தர்மபுரி உண்டியலில் ஆச்சரியம்.. விடிய விடிய "அங்கியே" உட்கார்ந்திருந்துட்டாரு.. இப்படியும் ஒரு நபரா
தர்மபுரி: கோவையில் மருதமலை அடிவாரத்திலுள்ள தனியார் மடத்தில் வெள்ளி வேலை திருடிய சாமியார் வெங்கடேஷ் சர்மா விவகாரத்தின் அதிர்ச்சியே இன்னும் அடங்காத நிலையில், தர்மபுரியில் ஒருவர் வசமாக சிக்கியிருக்கிறார்.. இவரது போட்டோதான் இணையத்தில் வெளியாகி கொண்டிருக்கிறது. சம்பந்தப்பட்ட நபர் கூலி வேலை செய்பவராம்.. அவரிடம் போலீசார் விசாரணையை விரிவுபடுத்தி வருகிறார்கள்.
தமிழகத்தின் கோயில்களில் சமீபகாலமாகவே உண்டியல் திருட்டு அதிகரித்து வருகிறது.. பக்தர்கள் கோயிலில் செலுத்தும் காணிக்கைகளை யாரும் களவாட கூடாது என்பதற்காகவே சிசிடிவி காட்சிகள் கோயில்களில் பொருத்தப்பட்டுள்ளன.

சிசிடிவி கேமரா
சிசிடிவி கேமரா இருந்தாலும்கூட, எதைப்பற்றியும் கவலைப்படாமல் உண்டியலை அபேஸ் செய்துவிடுகிறார்கள்.. அவ்வளவு ஏன்? புகழ்பெற்ற கோயில்களில் மாதம் ஒருமுறை உண்டியல் பணத்தை எண்ணும் பணிகள் நடைபெறும். இதற்காக சிசிடிவி கேமரா, பாதுகாப்பு குழு, கோயில் நிர்வாகம் என அனைவரும் சேர்ந்து உண்டியல் பணம் எண்ணப்பட்டாலும்கூட, இத்தனை பேரின் பாதுகாப்பையும் மீறி பணம் களவாடப்பட்டுவிடுகிறது.
கடந்த வாரம் கோவையில், சாமியார் வேடத்தில் வந்து வெள்ளி வேல் திருடியிருக்கிறார் 57 வயது நபர்.. அவரது பெயர் வெங்கடேஷ் ஷர்மா.. மருதமலை அடிவாரத்திலுள்ள தனியார் மடத்தில் கடந்த 2-ம் தேதி பிற்பகல் சுமார் 12 மணிக்கு, சாமியார் வேடத்தில் வந்த திருடன் அங்குள்ள வெள்ளி வேலை எடுத்துச் செல்லும் காட்சிகள், அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது.
வடவள்ளி போலீசார் - வெள்ளி வேல்
இதுகுறித்து வடவள்ளி போலீசாருக்கு சிசிடிவி ஆதாரங்களுடன் புகாரளிக்கப்பட்டது. இறுதியில், வெங்கடேஷ் ஷர்மா என்ற அந்த நபர், நிஜமாகவே சாமியார் என்று தெரியவந்தது. பல்வேறு ஊர்களில் மடத்திற்குச் சென்று தங்கும் பழக்கம் உடையவராம்.. அப்படி மருதமலை சென்றபோது, வெள்ளி வேலைத் திருடியது விசாரணையில் தெரிய வந்தது.. இறுதியில் சாமியார் வெங்கடேஷ் சர்மா போலீசார் கைது செய்தனர். அந்த வெள்ளி வேல் 2.5 கிலோ உடையது.. அதன் மதிப்பு 4 லட்ச ரூபாய் ஆகும்.
இந்த பரபரப்பு அடங்குவதற்குள் தர்மபுரி மாவட்டத்தில் ஒரு உண்டியல் திருட்டு நடந்துள்ளது.. நல்லம்பள்ளி அருகேயுள்ள சேஷம்பட்டி கிராமத்தில் பெரியாண்டிச்சி கோயில் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் இரவு கோயிலுக்குள் ஒரு மர்மநபர் புகுந்துள்ளார்.. அங்கிருந்த உண்டியல் பணத்தை திருடுவதற்காக சென்றுள்ளார்..
திருடன் - உண்டியல்
இதற்காக உண்டியலில் கையை விட்டு பணத்தை எடுக்க முயன்றபோது, எதிர்பாராதவிதமாக கை உண்டியலில் சிக்கி கொண்டுவிட்டது.. இதை திருடன் எதிர்பார்க்கவேயில்லை.. கையை உண்டியலிலிருந்து வெளியே எடுக்க நீண்டநேரமாக போராடியும் கூட, அவரால் முடியவில்லை.. இதனால், செய்வதறியாமல் விடிய, விடிய உண்டியலில் கை மாட்டிய நிலையிலேயே, அந்த திருடன் விடிய விடிய உட்கார்ந்திருந்தனர்.. பணத்தை திருடயலாம் என்று வந்தவருக்கு, முகமே சோகமாகிவிட்டது.
பிறகு நேற்று காலை அந்த வழியாக சென்ற பொதுமக்கள், உண்டியலுக்குள் கை மாட்டி கொண்ட நிலையில், நபர் உட்கார்ந்திருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் வந்த போலீசார், உண்டியலுக்குள் கம்பியை விட்டு, உண்டியலை நெம்பி, அதற்கு பிறகு திருடனின் கையை வெளியே எடுத்து மீட்டனர்.
சின்ன சின்ன திருட்டு
இறுதியில் திருடனை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.. சம்பந்தப்பட்ட திருடன் பெயர் தங்கராஜ்.. 43 வயதான இவர், நல்லம்பள்ளி பகுதியை சேர்ந்தவர்.. கூலி வேலை செய்து வந்தாலும் பணப்பற்றாக்குறை இருந்து வந்துள்ளது.. அதனால, சின்ன சின்ன திருட்டில் ஈடுபட்டு வந்திருக்கிறார்.. இப்போது கோயிலுக்குள் நுழைந்து மாட்டிக் கொண்டுள்ளார். இவ்வளவும் விசாரணையில் தெரியவந்ததையடுத்து, அவர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார், கைது செய்து ஜெயிலில் அடைத்திருக்கிறார்கள்.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications