Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பெற்றோரின் திருமண நாளை இப்படியும் கொண்டாடலாம்.. ஆசிரியர்களை நெகிழ்ச்சிப்படுத்திய முன்னாள் மாணவிகள்

Subscribe to Oneindia Tamil

தருமபுரி: அரசு பள்ளியில் படித்த முன்னாள் மாணவிகள் தங்கள் பெற்றோரின் திருமண நாளை கொண்டாடும் விதமாக தங்கள் பள்ளிக்கு புத்தகங்களை பரிசளித்துள்ளனர். இச்செயல் ஆசிரியர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாணவர்கள்தான் இந்த நாட்டின் எதிர்காலம் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. இந்த மாணவர்களை ஆசியர்கள்தான் உருவாக்குகின்றனர். ஆனால் சில நேரங்களில் முன்னாள் மாணவர்களும் இப்பணியை தாங்களே முன் வந்து ஏற்றுக்கொள்கின்றனர். அப்படியான நெகிழ்ச்சி சம்பவம்தான் தருமபுரி மாவட்டத்தில் அரங்கேறியுள்ளது.

Former students gifted government schools to celebrate their parents wedding anniversary

இங்குள்ள அவ்வையார் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் மாணவிகளான சுவேதா மற்றும் காவியதர்ஷினி ஆகியோர், தங்கள் பெற்றோரின் 25வது திருமண நாளை சிறப்பாக கொண்டாட திட்டமிட்டுள்ளனர். வழக்கமாக இப்படியான தினங்களில் கோயிலுக்கு செல்வது, அன்னதானம் செய்வது இயல்பு. ஆனால் தங்கள் பெற்றோரின் திருமண நாளை வழக்கத்தை விட சிறப்பாக கொண்டாட இவர்கள் யோசித்தனர்.

அதாவது தாங்கள் படித்த பள்ளிக்கு புத்தகங்களை பரிசளிப்பது என்பதுதான் அந்த யோசனை. இவர்களில் சுவேதா இந்த பள்ளியில் 2010 மற்றும் 2017 க்கு இடையில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்திருக்கிறார். அதேபோல காவியதர்ஷினி, 2012ம் ஆண்டு முதல் 2017ம் ஆண்டு வரை 6 முதல் 10ஆம் வகுப்பு வரை படித்திருக்கிறார்.

இதற்போது சுவேதா ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், இன்று காலை பள்ளிக்கு தங்கள் பெற்றோர்களுடன் வந்த இவர்கள், தலைமை ஆசிரியையை சந்தித்து தங்கள் யோசனையை கூறியுள்ளனர். இந்த விஷயத்தை கேட்ட தலைமை ஆசிரியை பெருமையடைந்துள்ளார். இதை ஓர் நிகழ்ச்சியாக நடத்த திட்டமிட்ட அவர் பள்ளி மாணவிகள் அனைவரையும் ஒருங்கிணைத்துள்ளார்.

Former students gifted government schools to celebrate their parents wedding anniversary

பின்னர் மாணவிகளிடம் பேசிய அவர், "நம் பள்ளியில் பயின்ற மாணவிகள் இருவர், அவர்களின் பெற்றோருடைய திருமண நாளை கொண்டாட புது முயற்சியை முன்னெடுத்துள்ளனர். இதுபோன்ற முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டும். இவர்கள் நம் பள்ளியின் நூலகத்திற்கு புத்தகங்களை பரிசாக கொண்டு வந்துள்ளனர். உண்மையில் இதுதான் அனைவருக்கும் தன்னம்பிக்கை அளிக்கும். புத்தகங்கள்தான் அனைவருக்கும் உற்ற நண்பன். அதுதான் வாழ்க்கைக்கு வழிகாட்டியாக இருக்கும். இவர்கள் படிக்கும்போதும் பெருமை சேர்த்தனர், இப்போதும் சேர்த்திருக்கின்றனர்" என்று கூறினார்.

Former students gifted government schools to celebrate their parents wedding anniversary

மாணவிகளின் பெற்றோர்கள் இருவரும் கடின உழைப்பாளிகள். இந்த உலகில் தங்கள் குழந்தைகளுக்கு பெற்றோர்கள் சேர்த்து வைக்கும் மிகப்பெரிய செல்வம் படிப்புதான். அதை சுவேதா மற்றும் காவியதர்ஷினி பெற்றோர் மிகச் சரியாக செய்துள்ளனர் என்றும் தலைமை ஆசிரியை பெருமையுடன் கூறினார்.
மேலும், இப்பணியை முன்னெடுத்த ஸ்வேதா மற்றும் காவியதர்ஷினிக்கு ஆசிரியர்கள் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்தனர்.

நிகழ்ச்சியில் பேசிய சுவேதாவும், காவியதர்ஷினியும், "மாணவிகள் தங்கள் கனவுகளைப் பின்பற்றவும், கடினமாக உழைக்கவும், எதிர்காலத்தில் தங்கள் சமூகங்களுக்கும் பள்ளிகளுக்கும் திரும்பக் கொடுப்பதைக் கருத்தில் கொண்டு படிக்க வேண்டும்" என்று கூறி தங்களின் தனிப்பட்ட அனுபவங்களையும் பகிர்ந்துக்கொண்டனர். இந்நிகழ்ச்சி மாணவர்களிடையேயும், ஆசிரியர்களிடையேயும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+