அண்ணாமலை தொழிலதிபர்களை மிரட்டி வருகிறார்.. யாரெல்லாம் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்? அமைச்சர் அட்டாக்!
தருமபுரி : பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அனைத்து தொழிலதிபர்களையும் மிரட்டி வருகிறார், அவர் பாணியே மிரட்டல் பாணி. அண்ணாமலையிடம் யார் யாரெல்லாம் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று மக்களுக்கு தெரியும் என தமிழக வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
திமுக அரசு மீதும், திமுக அமைச்சர்கள் மீதும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகளை சுமத்தி வரும் நிலையில், திமுகவினர் பலரும் அண்ணாமலையை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
அந்தவகையில், அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், அண்ணாமலையை சீசன் அரசியல்வாதி என விமர்சித்துப் பேசியுள்ளார்.

திமுக அமைச்சர்
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகேயுள்ள சின்னாறு உப வடிநிலப் பகுதியில் உள்ள சின்னாறு அணை கால்வாய், கேசர்குழிஅல்லா அணை கால்வாய்கள், குமாரசெட்டி ஏரி மற்றும் பதினைந்து அணைக்கட்டுகளை புனரமைக்கும் பணியினை பஞ்சப்பள்ளியில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்.

சீசன் அரசியல்வாதி
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், "மைக் கிடைக்கிறேதே என்று பேசுபவர் அண்ணாமலை. அவர் ஒரு அரசியல் வாதியே இல்லை, சீசன் அரசியல்வாதி. கர்நாடகாவில் காவல்துறையில் பணியாற்றியபோது, தமிழகத்திற்கு காவிரி தண்ணீர் விடக்கூடாது என பேசியவர். அண்ணாமலை தலைவருக்கே தகுதியில்லாதவர். பாஜகவில் தகுதியில்லாதவர்களை தலைவராக்கியிருக்கிறார்கள். பாஜகவிற்கு கொள்கையும் கிடையாது, ஒன்றும் கிடையாது, பேசிப் பேசியே கட்சியை வளர்த்து வருகின்றனரே தவிர வேறு ஒன்றும் கிடையாது" என விமர்சித்துள்ளார்.

அண்ணாமலை மிரட்டல்
மேலும், "அண்ணாமலை அனைத்து தொழிலதிபர்களையும் மிரட்டி வருகிறார், அவர் பாணியே மிரட்டல் பாணி. அண்ணாமலையிடம் யார் யாரெல்லாம் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று மக்களுக்கு தெரியும். மத்திய அரசின் அதிகாரத்தை பயன்படுத்தி அரசு அதிகாரிகளையும், மற்றவர்களையும் மிரட்டி வருகிறார்கள், அது தமிழகத்தில் எடுபடாது." எனத் தெரிவித்துள்ளார் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்.

70 சதவீதம்
தொடர்ந்து பேசிய அவர், "தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்கள் புளோரைடு இல்லாத தூய்மையான குடிநீர் பருகிட கருணாநிதி ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட திட்டம் தான் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம். இரண்டாவது கட்ட திட்ட பணிகளுக்கான ஆய்வுகள் நடந்து வருகிறது. முடிந்த பின்னர் முதலமைச்சர் இந்தத் திட்டத்தினை தொடங்கி வைப்பார். திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளில் எழுபது சதவீத வாக்குறுதிகளை, திட்டங்களை படிப்படியாக நிறைவேற்றி வருகின்றோம்" எனத் தெரிவித்தார்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications