திடீர் நெஞ்சு வலி.. உடனடியாக மருத்துவமனையில் அட்மிட் ஆன அமைச்சர் அன்பில் மகேஷ்! குவிந்த தொண்டர்கள்!

Subscribe to Oneindia Tamil

தருமபுரி: அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திடீர் உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். காரில் சென்று கொண்டிருக்கும்போது, திடீரென நெஞ்சு வலிப்பது போல் இருப்பதாக கூறியதையடுத்து உடனடியாக அப்பகுதி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தகவல் அறிந்து ஏராளமான திமுகவினர் அங்கு திரண்டனர்.

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, இன்று சேலத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுவிட்டு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெற உள்ள அரசு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சேலத்தை கடந்து தருமபுரி மாவட்டம் வழியாக காரில் பயணித்துக் கொண்டிருந்தார்.

Minister Anbil Mahesh poyyamozhi admitted to hospital due to sudden illness

தருமபுரி மாவட்டம் காரிமங்கலத்தை நெருங்கிய போது அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. நெஞ்சு வலிப்பது போல இருப்பதாக அமைச்சர் அன்பில் மகேஷ் கூறவே, உடனடியாக காரை நிறுத்தி, காரிமங்கலத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அவரை அனுமதித்தனர்.

அங்கு அவருக்கு மருத்துவர்கள் பரிசோதனை மேற்கொண்டதில் அஜீரணக் கோளாறால் உடல் நல பிரச்சனை ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. அதற்காக அவருக்கு அங்கு உடனடியாக முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. முதலுதவி சிகிச்சை முடித்த பின்னர் மருத்துவர்களின் அறிவுறுத்தலின் படி பெங்களூரில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், உணவுத்துறை அமைச்சர் ஆர்.சக்கரபாணி, முன்னாள் அமைச்சர் பழனியப்பன் ஆகியோர், அன்பில் மகேஷ் சிகிச்சை பெற்ற தனியார் மருத்துவமனைக்கு நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.

Minister Anbil Mahesh poyyamozhi admitted to hospital due to sudden illness

அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவல் அறிந்து, அப்பகுதியைச் சேர்ந்த திமுகவினர் உள்ளிட்ட ஏராளமானோர் காரிமங்கலம் தனியார் மருத்துவமனை முன்பு திரண்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, காரில் வந்து ஏறி அங்கிருந்து கிளம்பிய பிறகே அமைச்சர்கள் முதல் தொண்டர்கள் வரை கலைந்து சென்றனர்.

முதலுதவி சிகிச்சைக்குப் அமைச்சர் அன்பில் மகேஷ் பெங்களூரில் உள்ள நாராயாணா ஹிருதாலயா மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்துச் சென்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அங்கு பரிசோதனைக்குப் பிறகு அவர் மீண்டும் கிருஷ்ணகிரிக்குச் செல்லக்கூடும் எனத் தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+