தருமபுரி மாமியார்.. "கொட்டாங்குச்சி" மருமகள்.. இவங்கல்லாம் இன்னும் திருந்த மாட்டாங்களா? சபாஷ் போலீஸ்
தர்மபுரி: இன்னும் வேங்கைவயல் விவகாரத்துக்கே ஒரு முடிவும் தெரியவில்லை - விடையும் கிடைக்கவில்லை.. அதுக்குள்ளேயே இன்னொரு தீண்டாமை, தருமபுரியை திணறடித்து வருகிறது.
ஊராட்சி தலைவர்களை தரையில் உட்கார வைக்கும் நிகழ்வு முதல் இன்னும் ஏராளமான சம்பவங்கள் நம் தமிழகத்தில் நடப்பது கவலைக்குரியதாக மாறி உள்ளது. சில மாதங்களுக்கு முன்பு, ஈரோட்டில் அரசு தொடக்கப்பள்ளியில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களை கழிவறையை சுத்தம் செய்ய வைத்து கொடுமைப்படுத்தி உள்ளார் அந்த பள்ளியின் தலைமை ஆசிரியை..

ஆனால், வேங்கைவயல் தொட்டியில் மலம் கலந்துவைத்த கொடூரத்தை கண்டு தமிழகமே உறைந்துபோனது. இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தபோது, புதுக்கோட்டை கலெக்டர் கவிதா ராமு, மாவட்ட எஸ்பி வந்திதா பாண்டே ஆகிய 2 பேருமே ஸ்பாட்டுக்கு வந்தனர்.. வேங்கைவயல் கிராமத்தில் ஆய்வு நடத்தி, மக்களிடம் குறைகளை கேட்டறிந்தனர்.
தேநீர் கடை: அப்போது, வெள்ளனூர் தேநீர்க் கடையில், தலித் மக்களுக்கெனவே, தனி டம்ளரில் டீ கொடுக்கப்படுவதாகவும், அங்குள்ள அய்யனார் கோவிலுக்குள் உள்ளே விடுவதில்லை என்றும் மக்கள் லிஸ்ட் போட்டு குறைகளை சொன்னார்கள். இதையடுத்து, அதிகாரிகளுடன் அந்த டீக்கடைக்கு சென்று பார்த்தால், கண்ணாடி டம்ளர், எவர்சில்வர் டம்ளர்கள் என 2 பிரித்து வைக்கப்பட்டிருந்தது..
அந்த டீக்கடை ஓனர் பெயர் மூக்கையா.. உடனே அவர் மீது நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிட்டார் கலெக்டர். பிறகு, அய்யனார் கோவிலுக்குச் சென்ற கலெக்டர் கவிதா ராமு, கோயிலை நிர்வகிப்பவர்களிடம் யாரையும் சாமி கும்பிட மறுக்கக் கூடாது என்று அறிவுறுத்தினார்.
வேறுபாடுகள்: அதுமட்டுமல்ல, "புதுக்கோட்டை மாவட்டத்தில் கோயில்களில் சாதிய ரீதியாக அனுமதி மறுக்கப்பட்டாலோ, தேநீர் கடைகளில் இரட்டை குவளை முறை பின்பற்றப்பட்டாலோ, முடித்திருத்தங்களில் சாதிய வேறுபாடு காணப்பட்டாலோ, சட்ட ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் எச்சரித்திருந்தார். இந்த நடவடிக்கைகளை விசிக தலைவர் திருமாவளவனும், அப்போதே பாராட்டி வாழ்த்து தெரிவித்திருந்தார்.
ஆனால், வேங்கைவயல் விவகாரத்துக்கு பிறகும் தமிழகத்தில் ஆங்காங்கே வன்மும் நீண்டு வருகிறது.. இதோ, மாமியாரும், மருமகளும் சேர்ந்து இந்த சாதி வன்மத்தை கொட்டி தீர்த்திருக்கிறார்கள்.
2 பெண்கள்: தருமபுரி மாவட்டம் மொரப்பூர் அருகே ஆர்.கோபிநாதம்பட்டியை அடுத்துள்ளது போளையம்பள்ளி என்ற கிராமம்.. இந்த கிராமத்தை சேர்ந்த பட்டியல் சமூக பெண்கள் சிலர், மாரப்பநாயக்கன்பட்டியைச் சேர்ந்த புவனேஸ்வரன் என்பவரது நிலத்தில் விவசாய வேலைக்கு சென்றார்கள்..
அப்போது கூலி வேலைக்கு வந்த பெண்களுக்கு தோட்டத்தின் உரிமையாளர்கள் கொட்டாங்குச்சியில் டீ தந்தாராம்.. அவர்களுக்கு கொட்டாங்குச்சியில் டீ தந்துவிட்டு, தோட்டத்தின் ஓனருக்கு மட்டும் சில்வர் டம்ளரில் டீ தந்திருக்கிறார்கள். இதை அதே கிராமத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்து, சோஷியல் மீடியாவிலும் பதிவிட்டுவிட்டார்.
கைது: இந்த வீடியோ தீயாக பரவியதால் பாதிக்கப்பட்ட செல்லி என்ற 50 வயது பெண், கம்பைநல்லூர் போலீசில் இதுதொடர்பாக புகார் தந்தார்.. இந்த புகாரின் அரூர் போலீஸார் விசாரணையை முன்னெடுத்தவர். கொட்டாங்குச்சியில் டீ தந்தவர் பெயர் தரணி.. இவரது மாமியார் பெயர் சின்னதாயி..
இவர்கள் மீது எஸ்.சி, எஸ்.டி பிரிவின் கீழ் வன்கொடுமை தடுப்பு திருத்த சட்டம் 2015 - ன் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.. இப்போது மாமியாரும், மருமகளும் ஜெயிலில் இருக்கிறார்கள்..!!
அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சியில் நம்முடைய நாடு முன்னேறி சென்றாலும், இரட்டைக்குவளை முறையை முற்றிலுமாக ஒழிக்க முடியவில்லை என்பது வருந்தத்தக்கது.. "சாதி" அதன் இயங்குதலை தீண்டாமை வடிவத்தில் ஆங்காங்கே வெளிப்படுத்தி கொண்டேயிருப்பது அதைவிட வேதனையை தருகிறது..!!
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications