நிறுத்துங்க..’இதை’ செய்யாத பாஜகவுடன் எதற்கு கூட்டணி..! ஷாக் ஆன செளமியா.. பதறிப் போன பாமக தலைகள்!
தருமபுரி: தருமபுரி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் வாக்கு சேகரித்த, பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணியிடம், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாத பாஜகவிடம் ஏன் கூட்டணி வைத்தீர்கள் என்று கேள்வி கேட்ட இளைஞரால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
நாடாளுமன்றத் தேர்தல் களம் சூடி பிடித்து வரும் நிலையில், வேட்பாளர்கள் தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இன்னும் ஒரு நாளே கால அவகாசம் இருக்கும் நிலையில் பிரச்சாரம் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

தருமபுரி நாடாளுமன்ற தொகுதியில் பாமக சார்பில் சௌமியா அன்புமணி போட்டியிடுகிறார். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் சௌமியா தீவிரமாக பிரச்சாரம் செய்து வாக்கு சேகரித்து வருகிறார்.
சௌமியா அன்புமணி : காவிரி- தர்மபுரி உபரி நீர் திட்டம், இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு, விவசாயிகள் முன்னேற்றத்திற்கான திட்டம் மற்றும் கிராமங்களுக்கு தேவையான அடிப்படை வசதி உள்ளிட்ட பாமகவின் வாக்குறுதிகளை கூறி வாக்கு சேகரித்து வருகிறார்.இந்நிலையில் பாப்பிரெட்டிப்பட்டி பகுதிகளில் வாக்கு சேகரித்தார். அப்பொழுது அ.புதுப்பட்டி, அ.பள்ளிப்பட்டி, கோபாலபுரம், மருக்காலம்பட்டி, பூதநத்தம், மெணசி உள்ளிட்ட கிராமங்களில் வாக்கு சேகரித்தார். அப்பொழுது பெண்கள் சௌமியாவிற்கு ஆரத்தி எடுத்து, பூ தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர்.
வாக்குறுதி: அப்போது பேசிய அவர்,"தருமபுரியில் விளையும் மா, புளி, தக்காளி, மரவள்ளி, கரும்பு ஆகியவற்றை மதிப்புக்கூட்டி சந்தைப்படுத்தவும், ஏற்றுமதி செய்யவும் வசதியாக, தருமபுரியில் சிறுதானிய உற்பத்தியை அதிகரிக்கவும், மதிப்புக் கூட்டி சந்தைப்படுத்தவும் சிறப்பு மண்டலம் அமைக்கப்படும், பட்டுப்புழு வளர்ப்பு மேம்பாட்டுக்கு சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று வாக்குறுதி அளித்தார்.
இளைஞரால் பரபரப்பு: பா.ம.க.வின் முயற்சியால் அறிவிக்கப்பட்டுள்ள இரண்டாம் கட்ட ஓகனேக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் ரூ.7840 கோடியில் செயல்படுத்தப்படுவதற்கு முழுமூச்சாக செயல்படுவேன். மேலும் பெண்களின் வேலைவாய்ப்புக்காக ஆயத்த ஆடை பூங்கா அமைக்கவும் நடவடிக்கை எடுப்பேன்." என பேசி வாக்கு சேகரித்தார். தொடர்ந்து பொதுமக்களிடம் வாக்கு சேகரித்த சௌமியா, பெண்களிடம் பேசிக்கொண்டு இருந்தார். அப்பொழுது திடீரென வந்த இளைஞர் ஒருவர் சௌமியாவிடம் பேசினார்.
பாஜகவுடன் கூட்டணி ஏன்?: அப்பொழுது 10.5 இட ஒதுக்கீடு கேட்டோம், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த கேட்டோம். ஆனால் அதை மத்திய அரசோ, பாஜகவோ செய்யவில்லை. ஆனால் பாஜகவோடு எதற்கு கூட்டணி சேர்ந்தீர்கள். என கேள்வி கேட்டார். அப்பொழுது சலசலப்பு ஏற்பட்டது. தொடர்ந்து பாமக வேட்பாளர் சௌமியா, இளைஞரை சமாதானப்படுத்த, இட ஒதுக்கீடு கொடுக்காததால் தான், நாம் அவர்களோடு சேரவில்லை என தெரிவித்தார். இதனால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. தொடர்ந்து அந்த இளைஞரை அழைத்து சென்றனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications