’திருட்டுத்தனமாக’ டெல்லி போன அதிமுக தலைவர்கள்- பாஜகவுடனான கூட்டணி முறிவு நாடகமே: உதயநிதி ஸ்டாலின்

Subscribe to Oneindia Tamil

தருமபுரி: அதிமுக- பாஜக கூட்டணி முறிவு என்பது ஒருநாடகம்; தேர்தலின் போது இரு கட்சிகளும் இணைந்தே ஓட்டு பிச்சை கேட்க வருவார்கள் என திமுக இளைஞரணி செயலாளரும் தமிழ்நாடு அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

தருமபுரியில் நடைபெற்ற திமுக நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: திமுக அரசின் மகளிர் உரிமை திட்டம் போன்றவற்றை எல்லாம் பார்த்து அதிமுகவும் பாஜகவும் குழம்பிப் போயிருக்கின்றனர். அவர்களும் குழம்பி போய், மக்களையும் சேர்த்து குழப்பிக் கொண்டிருக்கின்றனர்.

AIADMK break alliance with BJP is Political Drama: Udhayanidhi Stalin

இரண்டு மூன்று நாட்களாக ஒரு பிரச்சனை போய்க் கொண்டிருக்கிறது. (அதிமுக, பாஜக) கூட்டணி இருக்கா? இல்லையா?.. காலையில் இருக்கிறது என்கிறார்கள்.. மாலையில் இல்லை என்கிறார்கள்..

திருட்டு விமான பயணம்: இதில் 4 முன்னாள் அமைச்சர்கள், யாருக்கும் சொல்லாமல், திருட்டுத்தனமாக டெல்லிக்கு போயிருக்காங்க.. இங்க இருந்து டெல்லிக்கு நேரடியாக விமானம் இருக்கு. ஆனால் இரண்டு பேர் திருட்டுத்தனமாக 2 பேர் பெங்களூர் போய் அங்கிருந்து டெல்லிக்கு போனாங்க.. இன்னும் 2 முன்னாள் அமைச்சர்கள் கொச்சின் போய் அங்கிருந்து டெல்லிக்கு போயிருக்காங்க. ஆனால் மாட்டிக் கொண்டார்கள்.

AIADMK break alliance with BJP is Political Drama: Udhayanidhi Stalin

அமித்ஷா திமுக: நான் இந்த பிரச்சனை ஆரம்பித்த காலத்திலிருந்தே சொல்லிவருகிறேன், இது உட்கட்சி பூசல் என்று. நம்ம திமுகவில் பல்வேறு அணிகள் இருக்கிறது அல்லவா? திமுகவில் இளைஞர் அணி, மாணவர் அணி, மீனவர் அணி என பல்வேறு அணிகள் இருப்பது போல பாஜவில் இருக்கும் ஒரு அணி தான் அதிமுக. அண்ணா திமுக என்று மக்கள் நினைத்து கொள்கிறார்கள் ஆனால் அது அமித்ஷா திமுக.

லேடியா? மோடியா? போய் டாடி: முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைந்த போதே அந்த கட்சி அவர்களிடம் அடகு வைத்துவிட்டார்கள். மறைந்த முதல்வர் ஜெயலலிதா இருந்தவரைக்கும் என்ன சொன்னாங்க? மோடியா? லேடியான்னு சொன்னாங்க.. ஆனால் ஜெயலலிதா இறந்த பிறகு முன்னாள் அமைச்சர்கள் என்ன சொன்னாங்க.. மோடி எங்கள் டாடி என்றார்கள்.

AIADMK break alliance with BJP is Political Drama: Udhayanidhi Stalin

எல்லாமே நாடகம்: இப்பவும் சொல்றேன்.. இது நாடகம். இது முதல் முறை இல்லை. கண்டிப்பாக தேர்தல் நேரத்தில் அதிமுகவும் பாஜகவும் ஒன்றாக வந்துதான் ஓட்டு பிச்சை எடுப்பாங்க. ஒருத்தன் திருடன்னா ஒருத்தன் கொள்ளைக்காரன். இதுதான் அதிமுக, பாஜக இடையேயான வித்தியாசம். இவ்வாறு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+