“அதான் சிலிண்டர் விலையை குறைப்புலேயே.. தோல்வி பயம் தெரிஞ்சு போச்சே!” மோடி மீது ஸ்டாலின் விமர்சனம்
தருமபுரி: லோக்சபா தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், தேர்தல் பரப்புரைகள் தீவிரமடைந்துள்ளன. தருமபுரியில் பரப்புரையில் ஈடுபட்டிருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "சிலிண்டர் விலையை குறைத்ததிலேயே பிரதமர் மோடி எந்த அளவுக்கு தோல்வி பயத்தில் உள்ளார் என தெரிந்துவிட்டது" என்று விமர்சித்திருக்கிறார்.
கடந்த 2019ம் ஆண்டை போலவே இந்த ஆண்டும் நாடு முழுவதும் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது. தமிழகத்தை பொறுத்த அளவில் வரும் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக 39+1 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. எனவே அரசயில் கட்சிகள் தேர்தல் பரப்புரையில் தீவிரமாக இறங்கியுள்ளன. தமிழ்நாட்டில் திமுக vs அதிமுக vs பாஜக vs நாதக என நான்கு முனை போட்டி நிலவி வருகிறது. திமுகவை பொறுத்த அளவில் 21 தொகுதிகளில் நேரடியாக களமிறங்கியுள்ளது.

இதற்காக திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தீவிரமான பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார். இன்று தருமபுரியில் திமுக வேட்பாளர் மணிக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய ஸ்டாலின், "சிலிண்டர் விலையை குறைத்ததிலேயே பிரதமர் மோடி எந்த அளவுக்கு தோல்வி பயத்தில் உள்ளார் என தெரிந்துவிட்டது" என்று பாஜகவையும், பிரதமர் நரேந்திர மோடியையும் கடுமையாக விமர்சித்திருக்கிறார்.
அவர் பேசியதாவது, "பிரதமர் மோடி அவர்களே, உங்களுடைய 10 ஆண்டுக்கால ஆட்சியின் அடையாளம் என்ன? ரஃபேல் ஊழல், சிஏஜி ஊழல், தேர்தல் பத்திர ஊழல்.. இதற்கெல்லாம் பதில் எங்கே? இதற்கெல்லாம் தேர்தலுக்கு பின் நீங்கள் பதில் சொல்லித்தான் ஆக வேண்டும். 12 ஆண்டுகளாக குஜராத் முதலமைச்சராக இருந்து மாநில உரிமையை பேசிய மோடி, டெல்லிக்கு போய் பிரதமராக ஆனதும், மாநிலங்களை அழிக்க துடியாய் துடிக்கிறார்.
மாநிலங்களுக்கு என எந்த அதிகாரமும் இருக்கக்கூடாது.. மொத்த அதிகாரத்தையும் தனது பாக்கெட்டில் வைத்துக்கொள்ள வேண்டும் என்று சர்வாதிகாரியை போல நினைக்கிறார். பிரதமர் மோடி அவர்களே நீங்கள் எஜமானர்கள் அல்ல.. மக்கள்தான் உங்களுக்கு எஜமானர்கள் என்பதை மறந்துவிடாதீர்கள். நினைவில் கொள்ளுங்கள், நீங்கள் இப்போதும் வாக்கு கேட்க மக்களிடம்தான் வரவேண்டும். சிலிண்டர் விலையை குறைத்ததிலேயே நீங்கள் எப்படிப்பட்ட தோல்வி பயத்தில் இருக்கிறீர்கள் என்பது தெரிந்துவிட்டது.
ஒவ்வொரு ஆண்டும் மகளிர் தினம் வருகிறது. அப்போதெல்லாம் குறைக்காதவர், தேர்தல் வருகிறது என்று இந்த ஆண்டு சிலிண்டர் விலையை குறைத்திருக்கிறார். சிலிண்டர் விலையை ஏற்றியது யார்? இப்போது குறைப்பதாக நாடகம் நடத்தும் அதே மோடிதான். தேர்தல் வந்ததால் பெட்ரோல் டீசல் விலையை குறைக்கிறார். பெட்ரோல் டீசல் விலையை அதிகரித்தது யார்? இந்த விலையை குறைப்பதாக நாடகம் நடத்தும் அதே மோடி தான்.
லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்டு நடத்தை விதிகள் அமலில் இருக்கும் நேரத்தில் 100 நாள் வேலை திட்டத்தின் ஊதியத்தை உயர்த்துவதாக அறிவித்திருக்கிறார். மக்கள் மீது இந்த திடீர் கரிசனம் ஏன்? பிரதமர் மோடி அவ்வளவு இறக்கமும் தாசமும் இருக்கக்கூடியவரா? கிராமப்புற இடத்தில் உள்ள மக்களுக்கு வேலைவாய்ப்பை கொடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் கொண்டு வந்த இந்த திட்டத்தை எதற்காக முடக்கி வைத்திருந்தீர்கள்? காங்கிரஸ் மீது உள்ள வண்ணம் மட்டுமல்ல ஏழை மக்களை வஞ்சிக்க வேண்டும் என்கிற எண்ணமும் தான் இதற்கு காரணம்.
திட்டத்திற்கான நிதி குறைப்பு, 100 நாள் இன்று இருந்த வேலையை 40 நாளாக குறைத்தார்கள், அதற்கு மாறாக காப்பீட்டுகளுக்கு சிவப்பு கம்பளம் விரித்து மோடி அரசு வரவேற்பு அளித்தது. நான் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் இருந்து பார்த்து அதன் பின்னர் 100 நாள் வேலை திட்டத்திற்கான ஊதியத்தை உயர்த்திருக்கிறார்கள். அடேங்கப்பா மக்கள் மேல எவ்ளோ அக்கறை? அவ்வளவு அக்கறை இருப்பவர்கள் தேர்தலுக்கு முன்பு ஏன் இதை செய்யவில்லை? ஏனெனில் இதெல்லாம் கண் துடிப்பு நாடகம்" என்று விமர்சித்துள்ளார்.












Click it and Unblock the Notifications