நீட் தேர்வு ஆள்மாறாட்டம்.. தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மாணவர் இர்பான் தலைமறைவு
Recommended Video
தருமபுரி: நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த விவகாரத்தில் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மாணவர் இர்பான் தலைமறைவாகிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து சென்னை மாணவர் உதித் சூர்யா தேனி மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் முதலாமாண்டு சேர்ந்த விவகாரத்தில் போலீஸார் அவரையும் அவரது தந்தையையும் கைது செய்தனர்.

அவர்கள் இருவரும் தேனி மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து மருத்துவ கல்வி இயக்ககம் தமிழகத்தில் உள்ள மருத்துவ மாணவர்களின் சேர்க்கை குறித்து விசாரித்தது.
அப்போது 4 பேர் ஆள்மாறாட்டம் செய்தது தெரியவந்தது. ஒரு மாணவர் பெயர் பிரவீன் என்றும் அவர் எஸ்ஆர்எம் மருத்துவக் கல்லூரியில் படித்து வருவதும் தெரியவந்தது. மற்றொருவர் ராகுல், இவர் பாலாஜி மருத்துவ கல்லூரியில் படித்து வருகிறார்.
மற்றொரு மாணவியின் பெயர் அபிராமி. இவர் சென்னையை அடுத்த திருப்போரூரில் சத்ய சாய் மருத்துவக் கல்லூரி மாணவராவார். இவர்கள் மூவரும் சென்னையை சேர்ந்தவர்கள் என தெரியவந்தது. அது போல் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் படித்து வந்த இர்பான் என்ற மாணவரும் ஆள்மாறாட்டம் செய்தது தெரியவந்தது.
இந்த நிலையில் விசாரணைக்காக அழைக்கப்பட்ட அபிராமி சிபிசிஐடி போலீஸில் ஆஜராகியுள்ளார். ஆனால் இர்பான் கைதுக்கு பயந்து கொண்டு வெளிநாட்டுக்கு தப்பி ஓடிவிட்டார் என கூறப்படுகிறது. இவர் ஏற்கெனவே மொரிஷியஸில் மருத்துவம் படித்து வந்ததும் பின்னர் தருமபுரி மாவட்ட அரசு கல்லூரியில் சேர்ந்ததும் தெரியவந்தது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications