நீ பேசி பேசி இழுத்த.. நான் பேசாமலேயே இழுத்தேன்.. பார்த்தியா.. சீமானிடம் கேட்ட பங்காரு அடிகளார்
தருமபுரி: பங்காரு அடிகளாருக்கும் எனக்குமான உறவானது தந்தை- மகனுக்கு உள்ள உறவை போன்றது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் தலைவர் பங்காரு அடிகளார் திடீர் மாரடைப்பால் காலமானதை அடுத்து அவருடைய இறப்பிற்கு பல்வேறு அரசியல் கட்சியினர்
இரங்கல் தெரிவித்தனர்.

அந்த வகையில் தருமபுரியில் நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வு கூட்டம் சீமான் தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த சீமான் பேசுகையில் தமிழகத்தில் எந்த வளர்ச்சியும் ஏற்படவில்லை.
தேர்தல் மட்டும்தான் வந்து செல்கிறது. ஆனால் வளர்ச்சி இல்லை, தமிழக அரசு மகளிருக்கு மாதம் ரூ 1000 கொடுக்கிறீர்கள். இதை எத்தனை மாதம் கொடுப்பீங்க, எங்கள் தாய்மார்கள் விவசாய நிலத்தில் கூலி வேலை செய்கிறார்கள். அவர்களுக்கு ரூ 500 கூலி கொடுக்கிறாங்க. நீங்கள் கொடுக்கும் மாதம் ரூ 1000 என்றால் ஒரு நாளைக்கு ரூ 30 தான் கிடைக்கும். மதம் மனிதர்களால் உருவாக்கப்பட்டது.
ஜாதி, மதம் எதுவும் அண்ட முடியாத பெருநெருப்பாக இன்றைய தலைமுறை உருவாகி வர வேண்டும். ஜாதி, மத போதை ஏறிட்டவனுக்கு அவன் இறந்தாலும் அது போகாது. அரசு விற்றால் நல்ல சாராயம், நாம் விற்றால் கள்ளச்சாராயம், சாராயம் குடித்து இறந்தால், 10 லட்சம் , நாட்டை காப்பாற்றும் வீரன் இறந்தால் கொடுக்க மாட்டார்கள்.
காவிரி விவகாரத்தில் திரைப்படம் தடை செய்யப்படும் என வாட்டால் நாகராஜ் மிரட்டுகிறார். ஆனால் நாங்கள் நினைத்தால் எங்களாலும் தடை செய்ய முடியும். காவிரி பிரச்சினை வந்தால் மட்டும்தான் வாட்டாள் நாகராஜ் வெளியே வருவார். பங்காரு அடிகளார் இறப்பை கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். பேரிழப்புதான். பங்காரு அடிகளாரும் நானும் தந்தை மகனுக்கான உறவு போன்றது. பங்காரு அடிகளாருடன் நான் நெருக்கமாக இருந்தேன். எல்லோரும் கருவறைக்குள் வரலாம் என்ற புரட்சியை உருவாக்கியவர். அய்யாவின் பேரன் அகத்தியன்தான் என்னை கர்ப்பகிரகத்திற்குள் அனுப்பி பூஜை செய்ய வைத்தார்.
ஒரு நாள் எனக்கும் பங்காரு அடிகளாருக்கும் உரையாடலின் போது "டேய் நீ பேசி பேசியே நிறைய இளைஞர்களை உன் பக்கம் இழுத்தே. நான் பேசாமலேயே இழுத்தேன்பார்த்தியாடா" என கேட்டார். நம் இனத்திற்கு ஒரு பெருமை, அடையாளம் என்றுதான் சொல்ல வேண்டும். கட்சி சுற்று பயணம் முடிந்து நேரில் செல்லவுள்ளேன். கல்லூரியில் ஏழை எளியவர்களுக்கெல்லாம் காசு வாங்காமலேயே படிப்பை கொடுத்தார்கள் என்றார் சீமான்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications