சிறகடிக்க ஆசை: விஜயா ஏற்படுத்திய கலகம்.. முத்துவுக்கு தெரிந்த விஷயம்! சிக்கும் மனோஜ்! இப்படி சொதப்புராங்களே
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் (Siragadikka Aasai serial) சிறகடிக்க ஆசை சீரியலில் 2026 ஏப்ரல் 13-ஆம் தேதிக்கான எபிசோடடில், விஜயாவிற்கு ஸ்ருதி வீட்டில் பெரிய அவமானம் நடக்கிறது. இதனால் கோபப்பட்ட விஜயா வீட்டை விட்டு காணாமல் போகிறார். அதே நேரத்தில் மனோஜ் வசமாக சிக்கி இருக்கிறார் என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.

சிறகடிக்க ஆசை சீரியல் இன்றைய எபிசோடு
(Siragadikka Aasai serial today May 13th episode )சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில், விஜயா ஸ்ருதியின் அம்மாவை கண்டபடி திட்டுகிறார். என்ன பார்த்தா எப்படி தெரியுது? நான் கற்றுக் கொண்டது பரதம். அதை இப்படி குடித்து கூத்தடிப்பவர்கள் மத்தியில் ஆடுவதா? உங்களுக்கு அறிவே இல்லையா? நான் இங்க வரலைன்னு சொல்லிட்டே இருக்கிறேன் நீங்க இப்படி என்னை கட்டாயப்படுத்திட்டு இருக்கிறீர்களே என்று கோபப்பட்டு திட்டுகிறார்.

அதற்கு ஸ்ருதி அம்மா நீங்கதான் என்னை அசிங்கப்படுத்துறீங்க. இத்தனை பேர் முன்னாடி இப்படி கத்தி பேசுறீங்களே உங்களுக்கு இங்கிதம் கொஞ்சம் கூட தெரியலையா என்று கேட்க, அதற்கு விஜயா மீண்டும் கோபப்பட்டு திட்டிவிட்டு ரூமுக்கு போய் விடுகிறார். இதனால் ஸ்ருதி அம்மா கடுப்பாகி மனதிற்குள்ளேயே விஜயாவை திட்டுகிறார்.

வீட்டை விட்டு போன விஜயா
பிறகு மறுநாள் காலையில் ரவியும் துதியும் விஜயாவை காணவில்லை என்று தேடிக் கொண்டிருக்கின்றனர். அப்போது ஸ்ருதி தன்னுடைய அம்மாவிடம் கோபப்பட்டு திட்டுகிறார். அவங்க வீட்டில் இப்படி எல்லாம் பார்ட்டி பண்றது கிடையாது. அவங்க வரலைன்னு சொன்ன பிறகும் எதுக்காக அவங்கள தொந்தரவு பண்ணி இப்படி வீட்டை விட்டு வெளியே அனுப்பி வச்சிட்டீங்க என்று திட்டுகிறார்.
கோபத்தில் ஸ்ருதி
அதற்கு ஸ்ருதி அம்மாநான் அவங்களுக்கு நல்லது தான் பண்ணுனேன். அவங்க ரொம்ப சோகத்தில் இருந்தாங்க. அதனால எல்லாரும் பேசி சந்தோசமா இருந்தா மனசு மாறுவாங்களான்னு நினைச்சேன் ஆனா இப்படி அவங்க வீட்டை விட்டு போவாங்கன்னு நினைக்கல. அவங்களால எங்களுக்கு தான் அசிங்கம் என்று சொல்கிறார்.

சிக்கும் மனோஜ்
ஆனாலும் ஸ்ருதி அம்மாவை திட்டிவிட்டு, பிறகு விஜயாவை தேடி ரவியுடன் வீட்டை விட்டு கிளம்புகிறார். மறுபக்கத்தில் மனோஜ் ரோகிணியுடன் ரொமான்ஸாக பேசிக் கொண்டிருக்கிறார். ரோகிணி நேற்று இரவு நல்லா தூங்குனியா என்று கேட்க மனோஜும் வெட்கப்பட்டு சிரித்தபடியே ஆமாம் என்று சொல்கிறார்.
அந்த நேரத்தில் கதவு தட்டப்படுகிறது, யாராக இருக்கும் என்று இருவரும் யோசித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் விஜயாவின் குரலைக் கேட்டு மனோஜ் அதிர்ச்சி அடைகிறார். பிறகு ரோகிணியை ஒளிந்து இருக்க சொல்லிவிட்டு விஜயாவை உள்ளே கூப்பிடுகிறார்.
விஜயா கொடுத்த அதிர்ச்சி
ஆனால் விஜயா ஸ்ருதியின் வீட்டில் நடந்த விஷயம் முழுவதையும் சொல்லாமல் என்னால் அந்த வீட்டில் இருக்க முடியல அதனால இங்க வந்துட்டேன் இனி நான் இங்கதான் இருக்க போறேன். நான் இங்கே இருந்தால்தான் முத்து வீட்டை மீண்டும் திருப்புவதற்கான வேலையை பார்ப்போம் என்று சொல்லிக் கொண்டு உட்கார்ந்திருக்கிறார். ஆனால் மனோஜ் ரோகிணியை பார்த்து விட்டால் பிரச்சனையாகி விடுமே என்று பயந்து விஜயாவை பாத்ரூம் அனுப்பிவிட்டு ரோகிணியை வெளியே போக வைக்கிறார்.
விஜயா பாத்ரூமில் ஒரு ஸ்டிக்கர் போட்டு ஒட்டப்பட்டு இருந்ததை வைத்து மனோஜிடம் கேள்வி கேட்க, அதற்கு மனோஜ் இது கடையில் வேலை பார்க்கிறவங்க பண்ணி இருப்பாங்க என்று சமாளிக்கிறார். மறுபக்கத்தில் முத்து ஸ்போக்கன் இங்கிலீஷ் கிளாஸில் மீனாவுடன் இருக்கிறார். ஸ்வேதா கிளாஸ் எடுக்கும் சமயத்தில் ரவியும் ஸ்ருதியும் அங்கே வருகின்றனர்.
முத்து எடுத்த முடிவு
அவர்கள் முத்து மீனாவை தனியாக கூப்பிட்டு வீட்டில் நடந்த விஷயத்தையும், விஜயா காணாமல் போனதையும் சொல்கின்றனர். அதற்கு முத்து அம்மா வேற எங்கேயும் போயிருக்க மாட்டாங்க மனோஜ் ஷோரூம் போயிருப்பாங்க நீங்க வீட்டுக்கு போங்க நாங்க போய் அவங்களை சமாதானப்படுத்தி கூட்டிட்டு வரோம் என்று சொல்லி ரவி, ஸ்ருதியை அனுப்பி வைக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது. இனி என்ன நடக்க போகிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.













Click it and Unblock the Notifications