பொறுத்திருங்கள்.. டாக்டர் ராமதாஸ் அறிவிக்கப்போவதுதான் வெற்றி கூட்டணி.. அன்புமணி அதிரடி
பென்னாகரம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிக்கப் போவதுதான் வெற்றிக் கூட்டணியாக இருக்கும் என்று பாமக இளைஞர் அணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். விரைவில் ராமதாஸ் கூட்டணியை அறிவிப்பார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தர்மபுரி மாவட்டம், பென்னாகரத்தில் நடந்த பா.ம.க. தலைவர் ஜி.கே.மணியின் இல்ல விழாவில் அக்கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டார். அப்போது அவர் கூட்டணியை அறிவிக்கும் அதிகாரம் கட்சியின் தலைவர் ராமதாஸுக்குத்தான் உள்ளது, பாமக அறிவிக்கும் கூட்டணியே வெற்றிக் கூட்டணி என்றார்.

மேலும் அவர் கூறியதாவது... தர்மபுரி மாவட்டம் முழுவதும் வரலாறு காணாத வகையில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதை சமாளிக்க அரசும் மாவட்ட நிர்வாகமும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்தை நிறைவேற்றுவதற்கு பா.ம.க.தான் மிக முக்கிய காரணமாக இருந்தது. அதேபோன்று இந்த திட்டத்தையும் நிறைவேற்ற பா.ம.க. தொடர்ந்து போராடும்.
தர்மபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழிற்பேட்டை, நெக்குந்தியில் ராணுவ தளவாட தொழிற்சாலை, மொரப்பூர்-தர்மபுரி ரயில்பாதை இணைப்பு திட்டம் ஆகியவற்றை நிறைவேற்ற அந்தந்த துறைகளை சேர்ந்த அமைச்சர்களை நேரில் சந்தித்து வலியுறுத்தி உள்ளேன்.
நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து பல்வேறு கருத்துக்கள் கூறப்படுகிறது. அண்மையில் கோவையில் நடந்த பா.ம.க. பொதுக்குழுக்கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கு வழங்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ராமதாஸ் விரைவில் அறிவிப்பார். அந்த கூட்டணி வெற்றி கூட்டணியாக அமையும் என்றார் அன்புமணி.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications