தர்மபுரியில் கர்ப்பிணி வழக்கில் திருப்பம்.. கணவனின் வில்லங்க ஆசை.. சிக்கிய இரண்டு பெண்கள்
தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் ஏரியூர் அருகே உள்ள பூச்சூரை சேர்ந்த கண்ணனுக்கு ரம்யா என்பவருடன் 8 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இதில் கர்ப்பிணியாக இருந்த ரம்யா, மாடிப்படியில் இருந்து தவறி விழுந்த காலமானார் என்று கூறியிருக்கிறார்கள். ஆனால் விசாரணையில், அந்த பெண்ணுக்கு 3-வதும் பெண் குழந்தை என்பதால் சட்ட விரோத கருக்கலைப்பு செய்திருக்கிறார்கள். அப்போது உடல் நலக்குறைவில் இறந்ததை மறைத்து நாடகமாடிய கணவர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஆணா அல்லது பெண்ணா என்று பார்த்து சட்டவிரோத கருக்கலைப்பு செய்வது என்பத மிகப்பெரிய தண்டனைக்குரிய குற்றம் ஆகும். அதனால் ஏற்படும் அசம்பாவிதங்களுக்கு டாக்டர் மற்றும் உடந்தையாக இருந்த குடும்பத்தினர் மீது வழக்கு பாய்ந்துவிடும். ஆயுள் சிறைத்தண்டனை அல்லது 10 ஆண்டுகள் சிறை மற்றும் அபராதம் விதிக்கப்படும். அத்துடன் கருவில் உள்ளது ஆணா பெண்ணா என்று கண்டுபிடிக்கப்பட்ட விவகாரத்திலும் 3 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும். அந்த அளவிற்கு சட்டம் வலுவாக உள்ளது. ஆனாலும் சிலர் ஆண் குழந்தை ஆசையில் இன்னமும் கருக்கலைப்பு செய்கிறார்கள். தர்மபுரியில் நடந்த சம்பவம் பற்றி பார்ப்போம்.

தர்மபுரி மாவட்டம் ஏரியூர் அருகே உள்ள பூச்சூரை சேர்ந்த கண்ணன் 26 வயதாகும் ரம்யா என்பவரை 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்தார். ஏற்கனவே 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் ரம்யா மீண்டும் கர்ப்பம் தரித்தார். கடந்த 1-ந் தேதி ரம்யா மாடிப்படியில் இருந்து தவறி விழுந்து இறந்துவிட்டதாக அவரது கணவர் கண்ணன் உறவினர்களிடம் கூறியுள்ளார்.
ஆனால் ரம்யாவின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக அவரது உறவினர்கள் நம்பினார்கள். இதையடுத்து ஏரியூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் நடத்திய விசாரணையில், விசாரணையில் ரம்யாவிற்கு ஏற்கனவே 2 பெண் குழந்தைகள் உள்ளதால் அவரது கணவர் கண்ணன் சட்ட விரோதமாக கருவில் இருக்கும் குழந்தை ஆணா? பெண்ணா? என்பதை ஸ்கேன் மூலம் பரிசோதிக்க திட்டமிட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
சேலம் மாவட்டம், ஓமலூரை சேர்ந்த நர்சு சுகன்யா (35), புரோக்கர் வனிதா (35) ஆகியோருடன் சேர்ந்து ஸ்கேன் மூலம் ரம்யாவுக்கு பரிசோதனை நடத்த திட்டமிட்டாராம். இதையடுத்து 3-வது மாதம் என்பதால் வழக்கம் போல் தனியார் ஸ்கேன் மையத்திற்கு ரம்யாவை அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவர் பரிசோதிக்கப்பட்டதில், அவருக்கு 3-வதும் பெண் குழந்தை என்பதை நர்சு சுகன்யா உறுதிப்படுத்தினாராம்.
இதையடுத்து நர்சு சுகன்யா, புரோக்கர் வனிதா ஆகியோருடன் சேர்ந்து ரம்யாவிற்கு வீட்டில் வைத்து கருக்கலைப்பு செய்திட கண்ணன் திட்டமிட்டாராம். அதன்படி வீட்டில் கருக்கலைப்பும் ரம்யாவிற்கு நடந்துள்ளது. இதில் அதிக அளவில் ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஆபத்தான நிலையில் சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவனைக்கு ரம்யாவை கொண்டு வந்துள்ளனர்.
அப்போது அவர்கள் மாடிப்படியில் இருந்து ரம்ய தவறிவிழுந்து காயம் அடைந்து விட்டதாக கூறி உள்ளனர். இதையடுத்து கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பிய போது வழியில் கர்ப்பிணி இறந்து விட்டது என்பது விசாரணையில் தெரியவந்தது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்ததாக ரம்யாவின் கணவர் கண்ணன், நர்சு சுகன்யா, புரோக்கர் வனிதா ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications