தொப்பூர் கணவாயில் கண் இமைக்கும் நேரத்தில் விபத்து.. லாரி மோத.. சங்கிலி போல சிக்கிய கார்கள்.. திக்
தருமபுரி: தொப்பூர் கணவாயில் சிமெண்ட் பாரம் ஏற்றிச் சென்ற லாரி அங்கே இருந்த கார்கள் மீது மோதியதில் பெரும் விபத்து ஏற்பட்டு உள்ளது.
கடந்த 12 ஆண்டுகளில் 1010க்கும் அதிகமான விபத்துகளை சந்தித்த தொப்பூர் கணவாயில் இன்னொரு விபத்து இன்று ஏற்பட்டு உள்ளது. தொப்பூர் கணவாயில் சிமெண்ட் பாரம் ஏற்றிச் சென்ற லாரி பிரேக் பெயிலியர் காரணமாக கட்டுப்பாட்டை இழந்துள்ளது.

இதில் கட்டுக்கடங்காமல் சென்ற அந்த லாரி முன்னால் இருந்த கார்கள் உட்பட 5 வாகனங்கள் மீது மோதியது. அடுத்தடுத்து இந்த வாகனங்கள் மோதி அந்த சாலையே முடங்கியது. இதில் 2 கார்கள் அப்பளம் போல நொறுங்கின. 4 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் சார்பாக விசாரிக்கப்பட்டு வருகிறது.
தருமபுரி மாவட்ட தொப்பூரில் வருடா வருடம் நூற்றுக்கணக்கில் விபத்துகள் ஏற்படுவது வழக்கம். இந்த கணவாய் கிட்டத்தட்ட ஒரு கொலைகார கணவாய் என்று கூட அழைக்கப்படும். கடந்த 2020ம் வருடம் டிசம்பர் மாதம் தருமபுரி மாவட்ட தொப்பூரில் ஏற்பட்ட விபத்தை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். சரக்கு லாரி ஒன்று டோல் டிராபிக்கில் நின்று கொண்டு இருந்த 13 வாகனங்கள் மீது வரிசையாக மோதி பெரும் விபத்தை ஏற்படுத்தியது.
கொடூர விபத்து: இந்த கொடூர விபத்தில் சம்பவ இடத்திலேயே 7 பேர் பலியானார்கள். 40 பேர் காயம் அடைந்தனர். 11 கார்கள் சின்னாபின்னமானது. தொப்பூரில் நடந்த விபத்துகளில் இது மிக மோசமான ஒன்று. தொப்பூரில் இப்படி கொடூர விபத்துகள் நடப்பது இது புதிதல்ல.. கடந்த சில வருடங்களாக இங்கு விபத்துகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
மீண்டும் விபத்து: இந்த நிலையில் நேற்று மாலை அங்கு மீண்டும் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்து எப்படி ஏற்பட்டது என்பது தொடர்பான விவரங்கள் வெளியாகி உள்ளன. விபத்திற்கான உண்மையான காரணம் என்ன என்பதையும் நெடுஞ்சாலை பாதுகாப்பு ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
தேசிய நெடுஞ்சாலையில் தொப்பூர் இரட்டைப் பாலம் அருகில் நேற்று மாலை 5.15 மணியளவில் 3 லாரிகள் மற்றும் 2 கார்கள் அடுத்தடுத்து மோதிக்கொண்ட சாலை விபத்து ஏற்பட்டு உள்ளது. இதில் கோயம்புத்தூர், டவுன்ஹால், அசோக் நகரைக் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மஞ்சு (வயது56) க/பெ. கார்வின் த.விமல் (வயது 28) த/பெ.ஜெயபால், . அனுஷ்கா (வயது 23) க/பெ. விமல், . ஜெனிபர் (வயது 29) க/பெ. வினோத் ஆகிய 4 நபர்கள் உயிரிழந்தனர். இவ்விபத்தில் 8 நபர்கள் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்தின்படி இரண்டு லேன்களில்.. ஒரு லேனில் ஒரு லாரி, அதன்பின் ஒரு கார் சென்று உள்ளது. இன்னொரு லேனில் ஒரு கார், அதன்பின் இரண்டு லாரி வந்துள்ளது. இதில் இரண்டாவதாக வந்த லாரிதான் விபத்திற்கு காரணம்.
அதிக சுமை ஏற்றி வந்த அந்த லாரி பிரேக் பிடிக்க முடியாமல் வேகமாக கட்டுப்பாட்டை இழந்து தனக்கு முன்னால் சென்ற லாரியில் மோதியது. அந்த லாரி அதற்கு இடதுபக்கம் சென்ற லாரியில் மோதி, அதோடு முன்னால் சென்ற காரிலும் மோதியது.
இதில் மொத்தமாக அந்த லாரி மற்றும் கார் தண்ணீருக்குள் விழுந்தது. பாலத்தை உடைத்துகொண்டு தண்ணீரில் விழுந்துள்ளது. இப்படித்தான் மொத்த விபத்தும் ஏற்பட்டு உள்ளது. அந்த லாரி அதிக சுமை ஏற்றி வந்து பிரேக் பெயிலியர் ஆனதே விபத்திற்கு காரணம்.
எங்கே உள்ளது?: தருமபுரி மாவட்டத்தில் பெங்களூர் சேலம் தேசிய நெடுஞ்சாலை 47ல் உள்ளது தொப்பூர் கணவாய். சாய்வான சாலையை கொண்ட இந்த பகுதி இரண்டு பக்கமும் மரங்கள், மலைகள் சூழ்ந்த அழகிய பகுதியாகும். ஆனால் ஆபத்தும் அதிகம்! அடுத்தடுத்த திருப்பங்கள், கடினமான வளைவுகள் காரணமாக இங்கு அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. இங்கு இருக்கும் தொம்பரகாம்பட்டி சுங்கச்சாவடியில் இருந்து தொப்பூர் வரை உள்ள சாலைதான் அதிகம் விபத்து ஏற்படும் சாலை ஆகும்.
தொப்பூர் கணவாயில் 2018ல் மட்டும் 92 விபத்துகள் ஏற்பட்டன. 2019ல் 108 விபத்துகள் ஏற்பட்டன.. அதேபோல் 2020ல் 99 விபத்துகள் ஏற்பட்டன, இதில் 2018ல் 32 பேரும், 2019ல் 46 பேரும், 2020ல் 38 பேரும் பலியானார்கள். தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து துறையின் புள்ளி விவரங்களின்படி இங்கு 12 ஆண்டில் 1010 விபத்துகள் ஏற்பட்டுள்ளன. இது கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்ட விபத்துகள். கணக்கில் எடுக்கப்படாத சிறிய விபத்துகளும் உள்ளன.
கடந்த 12 ஆண்டுகளில் தொப்பூர் கணவாயில் ஏற்பட்ட விபத்துகளில் 255 பேர் பலியாகி உள்ளனர். சாய்வான சாலை, குறுகலான திருப்பங்கள் ஆகியவை இங்கு விபத்து ஏற்பட முக்கிய காரணம் ஆகும். அதேபோல் இங்கு டோல் கேட்டில் சமயங்களில் அதிக வாகனங்கள் வரிசை கட்டி நிற்கும். அப்போது பின்னாடி வரும் வாகனங்கள் இதை கவனிக்காமல் வேகமாக வந்து மோதும் வழக்கம் உள்ளது. 2020ல் ஏற்பட்ட மிக நீண்ட தொப்பூர் விபத்துக்கு இந்த போக்குவரத்து நெரிசலும் முக்கிய காரணம் ஆகும்.
-
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications