பெரும் சோகம்! தமிழ்நாட்டில் மேலும் ஒரு தேர் விபத்து.. சப்பரம் கவிழ்ந்து 3 பேர் பலி - மூவர் படுகாயம்
தருமபுரி: கோயில் திருவிழாவில் தேர் கவிழ்ந்த விபத்தில் பக்தர்கள் மூவர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
Recommended Video
தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே அமைந்து இருக்கிறது மாதேஹள்ளி கிராமம். இங்குள்ள காளியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் 18 கிராம மக்களால் தேர் திருவிழா நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும் காளியம்மன் கோயிலில் 3 நாள் திருவிழா தொடங்கியது. இதில் பாரப்பாரப்பட்டி மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் பெரும் திரளாக கலந்துக்கொண்டனர்.

திருவிழாவின் முக்கிய நிகழ்வாக இன்று தேர் திருவிழா தொடங்கி நடைபெற்றது. இன்று மாலை ஏராளமான பக்தர்கள் புடைசூழ காளியம்மன் கோயில் தேர் வடம் பிடித்து இழுத்துச் செல்லப்பட்டது. வயல் வெளியில் தேர் வந்துகொண்டிருந்தபோது அச்சாணி முறிந்து பக்தர்கள் மீது விழுந்தது.
இந்த விபத்தில் பக்தர்கள் 5 பேர் படுகாயமடைந்து அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனாலும் மனோகரன், சரவணன், மகேந்திரன் ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மேலும் 3 பேர் படுகாயங்களுடன் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications