Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அலறிய அரூர்.. விடிகாலையில்.. கனகா மேடம் செய்த காரியத்தை பார்த்தீங்களா? அதுவும் ஓடைக்கரையில்.. ஓ காட்

Subscribe to Oneindia Tamil

தருமபுரி: வாய்க்காலில் விடிகாலை நேரத்தில் கிடந்த ராஜாவை பார்த்து கிராம மக்கள் பதறிப்போயுள்ளனர்.. என்ன நடந்தது ராஜாவுக்கு?

தர்மபுரி மாவட்டம், அரூர் அருகே உள்ளது கீரைப்பட்டி.. இங்குள்ள இந்திரா நகரில் வசித்து வருகிறார் ராஜா.. 40 வயதாகிறது.. இவர் ஒரு கூலி தொழிலாளி.. மனைவி பெயர் கனகா.. 34 வயதாகிறது.

Dharmapuri Harur and Do you know why did young Wife Kanaga take this sudden Decision

இவர்களுக்கு கல்யாணமாகி 20 வருடங்களாகிறது. இந்த தம்பதிக்கு ஒரு ஆண் மற்றும் பெண் குழந்தைகள் உள்ளன. கூலி வேலை செய்யும் ராஜா, தினமும் தண்ணி அடித்துவிட்டுதான் வீட்டுக்கு வருவாராம்.

காயங்கள்: இந்நிலையில், கடந்த 1-ம் தேதி ராஜா இறந்துவிட்டார்.. ராஜா வீட்டுக்கு பக்கத்திலேயே வரட்டாறு கால்வாய் ஓடுகிறது.. இந்த தண்ணீரில் உடலில் காயங்களுடன் ஓடையில் சடலமாக மீட்கப்பட்டார் ராஜா.. இதையடுத்து, ராஜா இறந்தது குறித்து, வருவாய் துறைக்கு தெரியப்படுத்தாமல், போலீசாரிடமும் புகாரும் தராமல், அவரது அடக்கம் செய்துவிட்டனர்.. கனகாவின் பேச்சை கேட்டு உறவினர்கள் கீரைப்பட்டியில், ராஜாவை அடக்கம் செய்திருக்கிறார்கள்.

ஆனால், இவர் எப்படி இறந்தார் என்றே தெரியவில்லை.. மர்மமான முறையில் இறந்துவிட்டதால், மகனின் சாவில் சந்தேகம் இருப்பதாக, ராஜாவின் அம்மா ராதாமணி அரூர் போலீசில் புகார் தந்தார்..

கனகா: போலீசாரும் இந்த புகாரின்பேரில் விசாரணையை துவக்கினர்.. சடலத்தை தோண்டி எடுத்து, போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பி வைத்தனர்.. மனைவி கனகாவிடம் தீவிர விசாரணையை மேற்கொண்டனர்.. போலீசார் கேள்வி கேட்க துவங்கியதுமே, மொத்த உண்மையையும் கனகா சொல்லிவிட்டார். கணவனை கொன்றது தான்தான் என்று ஒப்புக்கொண்டதுடன், அது சம்பந்தமான வாக்குமூலத்தையும் தந்துள்ளார்.

"என்னுடைய கணவர் கூலி வேலை செய்து வருகிறார்.. தினமும் மதுபோதையில் வீட்டிற்கு வந்து செக்ஸ் டார்ச்சர் செய்வார். 6 மாதமாக வேலைக்கும் போகவில்லை.. என் மீது சந்தேகமும் அதிகரித்தது.. என் மீது சந்தேகம் அதிகமானதாலேயே வீட்டைவிட்டு வெளியே போகாமல், 6 மாதமாக வேலைக்கும் போகாமல் இருந்தார்.

தகராறு: சம்பவத்தன்றும் தலைக்கேறிய போதையுடன்தான் வீட்டிற்கு வந்தார்.. அப்போதும் என்னை செக்ஸ் டார்ச்சர் செய்தார்.. எனக்கு உடல்நிலை சரியில்லை என்று சொன்னேன்.. ஆனாலும் அதை அவர் பொருட்படுத்தவில்லை.. ஆசைக்கு இணங்குமாறு கட்டாயப்படுத்தினார்.. என்னை வற்புறுத்தினார்.

குழந்தைகள் தூங்கிக்கொண்டிருக்கிறார்கள் என்றேன்.. அப்போதுகூட, என்னை வீட்டிற்கு வெளியே அழைத்து வந்து, குடிபோதையில் செக்ஸ் டார்ச்சர் செய்தார்.. அப்போது கெட்ட வார்த்தைகளில் ஆபாசமாக திட்டி, அடித்து துன்புறுத்தினார்..

பலத்த தாக்குதல்: என்னை பலமாக தாக்கவும், என்னை தற்காத்து கொள்வதற்காகவே, அவரை திருப்பி தாக்கினேன்.. செங்கல்லால் தாக்கி பிடித்து தள்ளியதில், சுவற்றில் அடிபட்டு கீழே விழுந்துவிட்டார்.. அப்போதும் ஆத்திரம் தீராமல், அவரது கழுத்தை நெறித்துவிட்டேன். அவர் உடனே மயக்கமாகி கீழே விழுந்துவிட்டார்..

அப்படியே காலை வரை, மயக்கத்திலேயே தூங்கட்டும் என்று விட்டுவிட்டு, நான் வீட்டிற்குள் சென்று கதவை தாழ்ப்பாள் போட்டுக் கொண்டு தூங்கிவிட்டேன்.. அதற்கு பிறகு, நான் வெளியே எழுந்துவந்து பார்த்தேன்.. அப்போதும் அதே இடத்தில் படுத்திருந்தார்.. அப்போதுதான் நான் அவரை தட்டி எழுப்ப முயன்றேன்.. ஆனால், அசையவேயில்லை..

அசைவில்லை: அதற்கு பிறகுதான் அவர் இறந்துபோனதே எனக்கு தெரியவந்தது. சடலத்தை வீட்டில் வைத்திருக்க எனக்கு பயமாக இருந்தது. அதனால், யாருக்கும் தெரியாமல், சடலத்தை வீட்டிலிருந்து சுமார் 20 அடி தொலைவுக்கு இழுத்து கொண்டுபோய், ஓடையில் வைத்து விட்டு, மறுபடியும் நான் வீட்டிற்குள் வந்து கதவை சாத்திக் கொண்டேன்" வாக்குமூலம் தந்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+