காட்டுக்குள் காதல் ஜோடி.. அழுகிய நிலையில் பிணமாக.. யார் தெரியுமா.. டான்ஸர் சோபியாவும், காதலனும்!
அருர் அருகே காதலர்கள் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டனர்
தருமபுரி: காட்டுக்குள் காதல் ஜோடியின் சடலத்தை கண்டு பொதுமக்கள் அலறி அடித்து கொண்டு ஓடினர்.. டான்ஸர் சோபியாவும், அவரது காதலனும் விஷம் அருந்தி இறந்தது தொடர்பாக அரூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்!
தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே மோப்பிரிப்பட்டியை சேர்ந்தவர் சவுரிநாதன்.. இவர் ஒரு கூலி தொழிலாளி.. இவருக்கு 2 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர்.. இதில் ஒருவர்தான் 21 வயது சோபியா. ஒரு தனியார் காலேஜில் பரதநாட்டியம் இறுதி ஆண்டு படித்து வந்தார்.

சோபியாவின் வீட்டின் பக்கத்தில் அவர்களுடைய சொந்தக்காரர் ராஜா என்பவரும் வசித்து வந்துள்ளார்.. ராஜாவின் மகன்களில் ஒருவர் ஆனந்தராஜ். அவருக்கு 22 வயதாகிறது. உறவினர்கள் என்பதால், சோபியாவும், ஆனந்த்ராஜூக்கும் காதல் மலர்ந்துள்ளது.. இந்த விஷயத்தை தங்களது வீட்டிலும் இருவரும் சொல்லி உள்ளனர். அதற்கு இரு தரப்பிலும் சம்மதம் தெரிவித்தனர், இந்த கொரோனா பிரச்சனை முடிந்ததும் கல்யாணம் செய்து வைத்துவிடுவதாக கூறியிருக்கிறார்கள்.
இந்த நிலையில் இன்று காலை அரூர் அரசு ஆஸ்பத்திரி பின்புறம் உள்ள வனப்பகுதியில் ஆனந்தராஜூம், சோபியாவும் பிணமாக விழுந்து கிடந்தனர்.. அவர்கள் பக்கத்தில் விஷ பாட்டில் இருந்தது. அந்த வழியாக சென்றவர்கள் சடலங்களை பார்த்து அலறி அடித்து கொண்டு ஓடினர்.. இதை பற்றின தகவலையும் அவரவர் குடும்பத்தில் தெரியப்படுத்தினர்.
தகவல் கேட்டு 2 தரப்பு பெற்றோருமே கதறி கதறி அழுதனர்.. இதை பற்றி அரூர் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடல்களை மீட்டு போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பி வைத்து விசாரணையும் நடத்தி வருகின்றனரை. இரு வீட்டிலுமே காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவே இல்லை.. இரு குடும்பத்துக்குள்ளும் பிரச்சனைகள் எதுவும் இல்லை.
கொரோனா பிரச்சனை முடிந்ததும் கல்யாணம் செய்து வைப்பதாக சொல்லியும், இவர்கள் ஏன் தற்கொலை செய்து கொண்டனர் என தெரியவில்லை. உடனே திருமணத்தை செய்து வைக்காததால், அவசரப்பட்டு இந்த முடிவை எடுத்திருப்பார்களோ என்று சந்தேகிக்கப்படுகிறது. எனினும் முழு விசாரணை முடிந்த பின்னரே இந்த தற்கொலைக்கான காரணம் தெரியவரும்.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications