தர்மபுரி டூ திருவாரூர் வரை சைக்கிள் பயணம்! திமுக தொண்டரை வழியனுப்பி வைத்த பழனியப்பன்! கருணாநிதி 100!
தர்மபுரி: கருணாநிதி நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை ஒட்டி தர்மபுரி மாவட்டம் அரூரிலிருந்து திருவாரூர் வரை திமுக தொண்டர் ஒருவர் சைக்கிள் பயணம் மேற்கொள்கிறார்.
அவருக்கு புது சைக்கிள் வாங்கிக் கொடுத்த தர்மபுரி மேற்கு மாவட்ட திமுக செயலாளர் பழனியப்பன், பாதுகாப்பாக செல்லுமாறு அறிவுரை நல்கி வழியனுப்பியும் வைத்தார். திமுக தொண்டர் பயணிக்கும் அந்த சைக்கிளில் திமுக அரசின் சாதனைகளை ஒலிக்கவிடும் வகையில் மினி கூம்பு வடிவ குழாய் ஒன்றும் கட்டப்பட்டுள்ளது.

தர்மபுரி மேற்கு மாவட்ட திமுக பிரதிநிதியாக இருப்பவர் சேதுநாதன். கருணாநிதி மீது அளவுகடந்த பற்றும் மரியாதையும் வைத்திருப்பவர். கட்சிக்காக தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்து வருபவர். இவரைப் போன்ற தொண்டர்களால் தான் திமுக இன்னும் எழுச்சியுடன் இருப்பதற்கு காரணம் என்று கூட சொல்லலாம்.
இதனிடையே கருணாநிதி நூற்றாண்டு விழா கொண்டாடப்படும் இவ்வேளையில், திமுக அரசின் சாதனைகளை விளக்கும் வகையிலும் , திருவாரூரில் நடைபெறவுள்ள கலைஞர் அருங்காட்சியகம், கலைஞர் கோட்டம் திறப்பு விழா நிகழ்விலும் கலந்துகொள்ளும் வகையில் தருமபுரி மாவட்டம் அரூரிலிருந்டு திருவாரூர் வரை சைக்கிளில் பயணம் செல்லும் திட்டத்தை மாவட்டச் செயலாளரான பழனியப்பனிடம் சேதுநாதன் சொல்லியிருக்கிறார்.
இதையடுத்து திமுக தொண்டர் சேதுநாதனின் பயணச் செலவுக்கு தேவையான நிதியை கொடுத்து, புது சைக்கிளும் வாங்கிக் கொடுத்து அவரை வழியனுப்பி வைத்திருக்கிறார் பழனியப்பன். இது தொடர்பாக தனது சமூக வலைதளப்பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ள பழனியப்பன் கூறியிருப்பதாவது;

''நம் நெஞ்சமெல்லாம் நிறைந்திருக்கும் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை கொண்டாடும் வகையில் அவரது எண்ணற்ற சாதனைகளை விளக்கும் வகையிலும் அரூர் முதல் திருவாரூர் வரை சைக்கிள் பயணம் மேற்கொள்ள இருக்கும் மாவட்ட பிரதிநிதி அன்பு சகோதரர் சேதுநாதன் அவர்களுக்கு சைக்கிள் வழங்கி சாதனை விளக்க பயணம் சிறப்புடன் அமைய மேற்கு மாவட்டம் சார்பாக வாழ்த்து கூறி சைக்கிள் பயணத்தை கொடி அசைத்து தொடங்கி வைத்தோம்.''












Click it and Unblock the Notifications