தர்மபுரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தினகரன் குரூப்புக்கு என்னாச்சு.. 9 பேராக சுருங்கிய மாஜி எம்எல்ஏக்கள்.. ஒகேனக்கலில் திடீர் முகாம்

தகுதி நீக்கம் செய்யப்பட்ட 9 எம்எல்ஏக்கள் ஒகேனக்கல்லில் முகாமிட்டுள்ளனர்.

Google Oneindia Tamil News

Recommended Video

    செந்தில் பாலாஜி போனால் என்ன?.. சிட்டிங் எம்எல்ஏவுடன் கெத்து காட்டும் தினகரன்- வீடியோ

    ஒகேனக்கல்: தகுதி நீக்கம் செய்யப்பட்ட டிடிவி தினகரனின் ஆதரவாளர்கள் 9 பேரும் ஒகேனக்கல்லில் முகாமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    அடுத்த நிமிடம் நம் நிலைமை என்னாகும் என்றுகூட தெரியாமல் விழி பிதுங்கி உள்ளனர் அமமுக தரப்பினர். இதற்கு நிறைய காரணங்கள் உள்ளன.

    ஒரு பக்கம் கட்சிக்கு தினகரன் செலவு செய்ய முடியாத நிலையில் நெருக்கடியில் சிக்கி கொண்டுள்ளார் தினகரன்.

    நிதி நெருக்கடி

    நிதி நெருக்கடி

    பசை இருந்தவரும் பறந்து போய்விட, நிதி நெருக்கடியில் ரொம்பவே ஆட்கொண்டுள்ளார்.செந்தில்பாலாஜி திமுகவுக்கு போகபோகிறார் என்ற செய்தி வெளிவர துவங்கியும், கரூர் மாவட்ட அமமுக நிர்வாகிகள் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் தோல்விதான்.

    அரவணைப்பாரா?

    அரவணைப்பாரா?

    கட்சி தாவல் நடக்கபோகிறது, நடந்து வருகிறது, நடந்தும் விட்டதை டிடிவி தினகரனால் எதுவுமே செய்து தடுத்து நிறுத்த முடியவில்லை. ஒரு செந்தில்பாலாஜியையே தினகரனால் தடுக்க முடியாதபோது கூட இருப்பவர்களை எந்த அளவுக்கு தடுத்து அரவணைத்து செல்வார் என தெரியவில்லை.

    வழக்கின் தீர்ப்பு

    வழக்கின் தீர்ப்பு

    18 எம்எல்ஏக்கள் தீர்ப்பின்போது எல்லாரும் கொடைக்கானல் ரிசார்ட்டில் போய் தங்கினார்கள். இதற்கு ஆலோசனை கூட்டம் என்ற காரணம் மேலோட்டமாக ஒரு பக்கம் சொல்லப்பட்டாலும், இருக்கும் 18 பேரும் வழக்கின் தீர்ப்பின் முடிவால் மனம் மாறிவிடக்கூடாது என்பதாலேயே ரிசார்ட்டுக்கு வரவழைக்கப்பட்டதாக இன்னொரு பக்கம் கூறப்பட்டது.

    ஒகேனக்கல்லில் 9 பேர்

    ஒகேனக்கல்லில் 9 பேர்

    இதே நிலைதான் இன்றும் ஏற்பட்டுள்ளது. இப்போது 9 பேர் ஒகேனக்கல் ரிசார்ட்டில் தங்கி உள்ளனர். ஆனால் 18 பேர் என்பது இன்றைக்கு 9 ஆக குறைந்துள்ளது. ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்துள்ள அமமுகவில் ஏன் 9 பேர் மட்டுமே இன்றைக்கு கூடியுள்ளனர் என தெரியவில்லை.

    என்ன ஆனார்கள்

    என்ன ஆனார்கள்

    மற்றவர்கள் என்ன ஆனார்கள்? எங்கேஇருக்கிறார்கள்? ஏன் சசிகலாவை சந்திக்க அவர்கள் பெங்களூரு செல்லவில்லை? ஏன் ஒகேனக்கல்லில் இந்த 9 பேர் மட்டுமே தங்கி இருக்க வேண்டும்? என்பதற்கெல்லாம் பதில் இல்லை.

    நிறைய குழப்பங்கள்

    நிறைய குழப்பங்கள்

    ஆனால் அன்று கூவத்தூர் ரசார்ட் போன எம்எல்ஏக்களுக்கும், பிறகு தகுதி நீக்க வழக்கின்போது கொடைக்கானல் சென்ற எம்எல்ஏக்களுக்கும், இப்போது ஒகேனக்கல்லில் தங்கி இருக்கும் எம்எல்ஏக்களுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது... நிறைய வலிகள் கூடியுள்ளன... நிறைய குழப்பங்களில் சிக்கி உள்ளனர்... எண்ணிக்கையும் குறைந்து உள்ளது.

    கட்சி கரைகிறதா?

    கட்சி கரைகிறதா?

    மொத்தத்தில் கட்சி கூடாரம் காலியாக தொடங்க உள்ளதோ என்றே எண்ண தோன்றுகிறது. சசிகலாவை இவர்கள் 9 பேரும் நேரில் சந்தித்து பேசிவிட்டு வந்த பின்னரே கட்சி கரைகிறதா, வலுக்கிறதா என்று உறுதியாக தெரியவரும்.

    English summary
    9 Disqualified MLAs will meet Sasikala in Bangaluru Jail including Thanga Tamilselvan.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X