தனது உரையில், மக்களுக்கு பாதகமான செயல்கள் அமல்படுத்தப்படும் எனில், அரசுக்கு எதிராக கட்சி போராடும் என்று செல்லசுவாமி பேசியிருப்பது சட்டமன்றத்தில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. முதல் நாளே இப்படி வார்னிங் கொடுக்க வேண்டுமா? என்று விஜய் அப்செட் அடைந்திருக்கிறார்.
-
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்!












Click it and Unblock the Notifications