உங்க குடும்பமே நாசமா போகும்.. போலீசுக்கு நடுரோட்டில் உருண்டபடி சாபமிட்ட சாமியார்..ஷாக்
தர்மபுரி: ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் செல்ல சாமியார் ஒருவருக்கு அனுமதி அளிக்க போலீசார் மறுத்து விட்டனர். இதனால் அந்த சாமியார் - நடுரோட்டில் உருண்டு பொறண்டு, போலிசாரின் குடும்பத்திற்கே சாபம் விட்டார்.
Recommended Video
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் அருவிகளில் குளிக்கவும், படகு சவாரி மேற்கொள்ளவும், சுவைமிகுந்த மீன் உணவுகளை ருசித்து சாப்பிடுவதற்கு தமிழகம் மட்டுமல்லாது .
அண்டை மாநிலங்களிலிருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருவது வழக்கம், அதிலும் சனி மற்றும் ஞாயிறு ஆகிய வார இறுதி நாட்களில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அலைமோதும்.

சுற்றுலா பயணிகள்
கொரோனா பெருந்தொற்று பரவலை தடுக்கும் நடவடிக்கையாக ஒகேனக்கல் சுற்றுலா தளத்திற்கு சுற்றுலா பயணிகள் செல்ல இல்லை என மாவட்ட நிர்வாகம் சார்பில், கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக விதிக்கப்பட்ட தடை தொடர்ந்து நீடித்து வருகிறது.

ஊரடங்கு தளர்வு
தற்பொழுது ஊரடங்கு தளர்வு படிப்படியாக அறிவிக்கப்பட்டு பல்வேறு சுற்றுலாத் தலங்கள் திறக்கப்பட்டுள்ளன. ஒகேனக்கல் சுற்றுலா தளம் செயல்பட மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்காததால் சுற்றுலா தளம் இன்னும் திறக்கப்படாமலே உள்ளது.

போலீசார் தடுப்பு
இந்நிலையில் ஒகேனக்கல்லுக்கு வாகனங்களில் வரும் சுற்றுலா பயணிகளை பென்னாகரம் அடுத்த மடம் பகுதியில் உள்ள வாகன சோதனை சாவடியில் நிறுத்தி அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் போலீசார், சுற்றுலா தளம் செல்வதற்கு இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை என்று சொல்லி திருப்பி அனுப்பி வருகின்றனர்.

கோரிக்கை
ஒரு சிலர் தங்களுக்கு ஒகேனக்கல் செல்ல அனுமதி வழங்க வேண்டும் என்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வரும் சம்பவம் தினசரி நடந்தேறி வருகின்றது.

திருப்பி அனுப்பி வைத்தனர்
வழக்கம்போல காவல் துறையினர் மடம் சோதனை சாவடியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் உள்ள கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ய காரில் வந்த சாமியாரை தடுத்து நிறுத்தி அனுமதி இல்லை என்று திருப்பி அனுப்ப முயற்சித்தனர்

வீடியோ வைரல்
ஆத்திரமடைந்த சாமியார், தான் கோவிலுக்கு வந்ததாகவும், அனுமதியில்லாததால் நடுரோட்டிலேயே உருண்டு பெறண்டு, பின்பு அனுமதியளிக்காத போலிசாரின் குடும்பம் இன்னும் 6 மாதத்தில் நாசமாக போய்விடும் என்று சாபம் விட்டு சென்றுள்ளார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைகளில் வைரலாகி வருகிறது.
-
காஞ்சிபுரம் படப்பையில்.. முதியவருக்கு பட்டை நாமம் போட்ட தவெக பெண் நிர்வாகி! 9 லட்சம் அபேஸ்! -
டெல்லி ரிட்டர்ன்.. விஜய் செய்யும் முதல் வேலை.. சென்னையில் நாளை சம்பவம்.. சிங்கப் பெண் அதிரடிப்படை! -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
தெலுங்கு நடிகை தற்கொலை வழக்கில் ட்விஸ்ட்.. மாமியாரை தூக்கிய சிபிஐ.. விசாரணையில் திருப்பம் -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
நெல்லை கவின் ஆணவக்கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. கைதானார் சுர்ஜித்தின் தாய் எஸ்.ஐ கிருஷ்ணகுமாரி -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்?












Click it and Unblock the Notifications