கன்னத்தை கிள்ளி.. முதுகில் தடவிய "கணக்கு" வாத்தியார்.. கிளாஸ்ரூமிலேயே.. கதறிய மாணவி.. தூக்கிய போலீஸ்
மாணவியின் கன்னத்தை கிள்ளிய ஆசிரியர் கைதானார்
தர்மபுரி: கிளாஸ்ரூமிலேயே மாணவர்கள் முன்னிலையில் சேட்டையை ஆரம்பித்துள்ளார் கணக்கு வாத்தியார்.. இப்போது அவர் கைதாகி சிறையில் உள்ளார்...!
நாளுக்கு நாள் பெண் குழந்தைகள் மீதான வன்முறைகள் அதிகரித்து கொண்டே போகிறது.. வடமாநிலங்களில்தான் இப்படி ஒரு கொடுமைகள் நடந்து வருகிறதென்றால், நம் தமிழ்நாட்டிலும் பரவிவருவது அதிர்ச்சியை தந்து வருகிறது.
அதிலும், தொடர்ச்சியாக ஆசிரியர்களே இந்த புகார்களில் சிக்கி வருகிறார்கள்.. பள்ளி, மற்றும் கல்லூரி மாணவிகள் தங்களுக்கு இழைக்கப்படும் பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து, துணிந்து புகார் சொல்ல ஆரம்பித்துவிட்டனர்..

மன உளைச்சல்
மேலும் சில பெண்களோ, மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்து கொண்டு வருகின்றனர். இந்த புகார்களின் தொடர்பாக அடுத்தடுத்து ஆசிரியர்கள் கைதாகி வருகிறார்கள்.. அது தொடர்பான விசாரணைகளும் நடந்து கொண்டு வருகிறது.. எத்தனை பேர் கைதானாலும், புற்றீசல்போல மீண்டும் இதுபோன்றவர்கள் முளைத்து கொண்டுதான் இருக்கிறார்கள்.. இப்போதும் ஒருவர் சிக்கி உள்ளார்.. தர்மபுரி மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அவர் பெயர் சேரன்.. 50 வயதாகிறது..

கணக்கு டீச்சர்
லிங்கநாயக்கனஅள்ளி பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது... இந்த பள்ளியில் சுற்றுவட்டாரப்பகுதியில் உள்ள ஏராளமான மாணவ மாணவிகள் இங்கு படித்து வருகிறர்கள்.. இந்த சேரன் என்பவர் இங்கு கணக்கு டீச்சராக வேலை பார்த்து வருகிறார்.. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு 9-ம் வகுப்புக்கு பாடம் எடுத்துக்கொண்டிருந்தார்... அப்போது கிளாஸ் ரூமில் இருந்த மாணவர்களை கணக்கு போடுமாறு சொல்லி உள்ளார். 9-ம் வகுப்பு மாணவி ஒருவர் கணக்கு போட்டு ஆசிரியர் சேரனிடம் எடுத்து வந்து காண்பித்துள்ளார்.

கணக்கு வாத்தியார்
அந்த மாணவி கணக்கை தவறாக போட்டுள்ளதாக தெரிகிறது.. இதனால், சேரன், அந்த மாணவியை வகுப்பில் இருந்த சக மாணவர்கள் முன்னிலையில் கன்னத்தில் கிள்ளி முதுகில் தட்டியுள்ளார்... பள்ளி முடிந்து வீட்டிற்கு சென்ற மாணவி இதுகுறித்து மாணவி தனது பெற்றோரிடம் சொல்லி அழுதிருக்கிறார்.. கொந்தளித்து போன மாணவியின் பெற்றோரோ, கடத்தூர் போலீஸ் ஸ்டேஷனில் சேரன் பற்றி புகார் தந்துவிட்டனர்..

கன்னத்தை கிள்ளிய ஆசிரியர்
போலீசாரும் அதன்பேரில் விசாரணையை நடத்தினர்.. சேரன் மாணவியின் கன்னத்தில் கிள்ளி முதுகில் தட்டியது தெரியவந்தது.. இதையடுத்து, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீஸார் கணக்கு டீச்சர் சேரனை கைது செய்தனர்... இந்த சம்பவம் தொடர்பாக தர்மபுரி மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் 9-ம் வகுப்பு மாணவியிடமும் பள்ளியிலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு!












Click it and Unblock the Notifications