அதிமுக மாஜி கே.பி.அன்பழகனுக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கு.. இன்று 11 பேர் ஆஜர்
தருமபுரி: முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கு தருமபுரி நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு சட்டசபை உறுப்பினர் கே.பி. அன்பழகன். இவர் கடந்த அதிமுக ஆட்சியின் போது உயர்கல்வித் துறை அமைச்சராக இருந்தார். 2016ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு காலகட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவர் மீது தருமபுரி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்திருந்தனர்.

இந்த வழக்கு தொடர்பாக 2022 ஆம் ஆண்டு ஜனவரி 18ஆம் தேதி கே.பி. அன்பழகன் வீடு மற்றும் அவர் தொடர்புடைய 58 இடங்களில் ஊழல் தடுப்புப்பிரிவு போலீஸார் சோதனை நடத்தினர். இதில் நடந்த தொடர் விசாரணையில் ரூ 45.20 கோடிக்கு வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக ஊழல் தடுப்பு பிரிவு போலீஸார் தெரிவித்துள்ளனர்.
முறையாக சம்மன் அனுப்பப்பட்ட நிலையில், முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் மற்றும் அவரது மனைவி மல்லிகா(56), மகன்கள் சசிமோகன்(30), சந்திரமோகன்(33), உறவினர்கள் ரவிசங்கர்(45), சரவணன்(47), சரவணக்குமார்(41), மாணிக்கம்(62), மாணிக்கம் மனைவி மல்லிகா(56), தனபால்(45), சரஸ்வதி பச்சியப்பன் எஜூகேசன் அறக்கட்டளை நிர்வாகி ஆகிய 11 பேர் மீது, தருமபுரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கடந்த மே 22ம் தேதி, 10 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை, தர்மபுரி மாவட்ட தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் தாக்கல் செய்தனர்.
அப்போது ஜூலை 13 ஆம் தேதி வழக்கு விசாரணை தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் குறிப்பிட்ட தேதியில் விசாரணை தொடங்க இருந்த நிலையில் தருமபுரி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தின் மூலம் சம்மன் விநியோகம் செய்யப்பட்டு, விசாரணை தொடங்கப்படும் என்றுதெரிவிக்கப்பட்டது. அதன்படி, சம்மந்தப்பட்டவர்களுக்கு சம்மன் அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து கடந்த 6ம் தேதி தர்மபுரி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது.
அப்போது, வழக்கு வரும் 22ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து இன்று மீண்டும் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. இதற்காக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன், அவரது மனைவி மல்லிகா, மகன்கள் சசிமோகன், சந்திரமோகன், உறவினர்கள் ரவிசங்கர், சரவணன், சரவணக்குமார், மாணிக்கம், மாணிக்கம் மனைவி மல்லிகா, தனபால் உள்ளிட்ட 11 பேர் இன்று ஆஜரானார்கள். அப்போது அவர்களிடம் குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது. இந்த வழக்கை நீதிபதி மணிமொழி வருகின்ற 8ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
-
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications