"ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் தேவையே இல்லாத சித்தாந்தம் பாஜக.." திடீரென ஆவேசமான கருணாஸ்! பரபர அட்டாக்
தருமபுரி: நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய கருணால் ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கும் பாஜக தேவையில்லாத ஒரு சித்தாந்தம் என்று சாடி பேசினார்.
தருமபுரி மாவட்டத்தில் உள்ள அரூர் பகுதியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள முக்குலத்தோர் புலி படை நிறுவனரும் நடிகருமான கருணாஸ் சென்றுள்ளார். அங்கே அவர் பல்வேறு கிராமங்களில் தனது கொடி ஏற்றி வருகிறார்.

அதன்படி நேற்றைய தினம் அரூர் ரவுண்டானா பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கருணாஸ் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். அப்போது அவர் பாஜகவை விமர்சித்துப் பேசினார்.
கருணாஸ்: இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய கருணால், "தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும். இது தொடர்பாக நான் பல முறை சட்டசபையில் வலியுறுத்திவிட்டேன். இப்போது பீகார் மாநிலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்திவிட்டார்கள். அதேபோன்ற கருத்துக்கணிப்பைத் தமிழ்நாட்டிலும் உடனடியாக நடத்த வேண்டும். அதன் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்குவதே சரியான நடைமுறையாக இருக்கும்.
சுதந்திரப் போராட்டத்தின் சமயத்தில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நாட்டின் விடுதலைக்காகக் கடுமையாகப் போரிட்டார். அவர் நாட்டின் விடுதலை போராட்டத்தின் போது பல மாதங்கள் சிறையிலும் இருந்து கொடுமைகளை அனுபவித்துள்ளார். நாட்டிற்காக அவர் செய்த அவரது தியாக உணர்வுகளை நாம் போற்ற வேண்டும். அடுத்து வரும் எதிர்கால சந்ததிக்கு அவரை நினைவு கூறும் வகையில் மதுரை ஏர்போர்ட்டிற்கு முத்துராமலிங்க தேவர் பெயரை வைக்க வேண்டும்.
சாதி வாரிக் கணக்கெடுப்பு: கடந்த 1994ஆம் ஆண்டில் முன்னாள் முதல்வரான ஜெயலலிதா கள்ளர், மறவர், அகமுடையார் சமூகத்தை தேவரினமாக அறிவித்து அரசாணையை வெளியிட்டார். இதனை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும்
பாஜக: பாஜக என்பது ஒட்டுமொத்தமாகத் தமிழ்நாட்டிற்கே தேவையில்லாத ஒரு சித்தாந்தம் அவ்வளவுதான். நீங்கள் திமுகவில் இருங்க.. அதிமுகவில் இருங்க.. எந்த கட்சியில் வேண்டுமானாலும் இருங்க.. ஆனால் பாஜகவில் மட்டும் இருக்காதீர்கள்.. அக்கட்சி மண்ணுக்கு நல்லது இல்லை. மண்ணை காக்கும் பொறுப்பு நமக்கு இருக்கிறது. பாஜக தேவையில்லாத சித்தாந்தம் என்பதில் யாருக்கும் எந்தவொரு மாற்றுக்கருத்தும் இல்லை. பாஜகவை நாம் ஆரம்பத்தில் இருந்த எதிர்த்து வருகிறேன்.
அதிமுகவைப் பொறுத்தவரை ஜெயலலிதா இருந்த வரை நாட்டிற்கே முன்னோடியாக, தனித்துவமான பல நடவடிக்கைகளை எடுத்தார். இது ஒட்டுமொத்த நாட்டிற்கும் தெரியும். ஆனால், அவரது மறைவுக்குப் பிறகு அங்கே தலைமை பொறுப்பிற்கு வந்தவர்கள் என்ன செய்தார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். அவர்கள் எந்த தீர்மானத்தை எல்லாம் வரவேற்றார்கள் எனத் தனியாகச் சொல்லத் தேவையில்லை. அப்படியிருக்கும் போது அதிமுக பாஜக கூட்டணி பிரிந்து உள்ளதாகக் கூறுகிறார்கள். ஆனால், இதன் மீது 99 சதவீத மக்களுக்கு நம்பிக்கை இல்லை.
அமலாக்கத் துறை: இந்த பாஜக ஆட்சியில் அமலாக்கத் துறை நடவடிக்கை என்பது அரசியல் ரீதியில் காழ்ப்புணர்ச்சியால் நடத்தப்பட்டு வருகிறது. ஏன் பாஜகவினர் அல்லது அவர்களை ஆதரிப்போர் வீடுகளில் அமலாக்கத் துறை சோதனை எதுவும் நடைபெறுவதில்லை. எங்கெல்லாம் பாஜக ஆட்சியைக் கவிழ்க்க நினைக்கிறதோ அங்கே தான் அமலாக்கத்துறை சோதனை நடக்கிறது. இதனை அமலாக்கத் துறை என்று அழைப்பதை விட ஏவல் துறை என்று அழைப்பதே சரியாக இருக்கும்" என்று சரமாரியாகத் தாக்கிப் பேசினார்.
-
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
சென்னை திரும்பிய அண்ணாமலை.. விமான நிலையத்தில் திரண்டு வந்து ஆதரவாளர்கள் கொடுத்த ‘மாஸ்’ வரவேற்பு! -
"நான் முதலில் தமிழன்.." பாஜகவில் இருந்து விலகிய முதல் நாளே அண்ணாமலை சொன்ன வார்த்தை! நோட் பண்ணுங்க -
அப்துல்கலாம் பெயரில் அரசியல் பயிற்சி மையம்.. முதலில் பயிற்சி.. அப்புறம் பதவி.. அறிவித்த அண்ணாமலை! -
பாஜகவுக்கு ‘குட்பை'.. அண்ணாமலைக்காக ரெடியான ராஜ்யசபா சீட் இப்போ யாருக்கு பாருங்க! -
'We the Leaders' தொடக்கம்.. தமிழ்நாட்டில் புதிய சக்தியாக உருவெடுக்கும் அண்ணாமலை! -
அண்ணாமலை போய்ட்டாரு.. ஆந்திராவில் எதுக்கு ராஜ்யசபா சீட்டு.. கைவிட்ட பாஜக -
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
அண்ணாமலை விலகுகிறாரா இல்லையா.. நாளை உடையும் மர்மம்.. டெல்லியில் நாளுக்கு நாள் உச்சம்பெறும் டிராமா!











Click it and Unblock the Notifications