தர்மபுரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அதிமுக 3 முக்கிய புள்ளிகள் திமுகவிற்கு ஜம்ப்? எம்பி ட்வீட்.. பரபரக்கும் அரசியல்

Google Oneindia Tamil News

தருமபுரி: அதிமுகவின் முக்கிய புள்ளிகள் 3 பேர் அக்கட்சியிலிருந்து விலகி திமுகவில் ஐக்கியமாக போவதாக திமுக எம்பி செந்தில் குமார் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

எந்த ஒரு கட்சியாக இருந்தாலும் தலைமை பதவியில் பிரச்சினை இருந்தால் அந்த கட்சி தொண்டர்கள் செயல்பட முடியாமல் மாற்றுக் கட்சிக்கு செல்வது வழக்கம். அதாவது ஒரு கப்பலுக்கு கேப்டன் எப்படி முக்கியமோ அப்படித்தான். இது அரசியலுக்கு மட்டும் பொருந்தாது எல்லாவற்றுக்கும் தான்!

அந்த வகையில் அதிமுகவில் இரட்டை தலைமையா ஒற்றை தலைமையா என்ற பிரச்சினையால் அதன் தலைமை யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனால் ஏற்கெனவே தலைமை பதவியில் இருந்த ஓபிஎஸ்ஸும் இபிஎஸ்ஸும் நீதிமன்றத்தையும் தேர்தல் ஆணையத்தையும் நாடி வருகிறார்கள்.

<strong style=ஹாட்டிரிக் விக்கெட்.. ஓபிஎஸ் - இபிஎஸ் மோதலுக்கு இடையில் புகுந்த ஸ்டாலின்.. ஆஹா.. 3 எம்எல்ஏக்களா?" title="ஹாட்டிரிக் விக்கெட்.. ஓபிஎஸ் - இபிஎஸ் மோதலுக்கு இடையில் புகுந்த ஸ்டாலின்.. ஆஹா.. 3 எம்எல்ஏக்களா?" />ஹாட்டிரிக் விக்கெட்.. ஓபிஎஸ் - இபிஎஸ் மோதலுக்கு இடையில் புகுந்த ஸ்டாலின்.. ஆஹா.. 3 எம்எல்ஏக்களா?

தொண்டர்கள்

தொண்டர்கள்

இதனால் தொண்டர்களுக்கு கண்ணை கட்டி காட்டில் விட்டது போல் இருக்கிறது. எனவே பலர் மாற்றுக் கட்சியில் இணைந்து செயல்படுகிறார்கள். அங்கு அவர்களுக்கு பதவியும் கொடுக்கப்படுகிறது. அந்த வகையில் அண்மையில் அதிமுகவிலிருந்து முன்னாள் எம்எல்ஏ ஆறுகுட்டி திமுகவில் இணைந்தார்.

அதிருப்தி

அதிருப்தி


இது போல் அதிருப்தியில் இருப்போரை பிடித்து தங்கள் கட்சியில் சேர்க்கும் வேலைகளில் மாற்றுக் கட்சியினர் திறம்பட செய்து வருகிறார்கள். இந்த நிலையில் திமுக எம்பி செந்தில்குமார் ஒரு பரபரப்பு ட்வீட்டை போட்டுள்ளார். அதில் 3 இரட்டை இலைகளையும் உதய சூரியனையும் போட்டு இரண்டுக்கும் நடுவே ஒரு அம்புகுறியுடன் விரைவில் என்ற வாசகத்தை போட்டுள்ளார்.

அதிமுக டூ திமுக

அதிமுக டூ திமுக

அதாவது அதிமுகவிலிருந்து 3 பேர் திமுகவில் விரைவில் இணைகிறார்கள். அவர்கள் யார் என்ற விவரங்களை அவர் கொடுக்கவில்லை, யார் என்றால் அவர்கள் நிர்வாகியா, எம்எல்ஏவா, எம்பியா, முன்னாள் எம்எல்ஏவா, முன்னாள் எம்பியா என்பது போன்ற தகவல்கள் இல்லை. 3 அதிமுக எம்எல்ஏக்கள் திமுக பக்கம் செல்லலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

30 எம்எல்ஏக்கள்

30 எம்எல்ஏக்கள்

அது போல் எடப்பாடி பழனிசாமி அணியிலிருந்து 25 முதல் 30 எம்எல்ஏக்கள் வரை ஓபிஎஸ் பக்கம் தாவ தயாராக இருக்கிறார்கள் என்ற தகவல்களும் வெளியாகியுள்ளன. இதனால் யார் எங்கு எப்போது போவார்கள் என்பது தெரியவில்லை. இப்படியே போனால் எடப்பாடி பழனிசாமியின் எதிர்ககட்சித் தலைவர் பதவி என்னவாகும்?

English summary
Dharmapuri MP Senthilkumar says that 3 activists from ADMK will join in DMK.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X